ட்விட்டரில் ட்ரெண்டாகும் சீமான் கட்சியின் புது சின்னம் – நாம் தமிழர் கட்சியினர் மகிழ்ச்சி

0
285
seeman-introducing-party-symbol

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தங்களது கட்சியின் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தினார். அந்த புதிய சின்னம் விவசாயி. 

naam-tamilar-party-symbol-chinnam-vivasayi
நாம் தமிழர் கட்சியின் புதிய சின்னம் – விவசாயி

இதனை தொடர்ந்து சீமான், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், சரணடைந்து வாழ்வதை விட, சண்டையிட்டு சாவதே மேல் என்ற கொள்கையை கொண்டதால் தான், கூட்டணியை புறக்கணித்து தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக கூறினார்.

நாம் தமிழர் கட்சி 18 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் என்றும், விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கவே எங்களுக்கு இந்த ‘விவசாயி’ சின்னம் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

பின்னர், வரும் 22ஆம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்பட்ட பின் வரும் 23 ஆம் தேதி மயிலை மாங்கொல்லையில் வைத்து ஒட்டுமொத்தமாக வேட்பாளர்களை அறிவிப்போம் என்றும் கூறினார்.

விவசாயிகளையும் விவசாயத்தையும் காக்கவே எங்களுக்கு விவசாயி சின்னம் கிடைத்துள்ளது – சீமான்

பின்னர், நாம் தமிழர் கட்சியின் தம்பிகள் தங்களது புதிய சின்னத்தின் படத்தை ட்விட்டரில்  என்ற ஹாஷ்டாக் கொண்டு பகிர்ந்து வந்தனர். தற்போது இந்த ஹாஷ்டாக், 12 ஆயிரம் ட்வீட்களுடன் ட்ரெண்டிங்கில் முதல் 10 இடங்களுக்குள் இருந்து வருகிறது. சீமானின் ட்விட்டர் (அதிகாரபூர்வமானதா என தெரியவில்லை)பக்கத்தில் இந்த வீடியோயோவும் வெளியாகியுள்ளது.

 

தேர்தலுக்கு 30 நாட்களே உள்ள நிலையில், சீமானின் இந்த புதிய சின்னம் மக்கள் மனதில் பதியுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.