ஓட்டு போட்டு செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு!!

0
51
voting
Credit: India Aware

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் புதிய அறிவிப்பு ஒன்றினை அம்மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒட்டுப்போட்ட கையுடன் ஒரு செல்பி எடுத்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படத்திற்கு 7000 பரிசு என அறிவிக்கப்பட்டிருகிறது.

voting
Credit: India Aware

மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி மட்டுமே உள்ளது. இந்தத் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு மொத்தம் 7,84,405 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.81 லட்சம்தான். ஆனால் 4.02 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். இந்த மக்களவை தேர்தலில் புதிதாக அல்லது முதல் முறையாக 52,556 பேர் உள்ளனர்.

எனவே முதல் முறை வாக்களிக்க இருக்கும் நபர்களின் எண்ணிகையை அதிகரிக்கவே இந்தத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செல்பி போட்டி

செல்பி போட்டிக்கான விதிமுறைகளும் ரொம்ப சிம்பிள்தான். முதல் முறையாக வாக்களிப்பவர்கள் வாக்குச்சாவடியில் இருந்து ஒரு செல்பி, பின்னர் தாங்கள் வாக்களித்தற்கு அடையாளமாக விரலில் வைக்கப்பட்ட அடையாள மை அல்லது வாக்காளர் அடையாள அட்டையுடன் செல்பி எடுத்து தேர்தல் அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பினால் போதும். இதற்கான ட்விட்டர் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் புகைப்படத்தைப் பதிவு செய்யலாம்.

Selfie-contest-for-first-time-voters-in-Mizoram
Credit: Harmukh News

சிறந்த செல்பி எடுத்து அனுப்பியவர்களின் படங்களில் சிறந்த 3 படங்களுக்கு தேர்தல் ஆணையம் பரிசு வழங்கும். சிறந்த முதல் படத்துக்கு ரூ.7,000, இரண்டாவது சிறந்த படத்துக்கு ரூ.5,000ம், 3வது படத்துக்கு ரூ.3,000 மும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. மிசோர மாநில தேர்தல் அணையத்தின் இந்தப் புதிய அறிவிப்பு இந்தியா முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.