[தமிழ்நாடு அரசு 2021]: வெளியானது தமிழக அமைச்சரவை பட்டியல்: முழு விவரம்!

Date:

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து நாளைய பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பொறுப்பேற்கும் ஸ்டாலினுடன் இடம் பெறப்போகும் அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 2 பெண்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

திரு. மு.க. ஸ்டாலின்: முதலமைச்சர் பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி மற்றம் அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சிறப்பு முயற்சி, சிறப்பு திட்டம் செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலம்

திரு. துரைமுருகன்: நீர்வளத்துறை அமைச்சர் சிறு பாசனம், உள்ளிட்ட பாசன திட்டம், மாநில சட்டமன்றம் ஆளுநர் மற்றும் அமைச்சரவை தேர்தல்கள் மற்றும் கடவுச் சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்

திரு. கே. என். நேரு: நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நகராட்சி நிர்வாகம் நகர்ப்பகுதி குடிநீர் வழங்கல்

திரு. ஈ. பெரியசாமி: கூட்டுறவுத்துறை அமைச்சர் கூட்டுறவு புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலம்

திரு. கா. பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சர் உயர் கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல்

திரு. ஏ.வா. வேலு: பொதுப்பணித்துறை அமைச்சர் பொதுப்பணிகள் கட்டிடங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்

திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: வேளாண்துறை அமைச்சர் வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்பு தீர்வை, கரும்பு பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு

திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்: வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள் பேரிடர் மேலாண்மை

திரு. தங்கம் தென்னரசு: தொழில்துறை அமைச்சர் தொழில்துறை தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ் பண்பாட்டு துறை தொல்பொருள்

திரு. எஸ். ரகுபதி: சட்டத்துறை அமைச்சர் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டம்

திரு. சு. முத்துசாமி: வீட்டுவசதித்துறை அமைச்சர் வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்பு திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இட வசதி கட்டுப்பாடு, நகரத் திட்டமிடல், நகர் பகுதி வளர்ச்சி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்

திரு. கே.ஆர். பெரிய கருப்பன்: ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரக கடன்கள்

திரு. தா. மோ. அன்பரசன்: ஊரகத் தொழில் துறை அமைச்சர் ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்

திரு. மு. பெ. சாமிநாதன்: செய்தித்துறை அமைச்சர் செய்தி மற்றும் விளம்பரம் திரைப்படத் தொழில், நுட்பவியல் மற்றும் திரைப்பட சட்டம், பத்திரிகை அச்சு காகித கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்

திருமதி பி. கீதாஜீவன்: சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லம் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்

திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்: மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக்கழகம் கால்நடை பராமரிப்பு

திரு. ராமச்சந்திரன்: வனத்துறை அமைச்சர் வனம்

திரு. அர. சக்கரபாணி: உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு

திரு. வி. செந்தில் பாலாஜி: மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு, மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ் சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)

திரு. ஆர். காந்தி: கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் பூதானம் மற்றும் கிராம தானம்

திரு. மா. சுப்ரமணியன்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

திரு. பி. மூர்த்தி: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் வணிகவரி, பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு

திரு. எஸ். எஸ். சிவகுமார்: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பிற்படுத்தப்பட்டோர் நலன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன்

திரு. பி.கே. சேகர்பாபு: இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்

திரு. பழனிவேல் தியாகராஜன்: நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை  நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள்

திரு. சாமு. நாசர்: பால்வளத்துறை அமைச்சர் பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சி

திரு. செஞ்சி கே. எஸ். மஸ்தான்: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சிறுபான்மையினர் நலம், வெளிநாடு வாழ் தமிழர் நலம், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்

திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக் கல்வி

திரு. சிவ. வீ. மெய்யநாதன்: சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

திரு. சி. வி. கணேசன்: தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு

திரு. தா. மனோ தங்கராஜ்: தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தகவல் தொழில்நுட்பத் துறை

திரு. மா. மதிவேந்தன்: சுற்றுலாத்துறை அமைச்சர் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம்

திருமதி என். கயல்விழி செல்வராஜ்: ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!