ஐரோப்பிய யூனியனுக்கான தேர்தல் கடந்த 23 முதல் 26ஆம் தேதி வரை நடந்தன. இதில் 28 நாடுகளைச் சேர்ந்த 10 கூட்டணிகள் இந்த தேர்தலில் போட்டியை சந்தித்தன. இடது மைய வாதிகள் மற்றும் வலது மைய வாதிகள் இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்கள். மாறாக பசுமை வாதிகள் மற்றும் தாராளவாதிகள் பெருமளவு வரவேற்பறை மக்கள் இடம் பெற்றுள்ளனர். சரி, எங்கோ நடக்கும் ஐரோப்பிய தேர்தலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அந்த தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கிராம மக்களும் வாக்களித்திருககின்றனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஏனாம் என்னும் சிறிய நகரம். பிரான்ஸ் ஆதிக்கத்திற்கு உட்பட்ட இந்திய நிலப்பகுதியில் ஏனாமும் ஒன்றாக இருந்தது. பிரான்சிடமிருந்து 1954 ஆம் ஆண்டு அனைத்து பிரெஞ்சு பகுதிகளும் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டன. அப்போது ஏனாம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான மாகே, காரைக்கால் ஆகிய பகுதிகள் புதுவை யூனியன் பிரதேச ஆளுமைக்கு உட்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டன. ஏனாம் பகுதியில் சுமார் 32 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனர். இதில் பலர் பிரெஞ்சு குடியுரிமையையும் பெற்றிருக்கின்றனர். இதன் காரணமாக ஐரோப்பிய யூனியன் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ளவர்களில் 80 பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதி உடையவர்கள்.

புதுச்சேரி மற்றும் சென்னையில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகங்களில் இந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்து தரப்படுகின்றன. மேலும் வாக்களிக்க அனைவரும் நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் என்பதும் இங்கே இல்லை. எழுத்துப்பூர்வமாக ஒருவர் தன்னுடைய வாக்கை மற்றொருவரிடம் கொடுத்து அனுப்பலாம். அதே போல இந்தப் பகுதியில் பிரதிநிதியாக தேர்தலில் போட்டியிடுபவர் நேரடி பிரச்சாரத்திற்காக இங்கே வருவதில்லை. அதற்கு மாறாக அரசாங்கமே வேட்பாளர்களை பற்றிய முழு விவரங்களையும் மக்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து விடுகிறது. ஐரோப்பிய யூனியனில் பிரான்சுக்கு 72 பிரதிநிதிகள் உள்ளனர். அதில் மூன்று பேர் ஏனாம் பகுதியின் பிரெஞ்சு குடிமக்களின் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பார்கள்.

ஏனாமில் இருக்கும் இந்த மூன்று இடங்களுக்கு 33 பேர் போட்டியிடுகின்றனர். இந்தியா மட்டுமல்லாது சுமார் 52 நாடுகளில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த வசதியை பிரஞ்சு அரசாங்கம் செய்து தருகிறது. அதேபோல் இங்குள்ள மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பிரான்ஸ் அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.