இந்த நாட்டின் பாஸ்போர்ட் இருந்தால் போதும் 190 நாடுகளுக்கு விசா எடுக்கத் தேவையில்லை

Date:

வெளிநாட்டிற்குச் செல்லும் போது தாய்நாட்டிலிருந்து கொடுக்கப்படும் அடையாள அட்டையே பாஸ்போர்ட் ஆகும். ஒவ்வொரு நாடும் வித்தியாசமான நிறங்களில் தம் மக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குகிறது. நாம் செல்லும் அயல்நாடு நம் வருகையை அங்கீகரிக்கும் விதமாக விசா அளிக்கிறது. இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். வலிமையான பாஸ்போர்ட் கொண்ட நாடுகளைக் கொண்ட பட்டியலில் சிங்கப்பூரை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி ஜப்பான் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது.

powerfull passport
Credit: Traveller

வலிமையான பாஸ்போர்ட்

சர்வதேச விமான போக்குவரத்துக் கழகம் அளிக்கும் தரவுகளின் படி Henley Passport Index என்னும் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உலகளவில் பயணிகள் எளிதாக செல்லக்கூடிய நாடுகள் மற்றும் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிக நாடுகளுக்கு இலவசமாக மற்றும் எளிதில் கிடைக்ககூடிய விசாவினைப் பெற்றிருக்கிறார்கள் என்ற தகவல்களை வழங்கி வருகிறது. அதன்படி ஜப்பான் பாஸ்போர்ட்டைக் கொண்ட ஒருவர் 190 நாடுகளுக்கு விசா எடுக்காமல் பயணம் செய்யலாம் என்று அறிவித்திருக்கிறது இந்த அமைப்பு. (சில நாடுகள் ஜப்பானைச் சேர்ந்த பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே விசா வழங்கி விடுகின்றன.) 189 நாடுகளுடன் சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் முதல் இடத்தைப் பிடித்திருந்த ஜெர்மனி தற்போது மூன்றாம் இடத்தில் உள்ளது. பிரான்ஸ், தென்கொரியா மற்றும் ஜெர்மனி மூன்றாம் இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. தீவிரவாத அச்சுறுத்தல்களால் புதிய சட்டங்களை இயற்றிய அமேரிக்கா ஐந்தாம் இடத்தில் உள்ளது.

different passport
Credit: Traveller

எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது ?

நட்புணர்வு, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு, பாதுகாப்பு போன்ற காரணிகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு விசா கேடுபிடியை சில நாடுகள் தளர்த்திக் கொள்ளும். இதையே Henley Passport Index வரிசைப்படுத்தியிருக்கிறது. சில முன்னேறிய நாடுகள் கூட இதில் பின்தங்கியிருக்கின்றன. உதாரணமாக ரஷியா 47 – ஆம் இடத்தில் உள்ளது. சீனா 71 – ஆம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

அறிந்து தெளிக !!
இந்தியாவிற்கு Henley Passport Index அளித்த ரேங்க் – 76

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!