இந்தியாவின் நிதியமைச்சராகிறாராஅமித்ஷா?

0
56
amitshah
Credit: The Sentinel

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருகிக்கிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றிபெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்திற்குள் நுழைய இருக்கிறது. இதற்க்காக இன்று மாலை டெல்லியில் அக்கட்சி நடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி மோடியை தலைவராக தேர்ந்தெடுக்க உள்ளனர். யார் யாருக்கு எந்த தொகுதி என்பதும் இன்று விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதில் அமித்ஷா வின் பெயர் அடிபடுகிறது.

arun-jaitley
Credit: NDTV

அருண்ஜெட்லிக்கு பதிலாக அமித்ஷா

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா இம்முறை அமைச்சர் பதவிக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக மேலிட வட்டாரங்கள் உறுதி செய்கின்றன. ஆகவே அவருக்கு உள்துறை அல்லது நிதித்துறை வழங்கப்படும். ஆனால் உள்துறை அமைச்சராக ஏற்கனவே ராஜ்நாத் சிங் இருப்பதால் அமித்ஷா விற்கு நிதித்துறை வழங்க அதிக வாய்ப்பிருக்கிறது.

amitshah
Credit: The Sentinel

அருண்ஜெட்லிக்கு ஓய்வு

கடந்த ஓராண்டாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்டு வரும் ஜெட்லிக்கு தற்போது திசு புற்றுநோய்க்கான சிகிச்சையும் அமெரிக்காவில் அளிக்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாகவே அவர் இந்த தேர்தலில் பங்கேற்கவே இல்லை. பாஜக ஆட்சியின் கடைசி பட்ஜெட்டையும் அருண்ஜெட்லி தாக்கல் செய்யவில்லை. அவருக்குப் பதிலாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. பாஜக கட்சியும் ஜெட்லிக்கு ஓய்வளிக்கும் மன நிலையில் தான் இருக்கிறது. ஆகையால் இந்தியாவின் அடுத்த நிதியமைச்சராக அமித்ஷா வருவதர்கான வாய்ப்புகள் மிகத்துல்லியமாக தெரிகின்றன. அப்படி அமித் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டால் அக்கட்சி விதிமுறைகளின்படி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்யவேண்டும். எனவே பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.