போர் விமானி அபிநந்தனை வைத்து அரசியல் செய்கிறதா மத்திய அரசு?

Date:

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய வான் படை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதில் தாக்குதலை நடத்தியது. இதனை எதிர்த்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதலை மேற்கொள்ள அதற்கு முன்னரே இந்திய விமானங்கள் அவற்றை முறியடித்தன. அப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் சென்ற இந்தியாவின் மிக் ரக விமானம் ஒன்றை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மேலும் அதிலிருந்த விமானியையும் கைது செய்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டது.

abinanthan2அபிநந்தன்

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் ராஜேஷ்,” பாகிஸ்தானின் ராணுவத்தால் இந்திய விமானம் தாக்கப்பட்டது உண்மை எனவும், அதிலிருந்த விமானியைத் தங்கள் வசம் வைத்திருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளதை ஆராய்ந்து வருகிறோம்” என்றார். இதனிடையே பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட வீடியோவில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானி அபிநந்தன்,” நான் நலமாக இருக்கிறேன், பாகிஸ்தான் ராணுவம் என்னை சிறந்த முறையில் கவனித்துக்கொள்கிறது. நான் கூடிய விரைவில் நாடு திரும்புவேன் எனத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் தாம்பரம் விமான பயிற்சி நிலையத்தில் படித்தவர். அவரது தந்தை வர்த்தமானும் இந்திய விமானப்படையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநந்தன் கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து விமானப்படையில் பணியாற்றி வருகிறார்.

இந்தியாவின் நிலை என்ன?

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இந்திய விமானி இருப்பது உறுதியானவுடன் பாகிஸ்தான் துணைத்தூதரக அதிகாரிக்கு சம்மன் அளித்தது வெளியுறவுத்துறை. விமானி விடுதலையைப் பற்றி துணைத் தூதருடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது.

நேற்று மாலை டெல்லியில் கூடிய எதிர்க்கட்சி கூட்டத்தில் தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் செயல்பாடுகள் அரசியல் லாபங்களுக்காக மேற்கொள்ளப்படுவதாக காங்கிரஸ் தலைமையிலான 21 எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்திருக்கின்றன.

mirage
Credit: gqindia

இந்தியாவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் கட்சிகளின் வெற்றிவாய்ப்பு பற்றிய கருத்துகணிப்புகள் வெளிவரத்துவங்கின. பல்வேறு தரப்பட்ட அரசியல் விமர்சகர்களும் குறிப்பிட்ட ஒரே பகுதி பாகிஸ்தானுடனான போர். சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்துவரும் பாஜக வரும் தேர்தலில் வெற்றி பெற இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தும்.

ஒன்று, பட்ஜெட்டில் நடுத்தர வர்க்க மக்களுக்கான சலுகைகளை அதிகரித்து நன்மதிப்பை உயர்த்துதல். அடுத்து பாகிஸ்தான் மீதான போர். ஏனெனில் இந்திய அரசியல் வரலாற்றில் பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்ட காலங்களில் எல்லாம், ஆளுங்கட்சியாக இருந்த கட்சியே வெற்றிவாகை சூடியிருக்கிறது.

இம்ரான் கான்

பாகிஸ்தானின் அதிபர் இம்ரான் கான் நேற்று இஸ்லாமாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,” போர் துவங்கிவிட்டால் நானோ, நரேந்திர மோடியோ கூட அதனைக் கட்டுப்படுத்த முடியாது. 70 வருடங்களில் எத்தனையோ இழப்புகளை இரு நாடுகளும் சந்தித்திருக்கிறது. தீவிரவாதிகளைக் குறித்த தகவல்களை அளித்தால் நிச்சயம் பாக். அரசு நடவடிக்கை எடுக்கும். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், போர் எதற்கும் தீர்வாக அமையாது” எனத்தெரிவித்தார்.

imran khan
Credit: India Today

உலக நாடுகள் என்ன சொல்கின்றன?

இந்திய விமானியின் நிலை தெரிந்த பத்தாவது நிமிடத்தில் ரஷியாவின் வெளியுறவுத்துறை சார்பில் அறிக்கை விடப்பட்டது. அதில் இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த சிக்கலை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவின் சார்பில் நிற்பதாகவும், பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தவேண்டும் என்று தெரிவித்திருக்கிறது.

ஜெய்ஷ் -இ- முகமது இயக்கத்தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்க ஐநா மன்றத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்திவருகின்றன. பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை எதிர்ப்பதாக சீனா தெரிவித்திருக்கிறது. சுஷ்மா ஸ்வராஜ் பங்குபெற்ற மாநாட்டில் சீனா இதனைத் தெரிவித்திருக்கிறது.

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!