தேசிய வாக்காளர் தினமான இன்று (25.01.2021) தேர்தல் ஆணையம் “மின்னணு வாக்காளர் அடையாள அட்டை”யை அறிமுகம் செய்கிறது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், e-EPIC (Electronic Electoral Photo Identity Card) திட்டத்தை, ஐந்து புதிய வாக்காளர்களுக்கு டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கி துவக்கி வைக்கிறார். டிஜிட்டல் வடிவங்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை அரசாங்கம் வெளியிடுவது இதுவே முதல் முறை. ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற பிற அடையாள சான்றுகள் ஏற்கனவே டிஜிட்டல் வடிவத்தில் கிடைக்கின்றன. வாக்காளர் பட்டியலில் இடம்பெற புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு தற்போது இது கிடைக்கும்.
மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்:
1) மின்னணு வாக்காளர் அடையாள அட்டை, திருத்த முடியாத பாதுகாப்பான PDF பதிப்பாக இருக்கும்.
2) ஜனவரி 25 முதல் ஜனவரி 31 வரையிலான முதல் கட்டத்தில், வாக்காளர் அட்டைகளுக்கு புதிதாக விண்ணப்பித்து, தங்கள் மொபைல் எண்களை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள புதிய வாக்காளர்கள் மட்டுமே தங்கள் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும்.
3) அடுத்த மாதம் முதல் அனைத்து வாக்காளர்களும் தங்கள் தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையத்துடன் இணைத்தால், அவர்களின் டிஜிட்டல் நகல்களை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.
4) தங்கள் தொலைபேசி எண்களை தேர்தல் ஆணையத்துடன் இணைக்காத வாக்காளர்கள், தொலைபேசி எண்களை இணைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகே பதிவிறக்கம் செய்வதற்கான வசதி வழங்கப்படும்.
5) புதிய வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை அச்சுநகலாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
6) மின்னணு மயமாக்கல் என்பது வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கேயாகும்.
7) மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளை டிஜிலாக்கரில்(Digilocker) சேமித்து வைக்க முடியும்.
8) மின்னணு அட்டைகள் பாதுகாப்பான QR குறியீட்டைக் கொண்டிருக்கும்.
9) தேர்தல் ஆணையத்தின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வாக்காளர் அட்டையின் டிஜிட்டல் பதிப்பு தொடங்கப்படுகிறது.
மின்னணு வாக்காளர் அடையாள அட்டைகளை பதிவிறக்குவது எப்படி:
1) Log on to https://voterportal.eci.gov.in/
2) Click on the option of download E-EPIC.
3) இன்று காலை 11.14 மணி முதல் பதிவிறக்கம் செய்ய முடியும்.