ரூ.1,76,000 கோடி சொத்து உள்ள ஒரே தமிழக வேட்பாளர் இவர் தான்!

0
77
mohan-raj-candidate-affidavit

இந்தியாவின் பணக்கார வேட்பாளர் இவராகத் தான் இருப்பார்.

தமிழகத்தில் கடந்த மார்ச் 19 ம் தேதி முதல் மார்ச் 26 ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடந்தது. வேட்புமனு தாக்கலில் வேட்பாளர்கள் தங்களது வங்கிக் கணக்கு விவரங்களையும் சேர்த்து வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்நிலையில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஜே.மோகன்ராஜ் என்ற வேட்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ‘ஜெபமணி ஜனதா கட்சி’ என்ற கட்சியின் சார்பில் மோகன்ராஜ் போட்டியிடுவதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வேட்புமனுவுடன் இணைத்துத் தாக்கல் செய்யும் படிவம் 26-ல் தன்னிடம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ரொக்கமாக இருப்பதாகவும் மோகன்ராஜ் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன் மனைவியிடம் ரூ.20,000 ரொக்கமும், ரூ.2,50‌,000 மதிப்புள்ள 13 சவரன் ‌நகையும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மயிலாப்பூரில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் ரூ.3 லட்சம் கடன் உள்ளதாக மோகன்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

கடன்கள் இருப்பதையும் குறிப்பிட்டுள்ள அவர், ரூ.4 லட்சம் கோடி உலக வங்கியில் கடன் வாங்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Perambur's Richie Rich: TN candidate says he has Rs 1.76 lakh crore cash, World Bank loanCredit: indiatoday

சிறப்பான விஷயமே இது தான்

  • மோகன் ராஜின் பிரமாணப் பத்திரத்தை அறிவழகன் என்ற அட்வகேட் கையொப்பம் இட்டு அங்கீகரித்துள்ளார்.
  • உலக வங்கியிடமே கடன் பெற்றிருப்பதாகவும் கூறியிருக்கிறார் மோகன்ராஜ்.
  • அதையும் தாண்டி, தேர்தல் ஆணையம் அவரது வேட்புமனுவையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
  • அவருக்கு பச்சை மிளகாய் சின்னமும் ஒதுக்கிவிட்டது.

எல்லாம் எவ்வளவு சாதாரணமாக நடக்கிறது பாருங்கள்.

இது தொடர்பாக யூடுபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மோகன் ராஜ், ‘தேர்தல் நடைமுறையில் எவ்வளவு குளறுபடிகள் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டத்தான் இப்படி தவறான தகவல்களைத் கொடுத்தேன். இங்கு வேட்பாளர்கள் காட்டும் சொத்துக் கணக்குகள் அனைத்தும் எப்படிப்பட்டவை என்பதற்கு என் வேட்புமனுவே சாட்சி. இதற்காக என் மேல் வழக்குத் தொடர்ந்தால் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்கிறார். மேலும், “இங்கு வேட்பாளர்கள் தரும் தகவல்கள் அனைத்துமே தவறானவை தான்” என்கிறார் மோகன் ராஜ்.

இது குறித்து உங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, நீதி மன்றத்துக்கு செல்வேன் என்றும் கூறுகிறார்.

எல்லா அரசியல்வாதிகள் கூறியிருக்கும் சொத்து மதிப்பு உண்மை எனில், எனது சொத்து மதிப்பும் உண்மை தான் என்கிறார் மோகன்ராஜ்.

விசாரணையில், “என் சொத்துக்கள் சுவிஸ் வங்கியில் இருப்பதாக நான் கூறுவேன், நீங்கள் கருப்பு பணத்தை திருப்பி விட்டால், என் பெயரும் அந்த பட்டியலில் இருக்கும் என்பேன்” என்கிறார் துணிச்சலுடன்.

மோகன்ராஜ் காவல்துறையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனக்கு சொந்தமாக வீடு உள்ளதை பிரமான பத்திரத்தில் கூறவில்லை.

ஏற்கனவே, மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் சர்ச்சை இருக்கும் நேரத்தில், தேர்தல் ஆணையம் இப்படித்தான் வேட்பு மனுவை பரிசீலித்து ஏற்றுக்கொள்கிறதா என்றே தோன்றுகிறது.

நாம எல்லோரும் இப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்துக்கு ராயல் சல்யூட் தருவோம்!

[zombify_post]