மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சி எங்கு போட்டியிடுகிறது? என்ற விவரத்தை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். புதுச்சேரி மாநிலத்தின் தொகுதிப் பங்கீட்டில் காங்கிரசோடு இழுபறியில் இருந்த வந்த திமுக கடைசியாக 10 இடங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் விளைவாக இந்த தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

மேல்மட்ட காங்கிரஸ் முக்கிஸ்தர்களின் அறிவுரையின் படியே இந்த தொகுதிப் பங்கீடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
திமுக – 20, காங்கிரஸ் – 09, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, விசிக – 2, மதிமுக, ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் போட்டியிடுவதற்கு தி.மு கழகம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் அவை எந்த தொகுதிகள் என்பது இன்று வெளியிடப்பட்டன.
எந்த கட்சி? எந்த தொகுதி?
மதிமுக – ஈரோடு
விசிக – சிதம்பரம், விழுப்புரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – மதுரை, கோவை.
இந்திய கம்யூனிஸ்ட் – நாகை, திருப்பூர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – ராமநாதபுரம்
ஐஜேகே – பெரம்பலூர்
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி – நாமக்கல் தொகுதி.
காங்கிரஸ்
திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி

திமுக
தென்சென்னை, மத்திய சென்னை,வடசென்னை, ஸ்ரீ பெரும்பத்தூர், காஞ்சிபுரம் (தனி),அரக்கோணம்,வேலூர், திருவண்ணாமலை, சேலம், கடலூர்,தர்மபுரி, திண்டுக்கல்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை,நீலகிரி (தனி), பொள்ளாச்சி, தென்காசி (தனி), தஞ்சாவூர், தூத்துக்குடி, நெல்லை.
திமுக – காங்கிரஸ் கூட்டணி
தேர்தல் வரலாற்றைப் பொறுத்தரை கடைசியாக நடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் – திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவிகிதம் 14.4% ஆகும்.
அடுத்ததாக 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசின் பலம் சற்றே அதிகரித்தது என்றே சொல்லலாம். காங்கிரஸ் கட்சி அத்தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதம் 15.3% ஆகும்.
2014 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் தேர்தலை சந்தித்த காங்கிரசால் வெறும் 4.3 சதவிகித வாக்கைத்தான் பெற முடிந்தது. அதே சமயத்தில் பாஜக பெற்ற வாக்கு 5.6 சதவிதமாகும்.
வெற்றி கிடைக்குமா?
2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தன. அதற்கடுத்த தேர்தலில் கூட்டணி கலைந்ததும், ஆட்சி பறிபோனதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு வருட அதிமுக தொடர் ஆட்சி, ஊழல் குற்றச்சாட்டுகள், பிஜேபி எதிர்ப்பு ஆகியவை இந்த கூட்டணிக்கு வெற்றியைப் பெற்றுத்தரும் என கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் எண்ணுகின்றன. எப்படியும் மே 23 ஆம் தேதி இதற்கான விடை தெரிந்துவிடும்.