பண மூட்டை என்று டீத்தூள் லாரியை விரட்டிய மக்கள்!!

0
45
covai container

தேர்தல் நேரம். நாலா பக்கங்களிலும் புரட்சிப் புயல்கள் சுழன்று அடித்துக்கொண்டிருக்கிறது. உள்ளூர் அரசியல், தேசிய அரசியல் என டாபிக்குகள் கிடைப்பதால் மக்களும் உணர்ச்சிக்குழம்பாகவே இருக்கின்றனர். இப்படியான நேரத்தில்தான் கோவையில் நேற்று ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

container-coimbatoreஎத்தன கோடி?

கோவையில் உள்ள உக்கடம் ஆத்துப்பாலம் வழியாக நேற்றிரவு 11 மணியில் கண்டெய்னர் லாரி ஒன்று வேகமாக சென்றது. இதனைக் கண்டபொதுமக்கள் அந்த லாரியை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர். லாரி ஓட்டுனர் பிரகாஷிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி கேட்க பிரகாஷ் எந்தக் கேள்விக்கு பதில் சொல்வது எனத் தெரியாமல் திருதிருவென முழிக்க, எத்தன ஆயிரம் கோடி உள்ள இருக்குனு சொல்லிடு என கூட்டத்தில் ஒருவர் சப்தமிட்டிருகிறார். அத்தோடு பிரகாஷிற்கு சப்த நாடியும் ஒடுங்கிப்போயிருக்கிறது.

இந்த ஆயிரம் கோடி லாரி விஷயம் தீயாய் பரவ அந்த இடத்திற்கு மக்கள் வெள்ளம் போல் வரத்தொடங்கினர். வழக்கம்போல் பறக்கும்படை கடைசியாக வந்திருக்கிறது. போலிஸ் நடத்திய விசாரணையின் போது,  டிரைவர் பிரகாஷ் தான் கொண்டுசெல்வது டீத்தூள் தான் என்று கூறியுள்ளார்.

தடியடி

ஆனால் இதை நம்ப மறுத்த மக்கள் அதனைத் தங்கள் முன் திறந்துகாட்ட வேண்டும் என கோரினர். இதையடுத்து பொதுமக்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினார்கள். பொதுமக்கள் மறுத்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதன்பின் போலீசாரால் கண்டெய்னரின் பூட்டை உடைக்க முடியவில்லை. இதனால் லாரியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.

covai container அரசியல் கட்சியினர் முன்னிலையில் கண்டெய்னரை போலீசார் திறந்தனர். அதில் இருந்த பண்டல்களை சோதனையிட்டபோது அதில் 12 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள டீத்தூள்கள் மட்டுமே இருப்பது தெரியவந்தது. மேலும், இந்த டீத்தூள் வெள்ளக்கிணறுவில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

ஆட்சியர் அலுவலகம்

எனினும் லாரியில் உள்ள அனைத்து மூட்டைகளையும் இறக்கி சோதனையிட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதனால், அனைத்து மூட்டைகளையும் இறக்கி ஆய்வு செய்த பின்னரே கண்டெய்னர் லாரி விடுவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதுவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்படும் என்றும் கூறினார்கள். கோவையில் இந்த கண்டெய்னர் லாரியால் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த தேர்தலில் போது கோவை அருகே சுமார் ரூ.600 கோடி பணம் கண்டெய்னரில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.