உலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்தை, உலகப் பிரபலமான ‘லுலு’ குழுமத்தின் மேலாளரான இந்தியாவைச் சேர்ந்த யூசுப் அலி 2015 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கியிருந்தார். சுமார் 1000 கோடிக்கு வாங்கப்பட்ட அதை ஏறத்தாழ 680 கோடி ருபாய் செலவு செய்து தற்போது 153 அறைகள் கொண்ட தங்கும் விடுதியாக மாற்றி உள்ளார் யூசுப் அலி.

கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த யூசுப் அலி காதர், அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லுலு குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 5.6 பில்லியன் டாலர். இவர் இந்தியாவின் 24-வது பணக்காரர் என்றும், உலக அளவில் 270-வது பணக்காரர் என்றும் போர்ப்ஸ் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை
1829 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அக்கட்டிடம் 1890 ஆம் ஆண்டு வரை சிறைச்சாலையாக செயல்பட்டு வந்தது. 6௦ ஆண்டுகள் லண்டன் மெட்ரோபொலிட்டன் காவல் துறையால் பராமரிக்கப் பட்டு வந்த அக்கட்டிடம் 2013 ஆண்டில் விலைக்கு வந்தது.
லுலு மாலுக்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும். அங்கு ஏசி காற்றைத் தவிர எதையும் எளிதில் வாங்க முடியாது என்று. ஆனாலும் அங்கு வேலைபார்த்துவந்த யூசுப் அலி இத்தனை பெரிய கட்டிடத்தை வாங்கியிருக்கிறார். இக்கட்டிடம், இனி நாளொன்றுக்கு 9 லட்சம் ருபாய் வாடகை வாங்கும் விடுதி. பல்வேறு வித குற்றவாளிகளின் ஆத்மாக்கள் மத்தியில் இனி குடும்பத்தோடு கொட்டம் அடிக்கலாம்!. லண்டன் பாதுகாப்பு துறையின் கஷ்ட காலம் போலும்! நிதி திரட்டுவதற்காக பெரும் பழைமையான கட்டிடத்தை விற்பனைக்கு கொண்டு வர நேர்ந்துள்ளது.

1864 ஆம் ஆண்டு நடந்த plaistow marshes மற்றும் jack the ribber (1888) போன்ற கொலைக்குற்றங்கள் இங்கேதான் விசாரிக்கப்பட்டன. அதற்கு பிறகு மிகப் பெரும் எழுத்தாளர்கள் சார்லஸ் டிக்கன்ஸ் மற்றும் ஆர்தர் கோயல் போன்றோர் இந்த காவல் நிலையத்தை நாவலில் கொண்டு வரவே, அன்றிலிருந்துதான் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறை என காவல் துறைக்கு ஒரு ட்ரேட்மார்க் உண்டானது.
சொகுசு விடுதி
நீச்சல் குளம், வண்ண ஒளி விளக்குகள் அலங்கரித்த தேநீர் விடுதிகள், 7 ஸ்டார் படுக்கை அறைகள், மதுச் சோலைகள் என கற்கால சிறைச்சாலையை கலியுக மாடங்களாக மாற்றியுள்ளார் யூசுப். கடந்த ஆண்டுதான் இவர் கிழக்கிந்திய கம்பெனியில் சில நூறு கோடி ருபாய் முதலீடு செய்திருந்தார்.

இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட உள்ளது இந்த 7 அடுக்கு சிறைச்சாலை. அந்த பழைய சிறைக்கும் இந்த நவீன அறைக்கும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவென்றால் பல நூறு கைதிகளை கண்காணிக்க சில நூறு ஜெயிலர் இருப்பர். தற்போது நுண்ணிய கண்காணிப்பு காமிராக்கள் சில மட்டும் இருக்கும்.