மத்திய பட்ஜெட் 2019: முக்கிய திட்டங்கள் என்னென்ன?

Date:

17 வது மக்களவைத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றியைப்பெற்று தனிப்பெரும்பான்மையாக பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இந்த அமைச்சரவையில் நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தனது முதல் பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை கீழே காணலாம்.

மத்திய பட்ஜெட்
Credit:The Economic Times

பட்ஜெட் தாக்கல் செய்யும்போது மோடி அரசின் முந்தய ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்டப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது மேக் இந்தியா திட்டம் இந்தியாவின் வருமானத்தை அதிகரிக்கிறது. அந்த திட்டம் தொடர்ந்து ஊக்குவிக்கப்படும். மேலும் அந்நிய முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சந்திரயான், சுகன்யான் என விண்வெளித் துறையில் சாதனை படைந்து வருகிறது இந்தியா. டிஜிட்டல் இந்தியாவின் பலனை நாட்டின் கடைக்கோடி கிராமம் வரை கொண்டு செல்வதே அரசின் நோக்கம். அனைவருக்கும் வீடு, கழிவறை வழங்குவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்

ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய்!

2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்!

ஒரே நாடு, ஒரே மின்சாரம்!

ஒரே நாடு, ஒரே மின்சாரம் விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின் விநியோகம் செய்யப்படும்

ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்

ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் 3 கோடி பேர் பயன்பெறுவர்!

சிறு, குறு தொழில் வளர்ச்சிக்கு 350 கோடி ரூபாய்!

ஆண்டுதோறும் சராசரியாக 20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக இந்த ஆண்டு மட்டும் 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் ஏற்கெனவே அறிவித்தபடி முழுமையாக செயல்படுத்தப்படும்.

அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படும்!

சில்லறை மற்றும் வணிகம் உள்ளிட்டவற்றில் கூடுதல் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும். விமான போக்குவரத்துத் துறை மற்றும் ஊடகம் ஆகிய துறைகளிலும் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப்படும்!

விண்வெளித் துறைக்கு கீழ் புதிய அமைப்பு!

விண்வெளித் துறைக்கு கீழ் புதிதாக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு அதன் மூலம் விண்வெளித் துறையின் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!

ஏழைகளுக்கு வீடு..!

2022-ம் ஆண்டிற்குள் அல்லது 75-வது சுதந்திர தின விழா ஆண்டின்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊரக குடும்பங்களுக்கும் முழுமையான மின்சாரம் மற்றும் எரிபொருள் இணைப்பை பெற்றிருப்பார்கள். அடுத்தகட்டமாக நாடு முழுவதிலுமுள்ள 1.9 கோடி ஏழை குடும்பத்தினருக்கு 2022-ம் ஆண்டுக்குள் வீடு வழக்கப்படும்.

பசுமை சாலைகள்!

பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் பசுமை சாலைகள் சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்காத வகையில் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 80,250 கோடி ரூபாயில் 1,25,000 கி.மீ தூரத்துக்கான சாலைகள் அமைக்கப்படும்.

விவசாயிகளின் வருமானம் இருமடங்காக உயர்த்தப்படும்!

உணவுத் துறையில் தன்னிறைவு அடைந்த நாடாக இந்தியா மாறியதற்கு காரணமான விவசாயிகளுக்கு நன்றி. விவாசயத் துறையில் தனியார் பங்களிப்பு அதிகம் தேவைப்படுகிறது. எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறுவோம் என நம்பிக்கை உள்ளது. பருத்தி உற்பத்தியில் தற்போது இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. விவசாயிகளின் வருமானம் 2022-ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்துக்கான தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது மிகவும் முக்கியமான குறிக்கோள் என்றார்.

தூய்மை இந்தியா!!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 9.64 கழிப்பறைகள் இதுவரை கட்டப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 5.6 கோடி கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமமாக மாறியுள்ளது. காந்தியின் 150வது பிறந்த தினத்திற்குள் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பதே இலக்கு.

உலகின் சிறந்த கல்விநிறுவனப் பட்டியலில் இந்தியா!

உலகின் மிகச்சிறந்த கல்விமுறையாக நமது புதிய கல்விக்கொள்கை இருக்கும். என்சைக்ளோபீடியா போல காந்திபீடியா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு காந்தியக் கொள்கைகள் இளைஞர்களிடம் கொண்டு செல்லப்படும். கல்வித்துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்படும். உயர்கல்வி ஆணையம் உருவாக்கப்படும்.

ரோபோடிக்ஸ் போன்ற நவீன துறைகளில் இந்திய மாணவர்கள் பயிற்சி அளிக்க முயற்சி எடுக்கப்படும். எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப பணியாளர் பற்றாக்குறை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீடு!

சர்வதேச அளவில் பொருளாதாரம் மந்தமாக இருந்தபோதிலும் இந்தியாவில் முதலீடு அதிகரித்து வருகிறது. காப்பீட்டுத் துறையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படும். சில்லறை மற்றும் வணிகம், விமானத் துறை உள்ளிட்டவற்றில் கூடுதல் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்.

சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம்

ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் 3 கோடி பேர் பயன்பெறுவர்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 10% லிருந்து 12.5%-ஆக அதிகரிப்பு. இதனால் தங்கத்தின் விலை உயரும்.

வங்கிக் கடனில் மின்சார வாகனம் வாங்கினால், 1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு செய்யப்படும்.

புத்தகங்களுக்கு 5 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படும்.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஆதார்கார்டு வழங்கப்படும்!

நிர்மலா சீதாராமன் வெளியிட்ட இந்த பட்ஜெட்டைப் பாராட்டியும் விமர்சித்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!