தமிழகத்தில் தவிடுபொடியான பாஜக பிளான்

0
45
bjp

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளிடப்பட்டன. இதில் பாஜக பிரம்மாண்ட வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. இதன்மூலம் இரண்டாம் முறை மோடி பிரதமாகிறார். வரும் 26 ஆம் தேதி மோடியின் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

modi-won

அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஐந்து பெரும் தோல்வியடைந்துள்ளார்கள். அதிமுக கூட்டணிக்கு மொத்தமே 1 இடம்தான் கிடைத்திருக்கிறது. தேமுதிக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனைத்து தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். தேனி தொகுதியில் தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமார் காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்.

திமுகவின் பிரம்மாண்ட வெற்றி

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் திமுக 37 இடங்களில் வெற்றிவாகை சூடியிருக்கிறது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும் 13 இடங்களை கைப்பற்றி 23 ஆண்டுகளுக்குப் பிறகு 100+ எம்.எல்.ஏ க்களுடன் சட்டப்பேரவையில் நுழைய இருக்கிறது திமுக.

mk-stalin

அந்த கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழி, தமிழச்சிதங்கப்பாண்டியன், டி.ஆர்.பாலு, கவுதம சிகாமணி, கார்த்திக் சிதம்பரம், எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஜோதிமணி, தொல்.திருமாவளவன் ஆகியோர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். போன முறை அதிமுக அடைந்த பிரம்மாண்ட வெற்றியை இம்முறை திமுக தன்வசமாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் பலனளிக்காத பாஜக பிளான்

தமிழகத்தில் பாஜக சார்பில் கன்னியாகுமரியில் போன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தர்ராஜனும், கோவையில் சி.பி.நாராயணனும், சிவகங்கையில் அந்த கட்சியின் தேசிய செயலாளரான எச்.ராஜாவும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். மொத்த இந்தியாவில் வெற்றியை ஏந்தினாலும் தமிழகம் பாஜகவிற்கு கைகொடுக்கவில்லை என பழைய வரலாறு மீண்டும் படிக்கப்பட்டிருக்கிறது.

தேமுதிக சோகம்

இதுவரை தனது கட்சி சார்பில் ஒரு எம்.பியைக் கூட டெல்லிக்கு அனுப்பிவைக்காத கட்சி என்னும் பெயரை இந்த தேர்தலிலும் தக்கவைத்துக்கொண்டது தேமுதிக. அந்த கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமான எல்.கே.சுதீஷ் திமுகவின் கலாநிதி வீராசாமியிடம் தோற்றிருக்கிறார்.

bjp

ஆக இந்தத்தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அரசு தனது ஆட்சியை கைப்பற்றிகொண்டதைத் தவிர பெரிதாக ஒன்றும் அந்த கூட்டணியால் சாதிக்க முடியவில்லை என்பதே உண்மை.