முட்டாளாகிப்போன மக்கள்… காரணம் யார் தெரியுமா?

Date:

இன்று ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்.

என்னை யாரேனும் முட்டாள் என்றால் எனக்கு கோபம் வரும். உங்களை அழைத்தால் உங்களுக்கும் கோபம் வரும்; வரவேண்டும்.

யாரையோ முட்டாள்கள் என்று அழைத்து, அவர்களுக்காக ஒரு நாளையே ஒதுக்கி கேலி செய்து கொண்டாடி தீர்க்கிறது இந்த சர்வதேச சமூகம். என்றாவது யார் முட்டாள்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? இன்று ஒரு நாள் மட்டும், நாம் முட்டாள் ஆகிறோமா அல்லது நாம் பிறரை முட்டாள்கள் ஆக்குகிறோமா? அவ்வளவு தான் முட்டாள்கள் தினமா? இல்லை இந்த வருடம் முழுக்க முட்டாளாக்கப்படுவதற்கு ஒத்திகையா இந்நாள்?

நான் முட்டாள் இல்லை என்று உரக்கச்சொல்வேன். நீங்களும் சொல்வீர்கள் என்று நம்புகிறேன். ஆனால், சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை நம்மை ஆள்பவர்கள், நம்மை முட்டாளாகத்தானே ஆக்கி வைத்திருக்கிறார்கள்.

இல்லையென்று மறுக்க முடியுமா?

நாம் (தமிழன்) ஒரு முட்டாளுங்க….
ரொம்ப நல்லா தெரிஞ்சவங்க
நாலு பேரு சொன்னாங்க
நாம் ஒரு முட்டாளுங்க……

தமிழன்‌ முட்டாளா? இதைக்கண்டு சினம் கொண்டு என்னை வசைபாடும் அனைத்து தமிழனுக்கும் எனது வாழ்த்துக்கள். ஏனெனில், தமிழன் என்ற‌ உணர்வு மேலெழுந்து, இன்னும் உங்களுள் இருப்பதைக்கண்டு நான் பெருமை கொள்கிறேன். ஆனால், இப்பதிவை படித்துவிட்டு சிந்தித்து பாருங்கள்… நாம் முட்டாள்களாக இருக்கிறோமா இல்லையா என்ற முடிவுக்கு நீங்களே வாருங்கள்.

காமராஜரை தோற்கடித்தது முதலே நாம் முட்டாள்களாகத்தான் வாழ்கிறோம்.

உண்மையை சொல்லப்போனால், காமராஜரை தோற்கடித்தது முதலே நாம் முட்டாள்களாகத்தான் வாழ்கிறோம். நமக்கு நல்ல அரசியலை அவர் கற்றுத்தரும் முன் நமது முந்தைய தலைமுறை அவரை தோற்கடித்தது. அடுத்த தலைமுறையான நாம் இன்று கொடும் அரசியல்வாதிகளால் தோற்கடிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். வள்ளுவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார், ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்று.

பல ஆண்டுகளாக முட்டாளாக இருப்பதை விடுங்கள். கடந்த ஒரு வருடமாகவே நம்மை முட்டாளாக்கியவர்கள் யாரென்றாவது நமக்கு தெரிகிறதா? குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், நம்மை முட்டாளாக்கியவர்கள் என, ஒரு நான்கு பேராவது தேறுவர். சரி, அந்த நான்கு பேர் யார்?

1.  மத்திய அரசு

விவசாயிகள் போராட்டம், மீனவர் போராட்டம், காவிரிப் பிரச்சினை முதல் இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் வரை ஒரு திடமான தீர்வு நமக்கு இன்னும் கிட்டவில்லை. நம் முயற்சிகள் அனைத்தும் வீணாகிவருகிறது. இதைப்பற்றி நன்கு அறிந்த ‘மத்திய அரசு’ எதையும் கண்டுகொள்ளவில்லை, எனில் அவர்கள் பார்வையில் நாம் முட்டாள்கள்தானே!

2. மாநில அரசு

பிரமிக்கத்தக்க தேர்தல் வாக்குறுதிகளை நமக்கு அளித்து ஆட்சிக்கு வந்துள்ள ஆளுங்கட்சி இத்தகைய மக்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் மத்தியில் நடத்தப்படும் கச்சேரிக்கு வாத்தியம் வாசித்துக் கொண்டு இருக்கிறது. எனில் ‘மாநில அரசின் பார்வையிலும்’ மக்களாகிய நாம் முட்டாள்களே!!

3. ஊடகங்கள் 

மக்களின் தூதுவன், உண்மை விளம்பி, அன்றாட சமூகப் பிரச்சினைகளை நம் பார்வைக்கு கொண்டு வரவேண்டிய ‘ஊடகங்கள்’, இன்று கலைக்கூத்தாடிகளைக் கொண்டாடியபடி, விளம்பரங்களை விலைக்கு வாங்கிபடி, ஒரு சில அரசியல் ஆதாயங்களுக்காக ஊடகம் என்ற பெயரில் நாடகத்தை நம் முன்னிலையில் நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதை அறிந்தும் அதையே நம்பிக்கொண்டிருக்கும் நாம் முட்டாள்களா இல்லையா!!!

4. மக்கள்

நல்ல தலைவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், கடமையும், வலிமையும் நம்மிடையே இருந்தும் இன்றளவிலும் ஒரு நல்ல தலைமையை உருவாக்க முடியாத நாம், இது மக்களாட்சி என்று கூறி பெருமைகொண்டு, மக்களாகிய நாமே நம்மை முட்டாள்களாக முடிசூட்டிக் கொண்டுள்ளோம். எனில் நாம் யார்? அடிமுட்டாள்கள் தானே!!!!

இவ்வளவு பேரும் முட்டாளாக்கிவிட்டார்களே என்று உண்மையில் நாம் கோபப்படவே கூடாது. ஏனெனில், காக்கா பிரியாணியை தின்றுவிட்டு உன்னி கிருஷ்ணன் குரல் வரவில்லை என்று நாம் எதற்காக கோபப்படவேண்டும்? நாம் தானே ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தோம். அனுபவிப்போம்.

இதிலிருந்து மீள நாம் செய்யவேண்டியது என்ன?

உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை. திடமான அரசியல் மாற்றத்திற்கு அடித்தளம் போட வேண்டும். அதற்கு இன்றைய இளைஞர்கள் ஒன்று திரண்டு (ஒய்வு பெற்றவர்களைத் தேர்ந்தெடுக்காமல்) அம்மாற்றத்தை உருவாக்கவேண்டும். வருடத்தில் ஒரு நாள் முட்டாளாக இருப்பதில் தவறில்லை. ஆனால் வருடத்தில் எல்லா நாளும் முட்டாளாக இருப்பது யார் தவறு? இதைப்பற்றிய சிந்தனை இந்த முட்டாள்கள் தினமான இன்றாவது நம்மிடையே எழ வேண்டும்.


முட்டாள்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

ஒரு சிறிய விளக்கம் உங்கள் பார்வைக்கு….

உண்மையில் ஏப்ரல் 1, ஒரு புத்தாண்டு தினமாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மார்ச் இறுதி வாரம் புத்தாண்டு வாரமாக கொண்டாடப்பட்டு, ஏப்ரல் மாதம் ஒரு புதிய ஆண்டின் தொடக்கமாக கருத்தப்பட்டு வந்தது. இது ஜூலியன் நாட்காட்டி முறைப்படி கணிக்கப்பட்ட ஒன்றாகும்.

1582 ஆம் ஆண்டு கிரிகோரியன்  நாட்காட்டி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டை அடிப்படையாக கொண்டு இந்த நாள்காட்டி முறை வடிவமைக்கப்பட்டது. இம்முறைப்படி ஜனவரி 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இது பெரும்பாலும் அனைத்து சர்வதேச அமைப்புகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகளில் ஜுலியன் நாட்காட்டி முறையையே பின்பற்றினர். மேலும், அந்த காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப வசதி இல்லாத காரணத்தால்  கிரிகோரியன்  நாட்காட்டி பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக காணப்பட்டது. பெரும்பாலான பகுதியை சேர்ந்த மக்கள் ஏப்ரல் 1ஆம் தேதியை புத்தாண்டாக கருதிவந்தனர். கிரிகோரியன்  நாட்காட்டியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொருட்டு ஏப்ரல் மாதத்தை புத்தாண்டாக கொண்டாடும் மக்களை கேலியும், கின்டலும் செய்யத் தொடங்கினார். அவர்களை முட்டாள்கள் எனக்கூறி பிற்காலத்தில் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. அந்நாளில் பிறரை கேலி செய்வது, ஏமாற்றி மகிழ்வது வழக்கமாக ஆனது.

பின்பு, 1920களில் கிரிகோரியன் நாட்காட்டி அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் இன்று வரை ஜனவரி 1 புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது .இன்றும் நம் நாட்டில் ஜூலியன் நாட்காட்டி முறைப்படியே(ஏப்ரல் முதல் மார்ச் வரை) நிதி ஆண்டு கணக்கிடப்பட்டு வருகிறது.


எது எப்படியோ…இனிமேலும், யாரையும் முட்டாளாக நம் தமிழ்நாட்டில் ஆக்க விடக்கூடாது. நம்மை முட்டாள்கள் எனக்கருதி நம்மை ஆளும் மற்றும் ஆண்டு அடிமைப்படுத்தவும் நினைக்கும் எவரையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்போம்.

april-fools-day-tn-people

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எவ்வாறு ஒரு ‘chokers’ என்ற பட்டபெயர் அது உலகக்கோப்பையை வெல்லும் வரை இருக்குமோ, அதே போல் நமக்கும் முட்டாள்கள் எனும் பட்டம் நாம் அனைவரும் இணைந்து நல்ல தலைவனை உருவாக்கும் வரை இருக்கும்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எவ்வாறு ஒரு ‘chokers’ என்ற பட்டபெயர் அது உலகக்கோப்பையை வெல்லும் வரை இருக்குமோ, அதே போல் நமக்கும் முட்டாள்கள் எனும் பட்டம் நாம் அனைவரும் இணைந்து காமராஜர் போன்ற நல்ல தலைவனை உருவாக்கும் வரை இருக்கும்.

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!