இதைச் செய்யாமல் விட்டால் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 10,000 பிடிக்கப்படும்

0
319
RBI
Credit: Jagran

பதிய வருடத்திற்கான திட்டங்கள் எல்லாம் எடுக்கப்பட்டு விட்டதா? ஆரோக்கியம், வேலை, வேண்டாத பழக்கங்கள் என எல்லாவற்றிலும் மாறுதலைக் கொண்டுவர நினைத்திருப்பீர்கள். அதற்கெல்லாம் முன்னர் உங்கள் வங்கிக் கணக்கில் செய்ய வேண்டிய இந்த 5 விஷயங்களை மறந்துவிடாதீர்கள். ஏனெனில் இதனால் உங்களுக்கு ரூபாய் 10,000 வரை இழப்பு ஏற்படலாம்.

income-tax-return-
Credit: Livemint

வருமான வரி

வருமான வரி செலுத்தும் நபர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்களது வரியை மறக்காமல் செலுத்திவிடவும். இல்லையேல் அபராதமாக 10,000 ருபாய் நீங்கள் கட்ட வேண்டியிருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி வருமான வரி இலாகாவில் புதிய சட்டங்களை இயற்றியுள்ளது. அவை என்ன தெரியுமா?

RBI – புதுத் திட்டம்

பழைய விதிகளின்படி வருமான வரி செலுத்தும் கடைசி தேதிக்குள் பணத்தினைச் செலுத்தாதவர்களுக்கு 5000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இனி வரும் அடுத்த ஆண்டில் இந்த அபராதத் தொகையானது 10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி முதல் தேதியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதிக்குள் காலம் கடந்து வரி செலுத்துபவர்களுக்கு அபராதத் தொகை 10,000 ஆக இருக்கும்.

RBI
Credit: Jagran

பழைய ATM கார்டுகள்

பழைய காந்தப்பட்டை (Magnetic-Stripe Cards) பொருத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் செல்லுபடியாகாது என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக EMV சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை உங்கள் வங்கியில் பெற்றுக்கொள்ளவும்.

 செக் புக்

தற்போது நீங்கள் வைத்திருக்கும் செக் புக் அடுத்த ஆண்டின் முதல் தேதியிலிருந்து காலாவதியாகிவிடும். எனவே புது CTS-2010 ரக செக் புத்தகத்தை உங்களுடைய வங்கியில் விண்ணப்பித்து வாங்கிக்கொள்ளவும்.

Credit Card With Gold Chip
Credit: How To Geek

தொலைபேசி எண்

நெட் பேங்கிங் எனப்படும் இணைய வழி வங்கிச் சேவைகளை உபயோகிக்க, உங்களுடைய அலைபேசி எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து விடுங்கள். உங்களுடைய வங்கிக் கணக்கு இருக்கும் கிளையில் அதற்குரிய விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்தளிப்பதன் மூலம் நீங்கள் புது எண்ணை கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம்.