எகிற இருக்கும் பெட்ரோல் விலை – நெருக்கடியில் இந்தியா

0
50
fuel price in india

இந்தியாவில் கச்சா பொருட்களின் விலை வரலாறு காணாத உயர்வை காண இருக்கிறது. ஈரான் நாட்டோடு இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தை அமெரிக்கா மறுபடியும் தனது வல்லாதிக்க சுத்தியலால் உடைத்தெறிந்திருக்கிறது. இதனால் இனிவரும் காலங்களில் ஈரான் கடுமையான பொருளாதார சிக்கல்களை சந்திக்கப்போகிறது. கூடவே இந்தியாவும் தான். அப்படி என்ன பிரச்சினை? பார்த்துவிடலாம்.

skynews-donald-trump-google_4405491
Credit : SkyNews

இந்தியாவின் மொத்த கச்சா எண்ணை இறக்குமதியில் 10% ஈரானில் இருந்து வருகிறது. இதனைத்தான் அமெரிக்கா தடுத்து நிறுத்தப்போகிறது. ஈரான் – அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றினை அமெரிக்கா முடிவிற்கு கொண்டுவந்துள்ளது. இதனால் ஈரான் நாட்டின்மேல் மறைமுக (?) பொருளாதார போர் ஒன்றினை அமெரிக்கா தொடுத்துள்ளது. மேலும் தனது தோழமை நாடுகள் யாரும் ஈரானிடம் எந்தவித வர்த்தக உயர்வும் மேற்கொள்ள கூடாது எனவும், ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருக்கும் வர்த்தக உறவுகளை வரும் மே 2 ஆம் தேதிக்குள் முறித்துக்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்கா கட்டாயப்படுத்துகிறது.

ஐக்கிய நாடுகளின் அறிவிப்பு அன்றி எந்த தனிநாடும் இந்தியா – ஈரான் உறவில் கருத்து தெரிவித்தாலும் இந்தியா அதனை ஒருபோதும் ஏற்காது என்று பேசிய இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டை ஏற்றுள்ளார். ஈரான் உடனான வர்த்த உறவு நீடிக்குமானால் இந்தியா அமெரிக்க டாலர்களை உபயோகிக்க தடை விதிக்கப்படும், அமெரிக்காவிலுள்ள சொத்துக்கள் முடக்கப்படும் மேலும் உலக வங்கியில் இந்தியாவின் கணக்கு முடக்கம் செய்யப்படும் என அமெரிக்கா அச்சுருத்தியதன் விளைவாக இந்தியா தனது ஈரான் நட்பை கைவிட துணிந்திருக்கிறது.

Credit : Nikkei Asian Review

தெற்காசியாவில் மிகச்சிறந்த வளர்ச்சி விகிதங்களைக் கொண்டுள்ள இந்தியா அமெரிக்காவை பகைத்துக்கொள்வது மிகப்பெரிய ஆபத்தை தேடித்தரும் என்பதால் இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 70 டாலர்களுக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அதிரடியால் இனிவரும் மாதங்களில் கச்சா எண்ணெய் மிகப்பெரிய விலையுயர்வை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் வழியாக மத்திய கிழக்கு நாடுகளுடன் எண்ணெய் வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் ஈரானின் சபாஹார் துறைமுகம் வழியாக வர்த்தகத்தை மேற்கொள்ள இருந்த இந்தியாவின் கனவில் அமெரிக்கா வேட்டு வைத்துள்ளது.

fuel price in indiaஇதனால் கோபமடைந்துள்ள ஈரானும் தனது ஹார்மூஸ் ஜல சந்தியை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் வர்த்தக கப்பல்களுக்கு கட்டணம் அதிகமாகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. எப்படி இருந்தாலும் வர்த்தகம் டாலரில் நடைபெறுவதால் அமெரிக்கா ஆதாயம் அடைந்துவிடும். மத்திய கிழக்கை நம்பி டாலரில் எண்ணெய் வாங்கும் நாடுகள் அனைத்தும் ஆட்டம் காண இருக்கும் நாள் தெளிவாக தெரிந்துவிட்டது.

ஈரானிடம் வாங்கும் 10% எண்ணைக்கு இந்தியா என்ன மாற்று வழி வைத்திருக்கிறது? தினமும் எகிறும் பெட்ரோல் டீசல் விலை இனி ராக்கெட்டில் ஏற இருப்பதற்கு இந்தியாவிடம் உள்ள திட்டம் தான் என்ன? இதிலிருந்து தப்பிக்குமா இந்தியா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.