Home அரசியல் & சமூகம் தண்ணீர் கேன் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் - சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

தண்ணீர் கேன் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் – சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். முக்கியமாக சென்னை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் பகுதி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்செய்து வருகின்றனர். இதன் காரணமாக நேற்று காலையில் இருந்து தண்ணீர் லாரிகள் இயங்கவில்லை.

வேலை நிறுத்தத்திற்குக் காரணம்

தண்ணீர் கனிமவளம் என்ற பிரிவின் கீழ் வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் எடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். ஆனால், இதுநாள் வரையிலும்  அப்படி எந்தக் கட்டுப்பாடுகளும்  விதிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது தமிழகம் முழுக்க நிலத்தடி நீரை வணிக ரீதியாக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது.

Credit : Scroll.in

தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அனந்த நாராயணன் இது குறித்துப் பேசுகையில், “அடைக்கப்பட்ட குடிநீர் (கேன் வாட்டர்) உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம். அரசாணை 142 – ன் படி அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் குடிநீருக்காக நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதில் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 60% அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போகிறோம்.

அரசாணை 142-ஐ மாற்றம் செய்தோ அல்லது புதிய அரசாணை வெளியிட்டோ குடிநீர் உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

 தண்ணீர் தட்டுப்பாட்டு அபாயம்

அரசாணை 142-க்கு எதிராகவே இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை நம்பித் தான் இந்த நிறுவனங்கள் இருக்கின்றன என்பதால், இந்த நிறுவனங்கள் எல்லாம் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் தமிழகம் முழுவதும் கேன் – வாட்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் லாரி வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து கேன் வாட்டர் உற்பத்தி நிறுத்தப்பட்டு, தண்ணீர் விநியோகமும்  நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகள், வீடுகள், நிறுவனங்கள் இந்த கேன் தண்ணீரை நம்பித் தான்இருக்கின்றன. கிட்டத்தட்ட சென்னையில் 95 சதவிகித மக்கள் இந்த கேன் தண்ணீரைத் தான் பயன்படுத்துகின்றனர். இவர்கள் எல்லாம் இந்த வேலை நிறுத்தம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அதேபோல் விடுதிகளில்  வசிக்கும் இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Must Read

இயற்கை பாதுகாப்பு புகைப்பட விருதுகள் 2019: விருதுகள் வென்ற சிறந்த பிரமிப்பூட்டும் புகைப்படங்கள்

0
புகைப்படம் எடுப்பதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் NeoTamil -ன் புகைப்படங்களுக்கான தனிப்பக்கத்தை அவ்வப்போது பார்க்க மறக்காதீர்கள். நாங்கள் அடிக்கடி பதிவிடும் புகைப்படங்கள் உங்களுக்கு நிச்சயம் புகைப்படக்கலையில் வேறு கோணத்தை காட்டும்...