1971 போரில் பாகிஸ்தானை ஏன் இந்தியா எதிர்த்தது தெரியுமா?

Date:

1971, மார்ச் 3 அமெரிக்க அதிபர் நிக்சனின் அறையில் அமர்ந்திருந்தார் அமெரிக்க வெளியுறவுத்தறை அமைச்சர் கிஸ்சிங்கர். பாகிஸ்தானுக்கு சிக்கல், நாடு இரண்டாக உடையப்போகிறது என்பதை ஊகித்திருந்தார் நிக்சன். ஆனால் பிரச்சினை அதுவல்ல இந்தியா களத்தில் இறங்கியிருக்கிறது என்றார் கிஸ்சிங்கர். இந்தியாவா? என நிக்சனின் புருவங்கள் மேலுயர்ந்தன. ரஷியாவிடம் பேசுங்கள்.. என்ற நிக்சனின் வார்த்தைகளில் இருந்த தீவிரம் தான் இந்தப்போருக்கு வரலாறு கொடுத்திருக்கும் முக்கியத்துவத்திற்கான சான்று.

east-pakistan-secedes-civil-war-breaks-out-boston-globe-march-27-1971
Credit: The Daily Star

பிரிவினை

சுதந்திரத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பூலோக ரீதியில் பிளவுபட்டது. மேற்கே இருக்கும் பாகிஸ்தான் (தற்போதைய பாகிஸ்தான்) மேற்குப் பாகிஸ்தான் எனவும், கிழக்கில் இருந்ததை (தற்போதைய வங்கதேசம்) கிழக்குப் பாகிஸ்தான் எனவும் பிரித்துக்கொண்டனர். ஆரம்பம் முதலே இரு நிர்வாகங்களுக்கும் சில பிணக்குகள் வந்தன.

ஒரு நாட்டு மக்கள் முழுவதுமாக போராட்டத்தில் குதிப்பதற்கு மிக முக்கிய காரணங்களாக இரண்டு விஷயங்களைச் சொல்லலாம். முதலானது அடிப்படைத்தேவைகள். உணவு இருப்பிடம் போன்ற அடிப்படை உரிமைகளைத் தர மறுக்கும் அரசுக்கு எதிராக மக்கள் ஒருங்கினைவார்கள் என்கிறது வரலாறு. அடுத்தது உணர்வு சார்ந்தது. இனம், மொழி, பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை மக்களால் காப்பாற்ற முடியாமல்போகும் பட்சத்தில் மக்களின் ஆதங்கம் அரசின் மீது திரும்பும். சரி, இதில் எந்த காரணத்தினால் பாகிஸ்தான்(கள்) பிரச்சினை வந்தது? இரண்டு காரணங்களிலும் கிழக்குப் பாகிஸ்தான் மேற்குப் பாகிஸ்தான் மீது அதிருப்தியில் தான் இருந்தது.

துவக்கம்

அடிப்படையில் கிழக்குப் பாகிஸ்தானியர் பெரும்பாலானோர் பேசும் மொழி வங்காளம் தான். ஆரம்பம் முதலே வங்காள மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும், மேற்கில் இருந்து எந்த பதிலும் இல்லை. நீதித்துறை போன்ற அரசு அலுவலகங்களில் இந்தி, உருது தான் பயன்பாட்டு மொழியாக இருந்தது. இது மக்களை அதிருப்தி கொள்ளச்செய்தது.

இரண்டாவதாக கிழக்குப் பாகிஸ்தானிற்கு ஒதுக்கப்படும் நிதி போதவில்லை. அடிப்படை கட்டமைப்புகளைச் சரி செய்யவோ, புதிய தொழில்களை மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்கவோ அரசால் முடியவில்லை. இது ஏழைகளின் வயிற்றை மேலும் பற்றி எரியச்செய்தது.

cyclone gaja relief fundஇம்மாதிரியான சிக்கல்கள் பல வகையிலும் மக்களை வாட்டிக்கொண்டிருக்க இயற்கை வேறுவிதமான சிக்கல் ஒன்றினை அம்மக்களுக்கு பரிசளித்தது. 1970 ஆம் ஆண்டு வீசிய போலா புயல் வங்கதேச வரலாற்றில் மிகப்பெரிய இழப்புகளைத் தந்த புயலாகும். கிட்டத்தட்ட 30,000 மக்கள் உயிரிழந்தனர். அடிப்படை வசதிகள் அறவே துடைத்தெடுக்கப்பட்டு, பிறந்த பூமியைத் தவிர வேறொன்றும் உடமை இல்லை என்ற நிலைக்கு வந்திருந்தார்கள் வங்கதேச மக்கள். அப்போது பாகிஸ்தான் சார்பில் மீட்பு நடவடிக்கைள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

மக்கள் யோசித்தார்கள். மொழிக்கும் அங்கீகாரம் கிடையாது. இருக்க வீடு கிடையாது. அடுத்த வேலைக்கு உணவு கிடையாது. இப்படிப்பட்ட நாட்டில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இது ஒட்டுமொத்த மக்களின் குரலாக இருந்தது. தாயின் பாலில்லா மார்பினோடு போராடும் குழைந்தைகளின் பசிக்குரல்கள் வங்கதேசத்தை உலுக்கின.

அவாமி லீக்

புயலடித்த அதே ஆண்டில் வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் செல்வாக்கு உயர்ந்திருந்தது. கையில் அதிகாரம் இருந்தும் மக்களைக் காப்பாற்ற அவர்களால் முடியவில்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. ஒருவேளை உணவுக்காக லட்சக்கணக்கில் மக்கள் காத்துக்கிடந்தனர். அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கு அழைப்பு வந்தது. “நாங்கள் கஷ்டத்தில் இருக்கிறோம், தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்” என அவாமி லீக்கின் தலைவர் முஜிபுர் ரகுமான் கேட்டுக்கொண்டார். அடுத்த அரை மணி நேரத்தில், உணவுப் பொருட்களுடன் வங்கதேச வானை நிறைத்தன இந்திய விமானங்கள்.

indra gandhi
Credit: dailyasianage.com

கிட்டத்தட்ட அதே காலத்தில் மக்களுடைய இன்னல்களைத் துடைக்க முயன்ற முக்தி பாகினி அமைப்பு, ராணுவமாக தரம் உயர்ந்திருந்தது. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் அகதிகளை இந்தியா எந்த நிபந்தனையும் இன்றி வரவேற்கும் என அறிவித்தார் இந்திரா. பாகிஸ்தான் கோபத்தில் கொப்பளித்தது.

மார்ச் 3. அப்போது வங்கதேசத்தில் இருந்த பாகிஸ்தான் இராணுவத்தின்மீது தாக்குதலை நடத்தி போருக்கு பிள்ளையார் சுழி போட்டது முக்தி பாகினி. பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் கிடைத்தவுடன் விமானப்படைகளுக்கு உத்தரவிடப்பட்டது. அவாமி லீக் இந்திரா காந்தியிடம் ராணுவ உதவி கேட்டது. திரிபுரா, வங்கதேசம் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதலை நடத்தின. இந்தியா கிழக்குப் பாகிஸ்தானிற்கு ஆதரவாக களம் காண்பதாக அறிவித்தது இந்தியா.

போர்

இந்திய விமானங்கள் பாகிஸ்தானைப் பந்தாடின. வெற்றி என்பதே இலக்கு என முழங்கினார் இந்திரா. கிழக்கு இந்தியாவே அதிர்ந்தது. அடுத்த 13 நாட்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்திற்கு நெருக்கடி கொடுத்தது இந்தியா. இந்தப் போரில் ரஷியா இந்தியாவிற்கு உதவ, பாகிஸ்தான் தரப்பில் அமெரிக்காவும் சீனாவும் நின்றன. வல்லரசு நாடுகள் தத்தம் ஆதரவு நாட்டிற்காக போரிடுவது அடுத்த உலகயுத்தமாக மாறிவிடும் என உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தின் பேரில் மார்ச் 16ல் பாகிஸ்தான் – இந்தியப் போர் முடிவிற்கு வந்தது. அத்தோடு கிழக்குப் பாகிஸ்தானையும் விடுவித்தது. நிலைமை சரியானதிற்குப் பிறகும் பாகிஸ்தானின் தாக்குதல்கள் நீடித்தன. எனவே இந்திய ராணுவம் அதிவேக தொடர் தாக்குதலின் மூலம் பதிலடி தந்தது. இறுதியில் அதே ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவ தளபதி ஏ. ஏ. கே. நியாசி இந்தியாவிடம் சரணடைவதாக அறிவித்தார். முக்தி பாகினி துவங்கிய போரை இந்தியா முடித்துவைத்தது.

1971 war
Credit: Awaaz Nation

போரில் இந்தியா கைப்பற்றிய பகுதிகளை அவர்களிடமே அளித்தது. போரினால் வங்கதேசத்திற்கு விடுதலை கிடைத்தது என்றாலும் அதற்காக அவர்கள் கொடுத்த விலை மிக அதிகம். போரின் இறுதியில் சுமார் 30 லட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக அந்நாடு அறிவித்தது. சுமார் 2 லட்சம் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டார்கள். பாகிஸ்தான் இதனை இப்போது வரை மறுத்து வருகிறது.

விடுதலைக்காகவே ஏற்பட்டாலும் போர், போர்தான். அதனால் நீண்ட கால அமைதியை எந்தப் பக்கமும் தர முடியாது என்பதற்கு வரலாற்றில் மேலும் ஒரு உதாரணமாக அமைந்தது இந்தப்போர்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!