சினிமா டிக்கெட் விலை குறைகிறது – மத்திய அரசு முடிவு!!

0
40
GST MOVIE TICKETS
Credit: UNI

இன்று டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சிலில் சில பொருட்களுக்கு வரி குறைப்பு கொண்டுவர இருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அதன்படி டிவி, கியர் பாக்ஸ், டிஜிட்டல் கேமரா, வீடியோ கேம் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி யில் அதிரடியான மாற்றங்களை இந்த கவுன்சில் முன்னெடுத்திருக்கிறது. இதனால் இவற்றின் விலை கணிசமாகக் குறைய இருக்கிறது.

gst
Credit: Business Today

மாஸ்டர் பிளான்

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பாஜக படு தோல்வி அடைந்தது. இதனை அடுத்து அடுத்த ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அந்தக் கட்சி உள்ளது. இதனை உறுதிபடுத்தும் விதமாகவே மோடி ஜி.எஸ்.டி வரி விதிப்பில் தள்ளுபடி செய்யப்படும் என பேசி வந்தார். சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் பேசும்போது கூட ஆடம்பரப் பொருட்களுக்கு மட்டுமே 28% ஜி.எஸ்.டி விதிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் பொதுமக்கள் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி மட்டுமே விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

arun-jaitley
Credit: NDTV

இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று டெல்லியில் கூடிய கவுன்சிலில் பலரும் எதிர்பார்த்தது போன்றே அதிரடி வரிக்குறைப்பு பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

வரிக்குறைப்பு

அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஆடம்பர பொருட்களுக்கு விதிக்கப்படும் 28 சதவீத உயர் ஜிஎஸ்டி வரி பிரிவில் இருந்து 7 பொருட்கள் 18 சதவீத வரி பிரிவுக்கு கொண்டு வரப்பட்டன.

டிஜிட்டல் கேமரா, 32 இஞ்ச் டிவி, கியர் பாக்ஸ், வீடியோ கேம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இதுபோலேவே சினிமா டிக்கெட்டுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு மேற்பட்ட சினிமா டிக்கெட்டுக்கு தற்போது 28 சதவீத வரி விதிக்கப்படும் நிலையில் இது 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

100 ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட்டுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத வரி 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இந்த புதிய வரி விகிதங்கள் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.