65,000 டன் எடையுள்ள இந்தியாவின் பிரம்மாண்ட போர் கப்பல்! பிரிட்டனிடம் இருப்பதை விட அதிக விமானங்களை தாங்கும்!!

Date:

INS விஷால்

பிரிட்டனின் ராயல் நேவியை தலைமை தாங்கிச் செல்லும் “HMS Queen Elizabeth” எனும் பிரம்மாண்டமான விமானம் தாங்கிக் போர்க்கப்பலைப் போன்றே .. இல்லை இல்லை அதனினும் அதிநவீன போர்க்கப்பலை இந்தியாவிற்கு தயாரித்து தருவதற்கு  UK ராஜ்ஜியம் முன்வந்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் உருவாக உள்ள இக்கப்பலின் பெரும்பாலான நவீன உதிரிபாகங்கள் யு.கே விடம் இருந்தே இறக்குமதி செய்யப்படவுள்ளன.

ins vishal
Credit:
Deccan Herald

இந்திய கப்பற்படை அதிகாரி மற்றும் உடன்பாட்டு கட்டுமான நிறுவனங்களிடம் இப்புதிய போர்க்கப்பலின்  டிசைன் மற்றும் இதர தேவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பிரிட்டன் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் 65,000 டண் எடையில் தயாராகும் இந்தகப்பல் ஏற்கனவே சேவையில் உள்ள ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா (ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது 45,000 டண்) மற்றும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாராகிவரும் ஐ.என்.எஸ் விக்ராந்த் (40,000 டண்) உடன் இணையவுள்ளது. அப்போது பிரிட்டனை விட எண்ணிக்கையில் அதிக விமானங்களை தாங்கும் போர்க்கப்பலை கொண்டதாக நமது கப்பற்படை இருக்கும்.

HMS Queen Elizabeth போர்க்கப்பலை வடிவமைத்தது Bae மற்றும் Thales ஆகிய நிறுவனங்கள் பிரபல ஏரோஸ்ஃபேஸ் நிறுவனங்களாகும். அதே கட்டுமான தளத்தில்தான் பிரிட்டனின் இரண்டாவது பிரம்மாண்டமான HMS prince of Wales எனும் போர்க்கப்பல் தயாராகிவருகிறது. இந்த இரண்டு நவீன கப்பல்களை போலவே தயாராகி வரவுள்ள இதற்கு “copycat supercarrier” என்று Rosyth dockyard ஆல்  பெயரிடப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் இதன் பெயர் ஐ.என்.எஸ் விஷாலாக இருக்கும். விஷால் என்பதற்கு கம்பீரம், மகத்துவம் என்று பொருள்படும்.

தோல்வியடைந்த  “விராட்”

 1987 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு HMS Hermes எனும் போர்க்கப்பலை விற்பதற்கு  பிரிட்டன் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை பாதியில் நின்றுபோனது. அதற்கு இந்திய அரசின் சார்பில் ஐ.என்.எஸ் விராட் என பெயரிடப்பட இருந்தது.

vishal ins
Credit:
Military Watch Magazine

7416 கிலோமீட்டர் கடற்பரப்பு, 1197 கிலோமீட்டர் இந்திய தீவுகளின் கடற்பரப்பு  மற்றும் இந்தோ பசிபிக் பகுதியில் அதிகரித்து வரும் சீனக் கப்பல்களில் ஊடுருவல்களிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு  கப்பற்படையை நவீனப்படுத்தஇந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வழக்கமாக 20 ஆண்டுகள் ஆயுள்கொண்ட நமது கப்பற்படையின்  கப்பல்கள்   வெறும்  5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளன. சிறப்பாக, நமது கடலோர காவல்படை 212 விழுக்காடு  நவீனமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!