இந்தியா முழுவதும் உள்ள கண்கள் உத்திர பிரதேச மாநிலத்தைக் குறி வைத்திருக்கின்றன. நாட்டிலேயே அதிக நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உ.பி. அதேபோல் அதிக பிரதமரைத் தந்த மாநிலம் என்ற பெருமையையும் உ.பி க்கு உண்டு. அம்முறையும் அதேதான் நடக்கப்போகிறது. இந்த மாநிலத்தில் இருக்கும் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியாவின் பல பெரும்புள்ளிகள் மொத இருக்கின்றனர்.

நட்சத்திரத் தொகுதி
பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி, மேனகா காந்தி, வருண்காந்தி, நடிகை ஹேமமாலினி, ஸ்ம்ருதி இராணி, ராஜ்நாத் சிங், அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ் என பெரும் பட்டாளமே களத்தில் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் களம் காண்கிறார். அதே தொகுதியில் இவரை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இராணி நிற்கிறார். கடந்த 2004 ஆம் ஆண்டுமுதல் அமேதியில் ராகுல் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் இதே தொகுதியில் ராகுலை எதிர்த்துக் களம் இறங்கிய ஸ்மிருதி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தொகுதிக்கு அடிக்கடி சென்று மக்களை சந்தித்து வருவதால் இம்முறை வெற்றிபெற இரு கட்சிகளுமே கடுமையாக உழைப்பை அளிக்கவேண்டும் என அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

வாரணாசி தொகுதியில் வழக்கம்போல் மோடி போட்டியிடுகிறார். பாஜகவின் கோட்டையான லக்னோவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிற்கிறார். முலாயம் சிங் இந்த முறை ஆசம்கர் தொகுதிக்குப் பதில் மைன்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். ஆசம்கர் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
பாஜகவின் வருண்காந்தி இம்முறை பிலிபித் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்ற தேர்தலில் இவர் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திரா காந்தியின் இன்னொரு மருமகளான (சஞ்சய் காந்தி மனைவி) மேனகா காந்தியின் தொகுதி பிலிபித். ஆகவே இங்கு பாஜகவின் வெற்றி எளிதாக இருக்கும் என்று நம்பலாம்.
இடைதேர்தல் தோல்வி
அகிலேஷ் – மாயாவதி திடீர் கூட்டணியில் காங்கிரசுக்கு வாய்ப்பளிக்காமல் போனது சுவாரஸ்யத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. உத்திர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் எம்.பி.யாக இருந்த கோரக்பூர், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா எம்.பி.யாக இருந்த புல்பூர் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அக்கட்சி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே எந்தக்கட்சி உத்திரப்பிரதேசத்தைப் பிடிக்கும் என ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்ப்பில் காத்துக்கிடக்கிறது.