அமெரிக்கத் தலைநகரம் அரசியல் வன்முறையால் எத்தனை முறை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா?

Date:

அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டிசி யில் அமைந்துள்ளது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமன்றக் கட்டிடம் (United States Capitol). இங்குதான் அமெரிக்க செனட் மற்றும் ஹவுஸ் மசோதாக்களை உருவாக்கி, விவாதிப்பார்கள். இதுவரை 10 முறை இக்கட்டிடம் தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. 

1. வாஷிங்டன் எரிந்தது

1
(Image credit: Library of Congress)

பிரிட்டனுக்கு எதிரான 1812 ஆம் ஆண்டு போரின் போது, ​​படையெடுத்த பிரிட்டன் துருப்புக்கள் வாஷிங்டன் டி.சி.க்கு அணிவகுத்துச் சென்று, அமெரிக்க செனட்டின் வரலாற்று சிறப்பம்சமான சட்டமன்றக் கட்டிடத்தை, தீ வைத்து கொளுத்தினர்.

2. அரசியல் சண்டை

2
(Image credit: Library of Congress)

1856- ஆம் ஆண்டு இரு அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக விமர்ச்சித்துக்கொண்டதை தொடர்ந்து, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

3. செனட்டில் குண்டு வெடிப்பு

3
(Image credit: Library of Congress)

1915 ஆம் ஆண்டு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஜெர்மன் பேராசிரியர் எரிக் மியூன்டர், செனட்டின் வரவேற்பு அறையில் டைனமைட் குண்டுகளை வைத்திருந்தார். அறை பூட்டி இருந்ததால் அவரால் வரவேற்பறையிலேயே வைக்க முடிந்தது. அது வெடிக்கவும் செய்தது. முதலாம் உலகப் போரில் அமைதியை விரும்பி இதனை செய்ததாக அவர் தெரிவித்தார்.

4. போர் வீரர்கள் போராட்டம்

4
(Image credit: Library of Congress)

முதலாம் உலகப் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து, 1932-இல் போர் வீரர்கள் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர். முந்தைய அரசு அறிவித்திருந்த போனஸ் தொகை வழங்கப்படாததால் சுமார் 25,000 படை வீரர்கள் கூடி போராடினார்கள். இப்போராட்டத்தின்போது வீரர்களின் முகாம்களின் மீது தீ வைக்கப்பட்டதில் பெரும்பாலோனோர் இறந்தனர் மற்றும் காயமடைந்தனர்.

5. கன்னி வெடிகள்

5
(Image credit: Geoff Livingston via Getty Images)

1970 களின் முற்பகுதியில், வியட்நாம் போர் எதிர்ப்பு குழு வாஷிங்டன் டி.சி.யைச் சுற்றி வெடிபொருட்களை பதித்து வைத்திருந்ததாக என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா தெரிவித்துள்ளது. இந்த குழு அமெரிக்காவின் பிற முக்கிய நகரங்களிலும் வெடிபொருட்களை வெடிக்க செய்தது.

6. புவேர்ட்டோ ரிக்கோ பிரிவினைவாதிகள்

6
(Image credit: Collection of the U.S. House of Representatives)

1954 அன்று, நான்கு புவேர்ட்டோ ரிக்கன் பிரிவினைவாதிகள் வாக்கெடுப்பின் போது சபையின் மாடிக்குள் நுழைந்தனர். புவேர்ட்டோ ரிக்கோ ஒரு அமெரிக்க பிரதேசமாக இல்லாமல் சுதந்திரமான பிரதேசமாக இருக்க விரும்பினர். பின்னர் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 நபர்கள் காயமடைந்தனர்.

7. கேபிடல் கட்டிடத்தில் வெடிகுண்டு

7
(Image credit: U.S. Senate Commission on Art)

1983 இல், கேபிட்டலின் வடக்குப் பகுதியில் ஒரு குண்டு வெடித்தது. குண்டுவெடிப்புக்கு சற்று முன்னர், “ஆயுத எதிர்ப்பு குழுவில்” உறுப்பினராக இருப்பதாகக் கூறிய ஒரு அழைப்பாளர், கிரெனடா மற்றும் லெபனானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து வெடிகுண்டு வைத்ததாகக் கூறினார். இந்த குண்டு வெடிப்பு 2,50,000 டாலர் அளவிலான சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால் யாரும் காயமடையவில்லை. குண்டுவெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பை அதிகரித்தது நிர்வாகம்.

8. கேபிட்டலில் நடந்த தாக்குதல்

8
(Image credit: Graham, Douglas/Library of Congress)

1998 இல், ஒரு ஆயுதமேந்திய நபர் அலுவலகத்தினுள் நுழைந்து ஓடிக் கொண்டிருந்தார். அவரைத் தடுக்க முயன்றதில் இரு காவலர்கள் உயிரிழந்தனர். பின்னர் நடந்த விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

9. செப்டம்பர் 11 மற்றும் ஆந்த்ராக்ஸ்

9

செப்டம்பர் 11, 2001 அன்று, பயங்கரவாதிகள் வர்த்தக விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்திலும், பென்டகனிலும் மோத வைத்தனர். யுனைடெட் ஏர்லைன்ஸ் 93 என்ற நான்காவது விமானம், பென்சில்வேனியாவில் மோதியது. இதன் தாக்குதல் இலக்காக அமெரிக்காவின் கேபிடல் கட்டிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, உயிரைக் கொள்ளும் பாக்டீரியாவான ஆந்த்ராக்ஸ் கிருமி ஒரு கடிதத்துடன் கேபிடல் கட்டிடத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

10. டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்குதல்

10
(Image credit: Bill Clark/CQ-Roll Call, Inc via Getty Images)

ஜனவரி 6, 2021 அன்று அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள், கேபிடல் அலுவலகத்துக்குள் நுழைந்து சேதப்படுத்தினார்கள். அப்போது நடந்த தாக்குதலில் ஒரு பெண்மணி உயிரிழந்தார்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!