Home அரசியல் & சமூகம் போலியான ஒப்பனைப் பொருட்கள் விற்பனை - அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

போலியான ஒப்பனைப் பொருட்கள் விற்பனை – அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இணைய விற்பனைத் தளங்களில்  ‘போலி’ ஒப்பனைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் DCGI அந்நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்றைய அவசர கால கட்டத்தில் மக்கள் நின்று பார்க்க நேரமின்றி  ஓடிக் கொண்டே இருக்கின்றனர். தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கூட கடைகளில் போய் வாங்க நேரமின்றி இணையத்தில் வாங்குவது தற்போது பரவலாகி வருகிறது. மக்களிடையே இணையதள வர்த்தகம்  என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் தான் என்பது பலராலும் மறுக்க முடியாத உண்மை. இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்டவை சமீப காலமாக டெபிட்/ ஏடிஎம் கார்டுகள் மூலம் ‘உடனடிக் கடன்’ பெற்றுப் பொருட்களைக் கடனில் வாங்கலாம் என்று விளம்பரம் செய்து வருகின்றன.

இந்த முறையின் கீழ் அதிகபட்சம் 60,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களைச் சுலப தவணை முறையில் கடனாக வாங்க முடியும். என்றாலும், அதனைச் செய்யப் பல கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் உள்ளன.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 5, 6 ஆம்தேதிகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருந்து ஆய்வாளர்கள் சோதனை நடத்தினார்கள். இந்திய மருந்துக் கட்டுப்பாடு மையம் நடத்திய இந்தச் சோதனையில், உரிய அங்கீகாரம் பெறாமல் தயாரிக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்புகளும், பதிவுச் சான்றிதழ் இல்லாத இறக்குமதிப் பொருள்களும் இணையதளங்களில் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. மேலும், தரச்சான்றளிக்கும் பிஸ் (BIS) நிறுவனத்தால் ஏற்கப்படாத மூலப்பொருள்களின் சேர்க்கையால் தயாரிக்கப்பட்ட பொருள்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சோதனைகளின் முடிவில், போலி மற்றும் கலப்பட ஒப்பனைப் பொருள்களை விற்பனை செய்வதாகக் கூறி அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களிடம்  விளக்கம் கேட்டு இந்திய மருந்துக் கட்டுப்பாடு மையம் (DCGI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸுக்குப் பத்து நாட்களுக்குள் உரிய பதில் அளிக்கத் தவறினால் தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. போலித் தயாரிப்புகளில், இறக்குமதி செய்யப்பட்ட பிரான்டட் நிறுவனத் தயாரிப்புகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு உரிய உரிமம் இல்லாமலும், தவறான மூலப்பொருள்களை கொண்டும் உற்பத்தி செய்யப்படும் தரமற்ற, போலியான பொருள்களை விற்பனை செய்வதும், விநியோகம் செய்வதும் டிரக்ஸ் & காஸ்மெட்டிக்ஸ் ACT 1940-ன் படி தண்டனைக்குரிய குற்றம் என்பது இந்த இணைய நிறுவனங்களுக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனியாவது, இணையதளங்களின் பொருட்களை வாங்குவதற்கு முன் ஒரு முறைக்குப் பலமுறை சிந்தியுங்கள் மக்களே.

 

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றளவும் மறக்கமுடியாத 10 சம்பவங்கள்!

கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் பதிவுகள் செய்யப்படுகின்றன. பல சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன. ஆனால் சில தருணங்களும், பதிவுகளும் வரலாறாக மாறி ரசிகர்களின் இதயங்களில் எப்போதும் புதியதாகவே இருக்கும். சில தருணங்கள்...
- Advertisment -

Copyrighted Content. You cannot copy content of this page