வட சென்னையை கலக்கும் நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள்!

Date:

இந்தியாவில் வேறு எந்த கட்சியும் இவ்வாறு செய்ததில்லை. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு குறித்து பேசும் கட்சிகள் கூட ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அப்படி நிறுத்தப்படும் பெண் வேட்பாளர்களில் பலர் பாரம்பரியமாக குடும்ப அரசியல் பின்புலம் கொண்டவர்களாகவே உள்ளனர்.

காளியம்மாளின் எளிமையான தோற்றமும், புள்ளி விவரங்களுடன் கூடிய உறுதியான பேச்சும் மக்களை விரைவாக ஈர்த்துவிட்டது.

ஆனால், நாம் தமிழர் கட்சியோ நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பெண்களுக்கு 50% தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. 20 தொகுதிகளில் ஆண்களும், 20 தொகுதிகளில் பெண்களும் அக்கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். பெரும்பாலும் இளைஞர்களைக் கவர்ந்த நாம் தமிழர் கட்சி, படித்த இளம் பெண்களது வாக்குகளையும் பெற இது குறிப்பிடத்தக்க அளவில் உதவக்கூடும்.

naam-tamilar-party-symbol-chinnam-vivasayi
naam-tamilar-party-symbol-chinnam-vivasayi

இந்நிலையில், சில வாரங்களாக கட்சியின் வட சென்னை வேட்பாளர் காளியம்மாள் அவர்களுக்கு திடீரென இணையவாசிகள் பலர் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. காரணம், காளியம்மாளின் எளிமையான தோற்றமும், புள்ளி விவரங்களுடன் கூடிய உறுதியான பேச்சும் மக்களை விரைவாக ஈர்த்துவிட்டது.

படித்தது சீர்காழியிலுள்ள தனியார் கல்லூரியில் பி.காம். பிறகு ஐ.எ.ஏஸ் தேர்வுக்குப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று தோன்றியதாகக் கூறுகிறார். தன் மீனவ சமுதாயத்துக்காகப் பல போராட்டங்களில் ஈடுபடுவது, மீனவர்கள் பிரச்சினையை வெகுமக்கள் கவனத்துக்குக் கொண்டு செல்வது போன்ற செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் காளியம்மாள். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்த இவரை அக்கட்சி வேட்பாளராக்கி இருப்பதற்கு அவரது புள்ளி விவரங்களுடன் கூடிய பேச்சே காரணம்.

‘எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஆட்சியாளர்களிடம் கேட்டுக் கேட்டே சோர்ந்து போய் விட்டோம். அதனால் தான் மக்கள் நலத் திட்டங்களை வகுக்கும் இடத்தில் ஒரு குடிமகளாக இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் நுழைந்தேன்’ என்கிறார் காளியம்மாள்.

kali-ammal-ntk-candidateநாகப்பட்டினத்தைச் சேர்ந்தவராக இருப்பினும், வடசென்னை போன்ற உடல் உழைப்பு தொழிலாளர்கள், மீனவ சமூக மக்கள் நிறைந்துள்ள பகுதி தனக்குப் பழக்கப்பட்டது தான் என்கிறார். தொகுதியின் தேவையை, நிலவரத்தை அறிந்தே வைத்திருக்கிறார் காளியம்மாள்.

காளியம்மாள் கூறும் மூன்று முக்கிய பிரச்சினைகள்

  • வடசென்னையில் கடுமையான குடிநீர்ப் பிரச்சினை உள்ளது.
  • மக்களின் அடிப்படைத் தேவையான கழிப்பறை போதுமான அளவில் இல்லை.
  • தொழிற்சாலைகளின் கழிவு கடலில் கொட்டப்படுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

பரப்புரையின் சில குறிப்பிடத்தக்க பேச்சுக்கள்

  • வீட்டை நிர்வகிக்கத் தெரிந்த பெண்களுக்கு நாட்டை ஆளத் தெரியாதா?
  • நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மக்களின் உரிமைகளைக் கேட்டுபெறுவேன். இல்லையேல் மக்களின் கோரிக்கைகள் நிறைவேறும்வரை நாடாளுமன்றத்திலேயே போராட்டங்களை மேற்கொள்வேன்.
  • சிட்டுக்குருவியைச் சுட்டா அதை கேட்க சட்டம் இருக்கு. ஆனா மீனவர்களை சுட்டால்… எங்களுக்கு யாரு இருக்கா?

தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர். அந்த மாற்றத்திற்கான கட்சியாகத் தான் நாம் தமிழர் கட்சி உள்ளது. மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து அதனைச் சரி செய்யும் திட்ட வரைவு எங்களிடம் தயார் நிலையில் உள்ளது. நாங்கள் மக்களை நம்பியே தேர்தலில் நிற்கிறோம் என்றும் கூறுகிறார் காளியம்மாள்.

முதல் கோரிக்கை இது தான்

‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட கடலோரங்களை முறைப்படுத்துதல் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்’ என்பதே என்னுடைய முதல் கோரிக்கையாக இருக்கும் என்கிறார் காளியம்மாள்.

“நாடாளுமன்றத்தில் மீனவர்களின் குரலும் ஒலிக்க வேண்டும் என்று என்னை போன்ற ஒரு சாதாரண மீனவப் பெண்ணை சீமான் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார்” என்கிறார் காளியம்மாள்.

இந்து தமிழ் திசையில் வெளியான இவரது பேச்சை இங்கே கேளுங்கள்.

காளியம்மாள் போன்ற எளிமையான வேட்பாளர்களும், அவர்களின் பரப்புரையும் தொடர்ந்து ஒரே மாதிரியான கட்சிகளுக்கு வாக்களிக்கும் மக்களது எண்ணத்தை ஓரளவுக்காவது மாற்றும் என்று நம்புவோம்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!