2018 ஆம் ஆண்டில் இறுதி நாளில் நின்று கொண்டிருக்கிறோம். நாளை புது ஆண்டு நமக்காகக் காத்திருக்கிறது. இதைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. பலூன் மற்றும் பாப்கான்களைத் தூவிக்கொள்ளும் இரு யானைகள் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொண்டாட்டங்கள்
உலகம் முழுவதும் நாளைய சூரிய உதயத்திற்காக ஏராளமான காத்திருக்கின்றனர். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு முறையில் புத்தாண்டை வரவேற்கின்றனர். எல்லா நாடுகளிலும் ஒன்று மட்டும் பொதுவாக இருக்கிறது. வேறென்ன மது தான்.
எகிப்தில் வித்தியாசமாக கண்ணாடி பாட்டில்களை உடைத்து புது வருடத்தினை வரவேற்கின்றனர்.
அல்ஜீரியாவில் குழந்தைகள் தங்களது கைகளால் செய்யப்பட்ட வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்கின்றனர்.
நைஜீரியாவில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சுமார் 1 லட்சம் மக்கள் கூடி பாடல், நடனம் என இரவினைக் கழிப்பார்கள்.
பிரேசிலின் கடற்கரையில் கூடும் மக்கள் அனைவரும் வெள்ளைநிற உடைகளை அணிந்து ஷேம்பைன் அருந்துவார்கள்.
சிலி மக்கள் மஞ்சள் நிற கால்சராய் அணிந்து பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொள்வார்கள்.
முதல் உதயம்
புத்தாண்டினை முதன்முதலில் வரவேற்பது கிரிபாடி, சாமோ தீவுகள் தான். காரணம் அதன் பூலோக அமைவிடம். அதாவது புதிய ஆண்டின் முதல் சூரிய உதயத்தினைப் பார்ப்பது அவர்கள் தான்.
இந்தியாவின் பல இடங்களும் இன்று இரவுக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன. பிறக்கும் ஆண்டு எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும் ஆண்டாக அமையட்டும்.