1998 முதல் 2014 வரை: இதுவரை வெளிவந்த கருத்துக்கணிப்புகளும், மக்கள் முடிவுகளும் ஒரு பார்வை

0
99
election-generic
Credit: Moneycontrol

நாடு முழுவதும் தேர்தல் அலை வீசி ஓய்ந்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலுடன் ஏழு கட்ட தேர்தலும் முடிவடைந்திருக்கிறது. கடைசியாக 59 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்ததும் கருத்துக்கணிப்புகள் வெளிவந்து இந்தியாவை உலுக்கிக்கொண்டிருக்கின்றன.

election-generic
Credit: Moneycontrol

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு கருத்துக்கணிப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றன. பிரதமரைத் தேர்வு செய்யும் தேர்தல் என்பதனால் நாடு முழுவதும் பிரம்மாண்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்தியாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு எப்போதுமே ஒரு தனி பரபரப்பு உண்டு. தற்போதும் அதே நிலைமை தான். சரி இந்தியாவில் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகள் எந்த அளவிற்கு துல்லியமாக இருந்திருக்கிறது? 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு தேர்தலை தவிர மற்ற ஆண்டுகளில் இந்த கருத்துக்கணிப்புகள் ஓரளவு உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே இருந்திருக்கிறது.

வாக்காளர்கள் வாக்களித்ததற்கு பின்னர் வாக்காளர்களிடம் எடுக்கப்படும் பேட்டிகளின் அடிப்படையில் இந்தக் கருத்துக்கணிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் 5% வரை பிழைகள் ஏற்படுவதாக நிபுனர்கள் கணிக்கிறார்கள். 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளை தேர்தல் முடிவு பொய்யாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல்களில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்படி இருந்திருக்கின்றன என்பதை பார்ப்போம்.

Credit: Hindustan Times