28.5 C
Chennai
Wednesday, April 17, 2024

மூன்றாம் உலகப் போர் வந்தால் அதற்கு இந்தக் கடல் தான் காரணமாக இருக்கும்!

Date:

வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்த  கிம் ஜாங் உன் மற்றும் ட்ரம்ப் சந்திப்பின் போது “இந்தியா- பாக்கிஸ்தான் போர் பதற்றம் “குறித்து ட்ரம்ப் பேசியிருந்தார். அதற்கு மறுநாளில் பிலிப்பைன்ஸுக்குச்  சென்ற அமெரிக்கப் புலனாய்வுத்துறையான CIA வின் இயக்குநர் Mike pompeo “பிலிப்பைன்ஸ்  அமெரிக்காவுக்கு நெருங்கிய தோழமை நாடு. அதன் ராணுவம் அல்லது பயணிகள் கப்பலோ  தாக்கப்பட்டால் அமெரிக்காவின் ராணுவம் களத்தில் இறங்கும்” எனக் கூறியிருந்தார். எதற்காக அமெரிக்க ராணுவம் பிலிப்பைன்ஸூக்கு ஆதரவாக வரவேண்டும்? அமெரிக்க ராணுவத்தை எதிர்ப்பது யார்?

Trump-china-trade
Credit: Daily Post Nigeria

தெற்கு சீனக்கடல்

“தென்சீனக்கடல்“.  இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான எல்லைப்பிரச்சினை. இந்தியாவுக்கு சிக்கிமை கொடுத்துவிட்டு அதைவிடப் பெரியதும் இயற்கை அரணாகவும், சிறந்த அமைவிடமும் கொண்ட மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தை பங்கு கேட்கும் சீனா, மற்ற மூன்று திசைகளிலுமே பிற நாடுகளுடன் எல்லைப் பிரச்சினையைக் கொண்டுள்ளது. மேற்கு திசையில் பாக். உடனான உடன்படிக்கை மற்றும் வடக்கில் ரஷ்யா உடனான உடன்படிக்கை மூலம் எல்லையில் ஓரளவுக்கு சுமூக உறவை ஏற்படுத்திக் கொண்டது. மேலும் கிழக்கில் ஜப்பானுடன் “கிழக்குச்சீனக்கடலில்” மல்லுக்கு நிற்கும் சீனா, தற்போது அதன் தெற்குப் பகுதியில் உள்ள கடலை முழுவதும் சொந்தம் கொண்டாடி வருகிறது.

ஒரு நாட்டின் கடற்பரப்பு என்பது, கரையிலிருந்து 200 மைல்கள் (370 கிலோமீட்டர்) வரையாகும். அந்த எல்லைக்குள் உள்ள அனைத்து இயற்கை வளங்களுமே அந்நாட்டின் அதிகாரத்திற்கு உட்பட்டவை.

சர்வதேச கடல்பரப்பு விதி

தெற்கு சீனாவில் உள்ள பெரும் கடல்பரப்பே தென்சீனக்கடலாகும். பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புரூனே ஆகிய நாடுகள் இக்கடலைச் சுற்றியமைந்துள்ள சிறிய நாடுகளாகும். ஐக்கிய நாடுகளின் கடல் எல்லை விதிகளின்படி (United Nations Convention on the Law of the Sea)

ஒரு நாட்டின் கடற்பரப்பு என்பது, கரையிலிருந்து 200 மைல்கள் (370 கிலோமீட்டர்) வரையாகும். அந்த எல்லைக்குள் உள்ள அனைத்து இயற்கை வளங்களுமே அந்நாட்டின் அதிகாரத்திற்கு உட்பட்டவை. இப்பரப்பு Exclusive  Economic Zone (EEZ) என அழைக்கப்படுகிறது. EEZ க்கு அப்பால் வரும் நீர்ப்பரப்பு, சர்வதேச கடல்பரப்பாகும். அங்குள்ள இயற்கை வளங்களை அருகருகே உள்ள நாடுகள் பங்கிட்டுக் கொள்ளலாம். சர்வதேச கப்பல்களும் அதில் உலவி வர உரிமையுண்டு. ஆனால், இந்த விதிகள் எதையுமே மதிக்காமல் அக்கடலில்  தனக்கென்று எல்லைகளைத் தானே வகுத்துக்கொண்டுள்ளது சீனா.

south-china-sea-map-
Credit: CNN

சர்ச்சைக்குரிய தீவுகள்

பார்க்கும் உங்களுக்கே தோனலாம் எவ்வளவு அநியாயம்?  என்று. இதைத்தான் கொஞ்சமும் கூச்சமின்றி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தனது ஆயுத வலிமையால் இந்த சிறிய நாடுகளை அடக்கி ஒடுக்கி வைத்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க தீவு தொகுப்புகள் “spratly island மற்றும் paracel island” ஆகியனவாகும். சர்வதேச விதியை மீறும் இந்த பங்குதாரரை கேள்விகேட்க முடியாமல் புழுங்கிக்கொண்டிருந்தன அந்நாடுகள். எல்லாத் துயரங்களையும் போக்க அந்நியன் அவதரித்து விட்டான். அவனுக்காகவே அந்நாடுகள்  பொறுமையுடன் இருந்தன.

தென்சீனக்கடலின் ஆழத்தில் கச்சா எண்ணெய் கோடிக்கணக்கான பேரல் பேரலாக கொட்டிக்கிடக்கிறது. இயற்கை எரிவாயுவும் இங்கே ஏகபோகம். உலகின் 10 விழுக்காடு மீன் வளங்கள் அங்கேதான் இருக்கிறது. ஆண்டுக்கு $5.3 ட்ரில்லியன் டாலர் மதிப்புக்கு இதன் வழியே கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இது உலகின் ஒட்டுமொத்த அளவில் 30 சதவிகிதம்.

9 Dash line

1940 கள் வரை எந்த நாடுகளும் இதற்கு சொந்தம் கொண்டாடவில்லை. ஆனால் வியட்நாம் மட்டும் சில paracel தீவுகளை ஆட்சிபுரிந்தததாக சொல்லப்படுகிறது. 1970 மற்றும் 80 களில் துவங்கிய இந்தத்தீவு வேட்டையில் தாமாதமாகவே உள்ளிறங்கியது சீனா. எல்லா எல்லைக்கோட்டையும் அழித்து கம்யூனிஸ்ட்டுக்கே உண்டான சிவப்பு நிறத்தில் 9 எல்லைக்கோடு களை  கோடுகளைப்போட்டுக்கொண்டது. ஆரம்பத்தில் பதினொரு கோடுகளாக இருந்த இக்கோடு பின்னால் ஒன்பதாக  சுருங்கியது. ஆனால் எல்லை எகிறியது.  சீனாவோ தன் பங்கிற்கு, Qin  மற்றும் Han வம்சாவளி (221 BC – 221 AD) முதலே சீனர்கள் நீச்சல் பழகுனதே இங்கேதான்! என்று பகீரடிக்கிறது. மேலும் பிலிப்பைன்ஸ்க்கு அருகே உள்ள  Scarborough shoals என்ற ஒரு தீவும் சீனாவுக்கு பலிகெடா. இதில் அதிக கடல்பரப்பை இழப்பதும் பிலிப்பைன்ஸ் மட்டும் தான் பாவம். கால்நினைக்கவாவாது எடம் கொடுங்கப்பா..

South-China-Sea
Credit: Forbes

புதையலும் பூதமும்

இன்று சீன முத்திரையுள்ள பொருள்கள் இல்லாத இடமே இல்லை. “ Made in china” மூலம் உலகின் நம்பர் ஒன் நாடாக ஆசைப்படும் சீனா அதற்க்காக முழு வீச்சில் “தொழில்புரட்சி” செய்துவருகிறது. ஏற்கனவே மக்கள் தொகையில் நம்பர் ஒன்னாக இருப்பதாலும் இப்போது “ஒரு குழந்தை திட்டம்”  நீக்கப்பட்டாதாலும் எதிர்காலத்தில் சீன மக்கள் தொகை கணக்கு வழக்கில்லாது உயரத்தொடங்கும். அப்போது அத்தனை தலைகளுக்கும் ஆற்றல் மூலம் வேண்டுமல்லவா.

தென்சீனக்கடலின் ஆழத்தில் கச்சா எண்ணெய் கோடிக்கணக்கான பேரல் பேரலாக கொட்டிக்கிடக்கிறது. இயற்கை எரிவாயுவும் இங்கே ஏகபோகம். உலகின் 10 விழுக்காடு மீன் வளங்கள் அங்கேதான் இருக்கிறது. ஆண்டுக்கு $5.3 ட்ரில்லியன் டாலர் மதிப்புக்கு இதன் வழியே கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது. இது உலகின் ஒட்டுமொத்த அளவில் 30 சதவிகிதம். இவ்வளவு வளங்கள், போட்டிக்கு சுற்றிலும் ஏப்பைசாப்பை நாடுகள் என்றறிந்து பின்னரே சீனா இங்கே நீச்சலடித்தது.

தீவக்காணோம் சார்..

சர்வதேச கடல் சார்ந்த மற்றொரு விதி என்னவெனில் “ உயர அலைகளில் மூழ்கும் தீவுகளையோ, தொங்கும் தீவுகளையோ, அல்லது கடற்பாறைகளையோ யாரும் சொந்தம் கொண்டாடக்கூடாது” என்பது. சீனாவிற்கு இதுவும் போய்ச் சேரவில்லை. 9 Dash line களுக்கு அருகில் உள்ள சிறிய சிறிய தீவுகள், பாறைகளை செயற்கையாக விரிவுபடுத்தி விமானத்தளங்களையும், ரேடார் சுரங்கங்களையும், எதிர்ப்பு ஏவுகணைத் தளங்களையும் உருவாக்கிவருகிறது. சாட்டிலைட் படங்கள் மூலம் பல தீவுகளை சீனா விழுங்கியது, உலகறிய வெளிச்சத்திற்கு வந்தது.

SouthChinaSea--
Credit: Livemint

சர்வதேச நீதிமன்றம்

கேள்வி கேட்பார் யாருமில்லை. கேட்டாலும் நியாயமில்லை. பேச்சுவார்த்தைக்கு போட்டி நாடுகள் அழைத்தும் பலனில்லை. யார் பேசுவது?  யார் கேட்பது?

Paracel தீவுகளை ஆட்சிபுரிந்த வியட்நாமை அடித்து துரத்திய சீனாவை எதிர்க்க பிற நாடுகள் பயந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாடு மட்டும் 2013 ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் தீ ஹாக்  நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா பிலிப்பைன்ஸை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

வழக்கு முழுவதையும் புறக்கணித்த சீனா, சர்வதேச கடல் விதிகள் எழுதுவதற்கு முன்னரே கடலுக்குள் தாங்கள் இறங்கியதாகவும் அதில் தலையிட எந்த நாட்டுக்கும் அனுமதியில்லை என்றது. தனக்கு ஆதரவாக சில ஆப்பிரிக்க ஏழை நாடுகளையும் கைக்குள் போட்டுவைத்துள்ளது. அந்த இருண்ட தேசத்திற்குள் பல மில்லியன் டாலர்கள் செல்வதே காரணம்.

Still image from United States Navy video purportedly shows Chinese dredging vessels in the waters around Mischief Reef in the disputed Spratly Islands
Credit: Time Magazine

“சர்ச்சைக்குரிய கடல்பரப்பை சொந்தம் கொண்டாட  சீனாவுக்கு எந்தவித உரிமையும் இல்லை” என்பதே தீர்ப்பு. பிலிப்பைன்ஸுக்கு வாழ்த்து சொன்ன சீனா “ கண்டம் விட்டு கண்டம் தாண்டும் “வால்நட்சத்திரம்” ஒன்றை  பிலிப்பைன்ஸுக்கு பக்கத்தில் ஊன்றி வைத்தது. இத்தனைக்கும்,  291 தீவுகளை உள்ளடக்கிய தென்சீனக்கடலில் வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகள் முறையே தலா 21 மற்றும் 8 தீவுகளையே கேட்கின்றன. மற்றவை கடல்பரப்பை மட்டும் கொடுத்தால் போதும் என்கின்றன.

அரண்

The cabbage strategy என்ற திட்டம் மூலம் பிலிப்பைன்ஸ் ஆண்டு வந்த சில தீவுகளைச்சுற்றி சீனா தனது போர்க்கப்பல்களை உலவவிட்டு வருகிறது. அந்த தீவுகளை சுற்றிவரும்  உலோகத் திமிங்கலங்களை மீறி அவற்றை அணுகுவதும் முடியாத காரியம்.  மேலும் தென்சீனக்கடல் முழுவதையும் தனது வான் பரப்பிற்கு கொண்டு வந்த சீனா, அதில் சர்வதேச விமானங்கள் பறக்க தங்களிடம் அனுமதி பெறவேண்டும் என்றது.

china sea
Credit: Washington Post

தூதன் வருவான்..மாரி பொழியும்..

சர்வதேசக் கடல்பரப்பை சீனா சொந்தம் கொண்டாடுவதாலும், நட்பு நாடான பிலிப்பைன்ஸுக்கு உதவவும் களமிறங்கிய அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை அக்கடலில் மித‌க்கவிட்டது. அதன் அதிநவீன விமானங்களும் சீனாவின் செயற்கை விமானத்தளங்களை எட்டிப்பார்க்க ஆரம்பித்தன. “பட்டால்தான் பேச்சு “  என்றது அமெரிக்கா. “படட்டும் பாத்துக்கலாம் “ சீனா. இக்கடலைக் கைப்பற்றினால் சீனாவின் நோக்கம் நிறைவேறும் என்பதும், கடலாழத்தில் உள்ள டாலர் கரைசலும் அமெரிக்காவிற்குத் தெரியும். ஆனால் தற்போது, சர்வதேச கடல்பரப்பை மீட்பதே அமெரிக்காவின் நோக்கம். ராணுவம்னா என்ன? என்று கேட்கும் பிலிப்பைன்ஸூக்கு  ஆயுதங்களால் அர்ச்சனை செய்கிறது அமெரிக்கா. ரஷ்யாவும் தன்பங்கிற்கு வியட்நாமுடன் சேர்ந்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

இந்தியப்பெருங்கடலில் சீனா

பல ஆண்டுகளாக நடந்துவந்த பதற்றம் 2017 ல் உச்சகட்டத்தை எட்டியது. போர்கப்பல்கள் மீன்பிடிக்க விரைந்தன. ஆயினும் பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆயுத  அரண்மனை கட்டியுள்ள சீனாவிற்கு போட்டியாக அங்காங்கே உள்ள சிறிய தீவுகளில் தத்தம் பங்கிற்கு குடிசை போட்டு ஆட்களை வைத்துள்ளன பிற நாடுகள். இங்கே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கிடையாயான எண்ணப்பொருத்தம், சீனாவிற்குக் கொஞ்சம் வருத்தம்.

india-chinaஅத்தோடு இந்தியா உருவாக்க நினைக்கும் Quadrilateral Group மூலம் சீனாவிற்கு நிச்சயம் செக் வைக்க முடியும். இதில் நான்கு நாடுகளுக்கும் கொஞ்சம் தயக்கம் இருந்துவருகிறது. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் செக்மேட் வைக்க, சிவப்புச் சட்டைக்காரன் அவ்வப்போது இந்தியப்பெருங்கடலிழும் முங்குநீச்சல் போடுவதாகவும் ரோந்துக் கப்பல்கள் செய்தியடிக்கின்றன. சுதாரித்த இந்தியா மேலும் பல போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி மற்றும் விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

அவ்வப்போது இந்தியா, ஆஸி மற்றும் அமெரிக்கா உடன் இணைந்து நடத்தும் போர்ப் பயிற்சி மூலம் இந்தியப்பெருங்கடல் நிலைகொள்கிறது. எனினும் சீன ராணுவம் முழு தென்சீனக்கடலை விழுங்கும் பட்சத்தில் பின்விளைவுகள் ஆசியக் கண்டத்தில் அபாயகரமானதாக இருக்கும்.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!