இந்தியாவில் இப்படியும் ஒரு சட்டமா?

Date:

மத்திய மாநில அரசு ஊழியர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தன்னாட்சி அமைப்பே லோக்பால் (மத்திய அரசு) மற்றும் லோக் ஆயுக்தா (மாநில அரசு) ஆகும். 2013 ஆம் லோக்பால்/ஆயுக்தா சட்டம் இயற்றப்பட்டு கடந்த மார்ச் 19 ஆம் தேதியில் தான் முதல் லோக்பால் தவைவராக நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டார். கோஷ் அவர்களை பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட வேறு நீதிபதி மற்றும் சமுதாயத்தில் நல்ல மதிப்புமிக்க நபர் ஒருவர் (jury) ஆகியோரை உள்ளடக்கிய கமிட்டி தேர்வு செய்தது. லோக்பாலை நியமிக்கும் கமிட்டி உறுப்பினர்கள் சந்திப்பானது அதன் உறுப்பினர்களின் வேலைப்பளு காரணமாக பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட திரு.மல்லிகார்ஜுன் கார்ஜே, தனக்கு சிறப்பு உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டதற்காக எதிர்ப்பு தெரிவித்தும் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து கோரியும் பலமுறை  கமிட்டியின் சந்திப்பு நடக்காகததற்கு காரணமானவர் ஆவார். பின்னர் உச்சநீதிமன்றம் தலையிட்டு  லோக்பாலை தேர்வு செய்ய கமிட்டிக்கு  கெடுவைத்தது.

lokpal
Credit: Total Tv

தற்போது  அதன் சேர்மேன் மற்றும் உறுப்பினர்கள்  எட்டு பேராக மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். லேக்பாலை அரசோடு இணைப்பதற்கு, மத்திய மாநில அரசகளில் ஒவ்வொரு துறையிலும் ஒரு செயலாளர்கள் இருப்பது போல இதற்கும் செயலாளர்கள் உண்டு. ஆனால் அவரை தேர்வு செய்யும் உரிமையும் லோக்பாலுக்கே உண்டு.  தனது கட்டுப்பாட்டின் கீழே ஊழல் முறைகேடுகளை விசாரிக்கும் விசாரணை குழுவும் (inquiry wing), தண்டனை வழங்கும் prosecution wing ம் மற்றும் அதன் அதிகாரிகள் போன்றோர் இன்னும் முழுமையாக  நியமிக்கப்படவில்லை. அதுவரை மத்திய அரசு பரிந்துரைக்கும் நபர்களைக்கொண்டு லேக்பால் இயங்கும். சரி, அதனுடைய செயல்பாடுகளுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

யாரையெல்லாம் விசாரிக்கும் லோக்பால்?

பிரதமர், பிரதமர் அலுவலகம், மத்திய  அமைச்சர்கள்,  அமைச்சரவை அதிகாரிகள்,  மத்திய அரசின் முதல் நிலை ஊழியர்கள் (A,B), கடைநிலை ஊழியர்கள் (C,D), இந்திய அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்ட அனைத்து சுய அதிகாரம் கொண்ட அமைப்புக்கள்I, மத்திய அரசின் நிதி பெறும் நிறுவனங்கள் என அனைவருமே லோக்பாலின் முஷ்டிக்குள் அடக்கம். மேலும், பத்து லட்சத்திற்கும் அதிகமாக வெளிநாட்டு நிதி பெறும் தனியார் தொண்டு நிறுவனங்களும் லோக்பாலுக்கு கட்டுப்பட்டவை.

lokpaljpg
Credit: The Hindu Business Line

பிரதமரை எப்படி விசாரிக்கும்?

பிரதமர் மீதான சர்வதேச ஊழல் புகார்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான புகார்கள், சட்டம் ஒழுங்கு புகார்கள், அணு ஆயுத மற்றும் விண்வெளித் துறை தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றை தனது மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் முழு ஆதரவு இல்லாமல் லோக்பால் விசாரணை செய்ய முடியாது. பிரதமர் மீதான குற்ற முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்படும். விசாரணை  நிறுத்தப்பட்டாலோ, புகாரானது திரும்பப் பெறப்பட்டாலோ அந்த ஆவணங்கள்  அதீத ரகசியமாக வைக்கப்படும். யாரும் அதை அணுக முடியாது.

புகார்கள் மற்றும் செய்லபாடுகள்

மேற்கண்டவர்கள் மீதான புகார்களை  மின்னஞ்சலாகவோ தபால் மூலமாகவோ யார் வேண்டுமானாலும் லோக்பாலுக்கு  அனுப்ப இயலும். அப்புகார்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு குறிப்பிட்ட அதிகாரிக்கு சம்மன் அணுப்பப்படும். அவர் மீதான புகாரில்  முகாந்திரம் இருப்பின், CBI மற்றும்  CVC central vigilance commission) போன்ற ஏஜென்சிகளை முதற்கட்டமாக  விசாரிக்க லோக்பால் கட்டளையிடும். அல்லது தானே (lokpal inquiry wing) முன்வந்தும்  விசாரிக்கும். ஏஜென்சிகளின் தனித்தன்மையை  உறுதிசெய்ய,  அவை ஏற்கனவே விசாரிக்கும் வழக்குகளில் தலையிட லோக்பாலுக்கு அனுமதியில்லை. உயர்நிலை ஊழியர்கள் (A,B)  என்றால் அறிக்கையை லோக்பாலுக்கும், கடைநிலை ஊழியர்கள் (C,D) என்றால் மேற்க்கொண்டு தனது அதிகாரத்தை தொடரவும்  ஏஜென்சிகளுக்கு நிபந்தனை விதிக்கப்படும்.

supreme-court_reuters
Credit: The Wire

விசாரணை எப்படி நடக்கும்?

விசாரணைக் குழுவோ அல்லது பிற ஏஜென்சியானவையோ தனது முதற்கட்ட விசாரணையை 60 நாட்களுக்குள் முடித்து அறிக்கையை லோக்பாலிடம் சமர்ப்பிக்க வேண்டும். (அதிகபட்சம் 90 நாட்கள்). பின்னர் குறிப்பிட்ட நபருக்கும் அவருடைய துறைக்கும் சம்மன் அனுப்பபட்டு கருத்துக்கள் கேட்கப்படும். உதாரணமாக, குற்றம் சாட்டப்பட்ட நபர் பிரதமர் என்றால் லோக்சபாவிற்கும், மந்திரிகள் என்றால் பிரதமருக்கும், அதிகாரிகள் என்றால் அவர் சார்ந்த மந்திரிசபைக்கும்  சம்மன் அனுப்பப்படும். மூன்று உறுப்பினர்களுக்கு குறையாமல் விசாரணை அறிக்கையை லோக்பால் ஏற்றுக்கொள்ளும். விசாரணைக்கும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்பட்ட பிறகு, விசாரணையை தொடரவும் அல்லது துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உத்தரவிடவும் அல்லது விசாரணையை முடித்துவைக்கவும் லோக்பால் உத்தரவிடும். குறிப்பாக புகாரில் சிக்கிய நபரை  பணிநீக்கமும் மீண்டும்  பணிநியமனமும் செய்யவல்லது லோக்பால்.

அதிகாரிகள் கவனத்திற்கு

லோக்பால்  செயல்பாட்டுக்கு வரும் வேலையில் அனைத்து அரசு ஊழியர்களும் தனது சொத்து விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டியிருக்கும். மறந்துவிட்ட அல்லது மறைக்கப்பட்ட எதுவுமே ஊழல் மற்றும் லஞ்சமாகவே கருதப்படும். மாநில அரசுகள் தன்னை விசாரிக்க மேற்கண்ட விதிமுறைகளுள் சிறிய மாற்றங்களோடு லோக் ஆயுக்தா வை ஏற்படுத்திக் கொள்ளும். உதாரணமாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஊழல்களை ஆயுக்தா தோண்டி எழுப்ப முடியாது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!