எம்.பி. யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் கேப்டன்!!

0
42
mashrafe-mortaza-
Credit: myKhel

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனும் பிரபல “பாம்பு டான்ஸ்” நிபுணருமான மஷ்ரபே மோர்தசா நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் ஷேக் ஹசினா நான்காவது முறையாக பிரதமராக இருக்கிறார். கலவரங்கள், வாக்குச்சாவடியில் அமளி என பரபரப்பாக நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் 7 இடங்களை மட்டுமே பெற்றுள்ளன.

cricketer-mashrafe-mortaza-wins-in-bangladeshs-election
Credit: The Nation

கேப்டன் Vs எம்.பி

வேகம், சுருக்கென்று வரும் கோபம், வெற்றியின் களிப்பில் போடும் ஆட்டம் என கலவையான மோர்தசாவை வங்கதேச மக்கள் இரண்டரை லட்சம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்திருக்கின்றனர். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஃபார்ஹாத் வெறும் 7,883 வாக்குகளே பெற்றார் என்பதுதான் அதிர்ச்சியின் உச்சம்.

இதுகுறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்த மோர்தசா வெற்றிபெறுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை அவரே எதிர்பார்த்திருப்பாரா? என்பது சந்தேகம் தான்.

ஹாட்ரிக் வெற்றி

இந்நிலையில் தற்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மிகப் பெரும் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்தலில் வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கட்சி மொத்தமுள்ள 350 நாடாளுமன்ற இடங்களில் போட்டியிட்டு 281 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாகத் தெரிகிறது.

Prime Minister Sheikh Hasina
Credit: The Indian Express

ஹசினாவின் ஆட்சியின் மேல் ஊழல், உட்கட்டமைப்பு வசதிகள் குறைபாடு, அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம், குடியுரிமைப் பிரச்சினை என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தன. இதனால் ஹசீனாவின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக  வங்கதேச எதிர்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி தேர்தலில் கணிசமான இடங்களைப் பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடந்தது என்னவோ வேறு. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சி மொத்தமே 7 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது.

ஆளுங்கட்சியான அவாமி லீக் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடியை கொடுத்ததால் 47 வேட்பாளர்கள் தேர்தலை விட்டே ஒதுங்கிவிட்டதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டுவதோடு, நடுநிலையான அமைப்பின் மூலம் மறுதேர்தல் நடைபெற வேண்டும் எனவும் போராடிவருகிறது.