இந்தியா – பாகிஸ்தான் இடையே உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ஹோரா என்னும் கிராமம். நேற்று (புதன்கிழமை) வழக்கம்போல் தனது வீட்டிற்கு வெளியே படுத்திருந்தார் முகமது ரபாக் சவுத்ரி (Mohammad Razzaq Chaudhry). கிழக்கு அப்போதுதான் வெளுத்திருந்தது. தூரத்தில் வெடிச்சத்தம் கேட்டு எழுந்தார் சவுத்ரி. சற்று நேரத்திற்கெல்லாம் புகைமண்டலம் அந்த இடத்தை சூழத்தொடங்கியது.

சமூக ஆர்வலரான இவர் இரண்டு விமானங்கள் தீப்பிடித்த நிலையில் கிராமத்திற்கு கிழக்குத் திசையில் உள்ள வெட்டவெளியில் விழுவதைக் கண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவரது வீட்டிற்கு தெற்குப்பக்கத்தில் பாராசூட்டில் ஒருவர் தரையிறங்குவதைப் பார்த்திருக்கிறார். உடனே கிராமத்தில் உள்ள இளைஞர்களைத் தொடர்புகொண்டு தான் பார்த்ததை விளக்கியுள்ளார். இப்படித்தான் பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது.
எந்த நாடு?
பாதுகாப்பிற்காகத் கைத்துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்த அபிநந்தன் எழுந்து சுதாரிப்பதற்குள் மக்கள் கூட்டம் அவரைச்சுற்றி வளைத்தது. அப்போது அவர் இது இந்தியாவா? பாகிஸ்தானா? எனக் கேட்க, கூட்டத்திலிருந்த இளைஞன் ஒருவர் இதுவும் ஒரு காலத்தில் இந்தியாவாகத்தான் இருந்தது என்றிருக்கிறார். தன்னுடைய கைத்துப்பாக்கியை நீட்டி, இந்த இடத்தின் பெயர் என்ன? என்று மிரட்ட அதே இளைஞர் கில்லான் (Qilla’n) என்று பதிலளித்திருக்கிறார்.

இந்தியாவின் இறையாண்மையை போற்றும்படி சில வாசகங்களை முணுமுணுத்தபடி, என் முதுகில் காயம் ஏற்பட்டிருக்கிறது, குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா? என்ற அபிநந்தனிடம் பாகிஸ்தான் ராணுவம் வாழ்க எனக் கூச்சலிட்டிருக்கின்றனர் இளைஞர்கள். அப்போது துப்பாக்கியை வானத்தை நோக்கிச்சுட்டு பின்வாங்கியிருக்கிறார் அபிநந்தன். இதனால் கோபமடைந்த இளைஞர்கள் கற்களால் அவரைத் தாக்கத்தொடங்கினர்.
ரகசிய ஆவணங்கள்
பின்னோக்கி நடந்து அங்கிருந்த சிறு குட்டை ஒன்றில் குதித்திருக்கிறார் அபிநந்தன். அப்போது அவர் பதுக்கி வைத்திருந்த சில வரைபடம் மற்றும் சில காகிதங்களை வாயில் போட்டு விழுங்க எத்தனித்தார். சில காகிதங்களை தண்ணீரில் கரைத்துவிட்டார். அவருடைய வேகத்தைப் பார்த்தபோது நிச்சயம் அது ரகசிய ஆவணமாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார் சவுத்ரி.

துப்பாக்கியை கீழே போடுமாறு ஊர்மக்கள் வற்புறுத்த அபியும் அதற்கு இசைந்திருக்கிறார். அப்போது ஒருவன் அவருடைய காலில் கல்லால் எறிந்திருக்கிறான். இருபுறமும் கைகளால் பிணைக்கப்பட்ட அபிநந்தனை சிலர் தொடர்ந்து தாக்கியிருக்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர் அவரை அடிக்கவேண்டாம் என தாக்குதல்காரர்களைக் கண்டித்திருக்கின்றனர். இதற்கிடையே ராணுவ அதிகாரிகள் விரைந்துவந்து அபிநந்தனை ஊர்மக்களிடம் இருந்து மீட்டு தங்களுடைய இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
ஹோரா கிராமத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பிம்பர் (Bhimber) நகரத்திற்கு அபிநந்தன் உரிய பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய வாகனத்தில் அழைத்துச்சென்றிருக்கின்றனர். அப்போது இருமருங்கிலும் நின்றிருந்த மக்கள் பாகிஸ்தான் வாழ்க, பாகிஸ்தான் ராணுவம் வாழ்க என முழக்கம் இட்டார்கள்.
அபிநந்தனிடம் பாகிஸ்தான் கைப்பற்றியதாக சொல்லும் பொருட்கள்



குறிப்பு
அபிநந்தனைக் கைது செய்ததை மையமாக வைத்து பாகிஸ்தான் பத்திரிக்கையான டான் (Dawn) வெளியிட்ட செய்தியின் மொழிபெயர்ப்பு இதுவாகும்.
இராசபாாாளையம் நகராட்சி
இந்தியா வா பாக்கிஸ்தானn
அரசு அறிவிப்பு 50% வீட்டு வரி உயர்வு
ஆனா நிலை 15 மடங்கு உயர்வு புரோக்கராக அரசு ஊழியர்கள்