AK-203 ரக துப்பாக்கியைத் தயாரிக்க இருக்கும் இந்தியா!!

Date:

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியா வந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் பாதுகாப்பு, கல்வி, ஆயுதங்கள் கொள்முதல் மற்றும் இயற்கை எரிவாயு எனப் பலதுறைகளில் ஒப்பந்தங்கள்  கையெழுத்தானது. அதில் முக்கியமானது ரூபாய் – ரூபிள் பணப்பரிவர்த்தனையாகும். அதன்படி, இந்தியாவிலேயே தயாராகி வந்த இன்சாஸ்  (INSAS -Indian Small Arms System) துப்பாக்கிகள், ரஷ்யாவின் மேம்படுத்தப்பட்ட AK-47 மாடலான AK-203 மூலம் மாற்றம் செய்யப்படவுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள கோர்வா நகரில் AK-203 ரக  துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலையை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி. இங்கே உருவாகும் ரஷ்யா – இந்தியா கூட்டுத் தயாரிப்பான AK-203 இன்னும் மூன்று ஆண்டுகளில் முழுவதும் இந்தியாவுக்கே சொந்தமாகிவிடும். அதன்பின்னர் நம்முடைய தேவைக்கேற்ப நாம் தயாரித்துக் கொள்ளலாம்.

AK47_Goatgun_disassembled
Credit: GoatGuns

தொல்லை கொடுத்த INSAS

குஜராத் மாநிலத்தில் உள்ள இஷன்பூரில் தயாராகும் இந்தியாவின் எடை குறைந்த அசால்ட் ரக துப்பாக்கிகள் அடிக்கடி பழுதாகி வந்தன. அதன் மேகசின்களில் (Magazine) ஏற்படும் சிக்கலே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

“மேகசின் என்பவை துப்பாக்கிக் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அறையாகும்.” ஒரு தோட்டா இலக்கை நோக்கி வெளியேறியவுடன் தானாகவே அடுத்த தோட்டா மேலெழும்பி சாம்பர் அறைக்கு வரவேண்டும். இதற்கு மேகசினின் அடியில் உள்ள ஸ்பிரிங் உதவிசெய்யும். ஆனால், அடுத்த தோட்டா பாதி மேலெம்பியும், எழும்பாமலும் சிக்கிக்கொண்டதைத் தொடர்ந்து நமது வீரர்கள் அதை உபயோகிக்க மறுத்தனர். பின்னர், இரண்டாண்டுகள் ஆராய்ச்சியில் அவை மேம்படுத்தப்பட்ட பின்னரும் ராணுவத்தின் பரிசோதனையின் போது, இம்முறையும் அதே குறைபாட்டுடன் மற்றும் அதிக சப்தம் மற்றும் தீப்பொறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து சோதனைகள் தோல்வியடைந்தன. கடந்த ஆண்டும் இதே போல 5.56 mm Excalibur துப்பாக்கிகள் ராணுவத் தரத்திற்கு இல்லாததால் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டன. காலத்திற்கேற்ப  ஆயுதங்களின் தன்மையை ராணுவம் மாற்றியமைத்துக்கொள்கிறது. எனவே அவ்வப்போது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடமிருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்து நமது தேவையைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தோம். ஆயினும் ராணுவ வீரர்களின் உயிருக்கு உத்திரவாதம் அளிக்கும் பொருட்டு மேம்படுத்தப்பட்ட ASSAULT ரக துப்பாக்கிகளான AK-103, AK-203 , ரக துப்பாக்கிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளன.

ASSAULT துப்பாக்கி

ASSAULT ரகமென்பது, எடை குறைந்த துப்பாக்கிகளாகும். இவை intermediate தோட்டாக்களை உணவாகவும், கழட்டக்கூடிய மேகசின்களையும் உள்ளடக்கியவை. Automatic மற்றும் semi-automatic  மாடல்களும் இவற்றில் அடக்கம். Semi automatic என்பவை ஒரு ட்ரிக்கரின் அழுத்தத்திற்கு ஒரு முறை சுடக்கூடியவை. Full automatic ஆயதங்கள் ட்ரிக்கர் மீதான அழுத்தம் தொடரும் வரை சுடக்கூடியவை.

தோட்டாக்களின் அளவுகளைப் பொறுத்து அவை இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.

Full power cadridge
7.62×54mm
7.62×51mm (நேட்டோ உபயோகிப்பவை)

Intermediate  cadridge
7.62×39mm
5.56×45mm (நேட்டோ உபயோகிப்பவை)
5.45×39mm

Bolt-action-AK-47
Credit: American Shooting Journal

AK-47 வின் வரலாறு

Avtomat Kalashnikova என்பதன் சுருக்கமே “AK” யாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனி  பயன்படுத்திய Sturmgewehr 44 assault ரைபிள்களால் அதிர்ந்தபோன சோவியத் யூனியன், தனது  துப்பாக்கிகளை விறகுக் கட்டைகளாக நினைக்கத் தொடங்கியது. சொல்லப்போனால் அப்போரின்போது இரண்டு சோவியத் வீரர்களுக்கு ஒரு விறகுக்கட்டைகள் வீதம் வழங்கப்பட்டன. 1945களில் துவங்கிய இந்த மந்திரக்கோலின் ஆராய்ச்சி முடிவுக்கு வர ஐந்து ஆண்டுகள் ஆனது. அன்றுமுதல் இன்று வரை சராசரியாக நாளொன்றுக்கு 2.5 லட்சம் உடல்களுக்குள் தன் விதைகளை விதைத்து வருகிறது இந்த ஏகே.

AK-203 வின் சிறப்பம்சம்

AK-47 துப்பாக்கிக் குடும்பத்தின் புதியரகம்தான் இந்த AK-203. பழைய ஏகேவின் நற்குணங்களான  நம்பகத்தன்மை, துல்லியத்தன்மை, உறுதித்தன்மை மற்றும் மிகச்சிறந்த பொறியில் வடிவமைப்பு போன்றவைகளை பிறப்பிலேயே கொண்டிருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்ற  அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

அதன் பிரம்மிக்க வைக்கும் சில ஆச்சரியங்கள்.

  • 500 முதல் 900 மீட்டர்கள் வரை இருக்கும் எதிரிகளை நொடிகளில் அழித்துவிடும் இவை நான்கு கிலோவைத் தாண்டுவது இல்லை.
  • பின்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் பகுதிகள் (plastic butt) தோட்டா வெளியேறும் போது ஏற்படும் எதிர்வினைகளை தடுக்கவல்லது.
  • Ergonomics எனப்படும் “உடல் மற்றும் கருவிகள் பயன்படக்கூடிய சூழலுக்கு” ஏற்றவாறு தயாரிக்கப்பட்டவை. இதன்மூலம் வீரர்களின் அனைத்து வித சவுகரியங்களுக்கும் இவை செவிசாய்க்கும்.
  • அதிக ஈரப்பதத்திலும் இவை சுடும். கொளுத்தும் வெயிலிலும் இதன் துல்லியம் தவறாது.
  • தண்ணீர், மண், எண்ணெய் போன்றவற்றால் இதன் உட்பகுதிகளின் செயல்பாடுகள் ஒருபோதும் தொய்வடையாது. சிறிய உதறல் மட்டும் போதுமானது. இதன்மூலம்  வீரரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
  • உபயோகிக்க மிக எளிதானவை. பள்ளிச் சிறுவர்களால் கூட, அதிகபட்சமாக 40 விநாடிகளுக்குள் இதனை பிரிக்கவும், இணைக்கவும் முடியும். (ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை).
  • நைட்விஷன் கருவிகளை பொருத்திக் கொண்டு இரவிலும் வேட்டையாடமுடியும்.
  • குறைந்த எடை கொண்ட 40mm underbarrel Grenade களை இதனைக்கொண்டு ஏவமுடியும்.

இத்தனை  சிறப்புகள் காரணமாக நேட்டோ நாடுகள் உட்பட 100 நாடுகளின் ராணுவ வீரர்களால், இவை வளர்ப்புக் குழந்தைகளாகத் தத்தெடுக்குப்பட்டுள்ளன. பல தீவிரவாதக் குழுக்களும் இதனை உபயோகிக்கின்றன. விரைவிலேயே நமது அனைத்து வகையான ராணுவ வீரர்களுக்கும் இவை மாலைகளாகப்போகின்றன.

AK-203-assualt-rifle-
Credit:CCN

.இந்தியாவின் உடனடித் தேவைக்காக 7.5 இலட்சம் துப்பாக்கிகள் தயாரிக்கப்படவுள்ளன. இந்த ஆலைகளிலேயே பிற்காலத்தில் ரஷ்யா உதவியோடு இத்துப்பாக்கிகள் மேம்படுத்தப்படவும் உள்ளன. அமெரிக்காவின் ஆதங்கத்தைப் போக்க அங்குள்ள தனியார் ஆயுத நிறுவனம் ஒன்றிலிருந்து  SiG 716   என்ற ரகமும் (72,000) , UAE நிறுவனம் ஒன்றிலிருந்து  CAR 816 close-quarter carbine finished ‘L1’ ரகமும் வாங்கப்படவுள்ளன.

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!