குல்பூஷன் ஜாதவ் யார்? உளவாளிகளின் வாழ்க்கை எப்படியிருக்கும்?

Date:

இந்திய மக்கள் மற்றும் உலக அமைதி விரும்பிகளின் வேண்டுதலின் படி வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் அவர்கள் தாயகம் திரும்பியுள்ளார். எனினும் இதன்மூலம் இந்தியா பாக்கிஸ்தான் மத்தியில் சமரசம் ஏற்படுமா? என்றால் அதற்கு வாய்ப்பு குறைவுதான். ஏனெனில் அபிநந்தனைப் போன்றே இன்னொரு இந்தியக் குடிமகனை பாக். ராணுவத்தின் வசமிடமிருந்து நாம் மீட்டெடுக்க வேண்டும். அவர்தான் முன்னால் கப்பற்படையின் கமாண்டர் குல்பூஷன் சுதிர் ஜாதவ்.

kulbhushan_jadhav
Credit: League of India

யார் இந்த ஜாதவ்?

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காகக் காத்திருக்கும் இவர் இந்தியக் கப்பற்படை யின் முன்னால் கமாண்டராகப் பணியாற்றியவர்‌. 2001 ஆம் ஆண்டில் (முன்கூட்டியே) பணியிலிருந்து விலகிய இவர் ஈரான் மற்றும் பாகிஸ்தானில் scrap டீலராக தொழில்புரிந்து வந்தார். இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 3 தேதி பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். உளவு பார்த்தல், நாசவேலைகளில் ஈடுபடுதல், பேரழிவை ஏற்படுத்துதல் போன்ற  வழக்கில் அவருக்கு பாக்கிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியதை எதிர்த்து, இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது‌. சர்வதேச நீதிமன்றம் பாக்கிஸ்தான் நீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்து தற்போது வரை விசாரணை நடத்தி வருகின்றது.

என்ன குற்றம் செய்தார்?

பாகிஸ்தான் கூற்றுப்படி, உலகத்தின் சக்திவாய்ந்த உளவுப் படைகளில் ஒன்றான இந்திய உளவுத்துறையின் (RAW) கட்டளைப்படி பாகிஸ்தானின் ராணுவ ரகசியங்களைத் திருடவும், அங்குள்ள பலூசிஸ்தான் மாநிலத்தில் உள்ள கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதற்கும் அனுப்பப்பட்டவரே இந்த குல்பூஷன் ஜாதவ்‌. 2001 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பிற்கு (ஜெய்ஸ் ஈ முகமது) பிறகு RAW தனது உளவாளிகளை பாகிஸ்தானுக்கு அனுப்பி பாக். ராணுவத்தின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பித்தது‌. அதன்படி, இந்திய நேவல் கமாண்டர் குல்பூஷன் ஜாதவ் “ரா” (RAW) மூலம் பயிற்றுவிக்கப்பட்டு 2003-ல் ஹீசைன் முபாரக் படேல் என்ற பெயரில் ஈராரனுக்கு  அனுப்பப்பட்டார். அங்கு, அப்போது கட்டுமானத்தில் இருந்த சப்பார் துறைமுகத்தில் பணியில் சேர்ந்து, 2013 முதல்  அவ்வப்போது ரகசியமாக பாக்கிஸ்தானுக்கு பயணித்து உளவு பார்த்து வந்திருக்கிறார். அவ்வாறு பலூசிஸ்தானுக்கு (2016) வருகை புரிந்த போது தங்களுக்கு கிடைத்த உளவுத்துறை தகவல் மூலம் கையும் களவுமாகப் பிடிபட்டார். பல மாதங்கள் நடந்த விசாரணையின் போது “தான் ஒரு ரா உளவாளி என்றும் பலூசிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு உதவவும் சீனா – பாக் பொருளாதார சந்தியை (China Pakistan economic corridor) சீர்குலைக்கப் போவதாகவும் ஒப்புக்கொண்டார்”. மேலும் அவர் கூறிய தகவல்படி நூற்றுக்கணக்கான ரா உளவாளிகளை களையெடுத்ததாகவும் பாக்கிஸ்தான் அரசு தெரிவித்தது.

kulbushan spy
Credit: Deccan Herald

பாக்கிஸ்தானிடம் உள்ள ஆதாரம் என்ன?

பாக்கிஸ்தானின் ISI அறிக்கையின்படி ஜாதவ் தற்போது வரை நேவல் கமாண்டர் தான். ஈரானிடம் அதிக நல்லுறவு வைத்துள்ள பாக் , ஈரானிடமிருந்து ஜாதவ் பற்றிய தகவல்களைக் கேட்டுள்ளது. ஈரானும் ஜாதவ் பற்றி மழுப்பலான விசாரனையை நடத்திவருகிறது. ஜாதவின் புது அடையாளமாக அவர் இஸ்லாத்தை தழுவியது முதல் அவருடைய புதிய பாஸ்போர்ட் என ஒன்றிரண்டு ஆதாரங்களை பாக்  வைத்துள்ளது. மேலும் விசாரணையின் போது ஜாதவ் கொடுத்த வாக்குமூலம் என வீடியோ ஒன்றறையும் இடைவிடாது ஒளிபரப்பி வருகிறது.

இந்தியாவின் கருத்து

மேற்கண்ட பாக்கிஸ்தானின் கூற்றுக்களை ஒட்டுமொத்தமாக மறுக்கும் இந்தியா, அவருக்கும் இந்திய உளவுப் படைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் அவர் தனது பணிநிறைவிற்கு இரண்டாண்டுகள் முன்னரே ஓய்வு பெற்றவர் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட வீடியோவையும் சித்தரிக்கப்பட்டதாகவும் கூறிவருகிறது. சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும் என்ற விருப்பத்தின் படியே அவர் ஈரானுக்கு சென்றதாகவும், அப்படியிருக்க அவரை இந்திய அரசோடு தொடர்புப்படுத்துவது முழுக்கமுழுக்க இந்தியா மீதான காழ்ப்புணர்ச்சியையே காட்டுவதாக இந்தியா கூறிவருகிறது. இந்திய அரசின் கூற்றுப்படி, ஈரானிலிருந்து ஜாதவை பாக். ராணுவம் தனது ரகசிய ஏஜென்சி மூலம் கடத்திச்சென்றுள்ளது. இது குறித்து இந்தியாவும் ஈரானுடன் ஜாதவ் பற்றி பேச்சுவாரத்தையில்  ஈடுபட்டு வருகிறது. ஈரானோ “ இந்தியா பாக்கிஸ்தான் இரண்டுமே எங்களுக்கு நெருங்கிய நட்பு நாடுகள்” என்று கூறியதோடு நிறுத்திக் கொண்டது.

வியட்நாம் ஒப்பந்தம் விதி 36 ன்படி கைது செய்யப்பட்ட வேறு நாட்டு குடிமக்களுக்கு தூதரக உதவி அவசியம் செய்து தரவேண்டும்.

பாக்கிஸ்தானின் கோபம்

இந்தியவின் உளவாளிகள் பாகிஸ்தானில் உளவுபார்ப்பதற்கு Operation kahuta போன்றவற்றை உதாரணமாகக் காட்டுகிறது பாகிஸ்தான். 1973 ஆம் ஆண்டு இந்திய உளவாளி என்று கருதி கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் கடும் சிறைத்தண்டனை பெற்றவர் பஞ்சாபைச் சேர்ந்த காஷ்மீர் சிங் என்பவர். 2008 ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் ஜனாதிபதி பெர்வஷ் முஷரஃப் பின் கருணையால் விடுதலைப் பெற்ற திரு காஷ்மீர் சிங் தனது சிறைக் காலம் முழுவதும் “மே பேகுனாப் சார்” என்றே புலம்பியுள்ளார்.  இந்தியாவில் ராஜ வரவேற்பு பெற்ற இவர் தாய் மண்ணை மிதித்தவுடன் “ நான் ஒரு ரா உளவாளி எனவும், 35 ஆண்டுகள் பாக். ராணுவத்தால் தன்னிடம் இருந்து எதையும் கறக்க முடியவில்லை” எனக்கூறி ISI (பாக் உளவுப்பிரிவு) ஐ அதிரச்செய்தார்.  அவருடைய சிறைவாசத்தின் போது 40 இந்தியர்கள் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டிருநததாக தெரிவித்திருந்தார். உளவாளிகளைப் பொறுத்தமட்டில் எதிரியிடம் மாட்டும் வரையே அவர்கள் இந்தியர். மாட்டிக்கொண்டால் இந்திய அரசு  கைவிரித்து விடும். உளவுகுறித்து பயிற்சி அளிக்கும்போதே மாட்டிக்கொண்டால் அரசு எந்தவொரு உதவியும் செய்யாது என்று உணர்த்திய பின்னரே பயிற்சி ஆரம்பிக்கும். எல்லாம் உணர்ந்தே உளவாளிகள் முழுமனதோடு எதிரி நாட்டுக்குச் செல்வர். அகப்பட்டுக்கொண்டால் மனதில் நாட்டுப்பற்றை மட்டுமே வைத்துக்கொண்டு எஞ்சிய காலத்தைக் கழிக்க வேண்டியதுதான். 77 வயதில் நாடு திரும்பிய காஷ்மீர் சிங் இன்னும் தாய்நாட்டிற்கு சேவை செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.

kulbushan
Credit: Rebuplic TV

இந்தியாவின் வாதம்

இந்திய அரசு, பாக் சிறையில் தவிக்கும் ஜாதவ் அவர்களுக்கு சட்ட உதவிகள் வழங்கவும் அவருடைய தாய் மற்றும் மனைவியரை சந்திக்கவும் அனுமதி கோரியது. வியட்நாம் ஒப்பந்தம் விதி 36 ன்படி கைது செய்யப்பட்ட வேறு நாட்டு குடிமக்களுக்கு தூதரக உதவி அவசியம் செய்து தரவேண்டும். ஆனால் ஜாதவ் குடும்பத்தினருக்கு மட்டும் விசா வழங்கிய பாக் அரசு, அவரிடம் இருந்து ரகசிய தகவல்களை பெற்றுச்சென்றுவிடக்கூடும் என்று கருதி தூதரக அதிகாரிகளின் உதவியை மறுத்துவிட்டது. அரசு அவருக்கு தூதரக உதவி தரப்படவேண்டும் எனவும் பாக்கிஸ்தானின் பாரபட்ச தீர்ப்பைத் தள்ளுபடி செய்துவிடும்படியும் வாதாடி வருகிறது. அவரை விடுதலை செய்ய முடியாவிடில் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மட்டுமாவது விலக்கி தூதரக உதவி பெற்றுத்தர இந்தியா முனைகிறது.

நம்பிக்கை நாயகன்

நியூசிலாந்து நாட்டில் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்த வழக்கானது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா சார்பாக வாதாடுபவர் திரு.ஹரிஷ் சல்வ் ஆவார்.  அம்பானி, லலித்மோடி, சுனில் லம்பா, ரட்டன் டாட்டா, சல்மான் கான், முலாயம் சிங் யாதவ் போன்ற பெரும் புள்ளிகளுக்கு மட்டுமே வாதாடி வெற்றி ஒன்றையே தேடித்தந்த இவர் அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் ஊதியம் பெறுபவர்.  ஆனால், ஜாதவ் வழக்கில்  வெறும் 1 ரூபாய் மட்டுமே ஊதியமாக பெருகிறார்.

ravinder kaushik
Credit: MensXP.com

தாய் நாட்டிற்காக உளவு பார்க்கச் சென்ற உளவாளிகள் பலருள் திரு ரவீந்திர கௌசிக் என்பவர் முக்கியமானவர் ஆவார். நாடகக் கலைஞராக இருந்து தேசப்பற்று கொண்டு உளவாளியாக மாறியவர் நமது கொளசிக். நபி அகமது ஷகீர் என்ற பெயரில் பாக்கிஸ்தான் சென்று, கராச்சியில் உள்ள கல்லூரியில் சட்டம் பயின்று அந்த நாட்டின் ராணுவத்திலேயே வேலைக்குச் சேர்ந்தார். மேஜராக பதவி உயர்வும் பெற்றதோடு, ராணுவ டெய்லர் ஒருவரின் மகளை திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு உதவும்படி “ ரா”வால் அனுப்பப்பட்ட இன்யாட் மசியா என்ற மற்றொரு உளவாளி பாக். வசம் மாட்டிக்கொள்ளவே கௌசிக்கின் உண்மை முகம் வெளிப்பட்டது. சிறைத்தண்டனையின் போது உச்சகட்ட சித்ரவதையினால் டியூபர்குலோசிஸ் மற்றும் இதயநோய்களால் தாக்கப்பட்டு சிறையிலேயே மரணமடைந்தார். அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி சவான் அவர்களால் “கருப்பு புலி “ என்று போற்றப்பட்டார். ஆனாலும் இவர் இறக்கும்வரை இந்திய அரசு அவரை உளவாளியாக ஒத்துக்கொள்ளவில்லை. ஒத்துக்கொள்ளவும் முடியாது. இந்த தியாகியின் கதை “ஏக் தா டைகர் “ என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. அவரது ஏழ்மை குடும்பமோ அந்தப் படத்தில் “ரவீந்திரனுக்கு சமர்ப்பணம்“  என்று போடும்படி குமுறிக்கொண்டே இருந்தது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!