வாக்காளர்களுக்கு அதிமுக கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா?

0
69
O-Panneerselvam
Credit: THE WEEK

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன. அணிவகுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், காதைப்பிளக்கும் பிரச்சார பொதுக்கூட்டங்கள், சுவர் நிரப்பும் வண்ண வண்ண சுவரொட்டிகள் என்பது போன்றவை ஒருபக்கம். மற்றொரு பக்கம் வாக்களர்களின் பையை பணத்தால் நிரப்பும் அரசியல் கட்சிகள். தமிழகத்தில் இதுவரை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தால் 137 கோடி ருபாய் பறிமுதல் செய்யப்பட்டிருகிறது. அனைத்தும் ஆவணங்கள் இன்றி ஓட்டிற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தவை. இதில் அதிகபட்சமாக 11.53 கோடி ரூபாய் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

moneyஎப்போது துவக்கம்?

வாக்குக்கு பணம் அளிப்பது அதிகளவில் பேசப்பட்டது 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற திருமங்கலம் தேர்தலுக்குப் பின்னர் தான். பூத் ஸ்லிப் மற்றும் பத்திரிகைகளுக்குள் மறைத்து வாக்களர்களுக்கு ரூபாய் 5000 வரை கொடுக்கப்பட்டது. இதில் திமுக வெற்றிபெற்றது. இதனால் வாக்களர்களுக்கு பணம் அளிப்பதை கிண்டலாக திருமங்கலம் பார்முலா என்று பலர் அழைக்கின்றனர். சரி, அதிமுக வாக்களர்களுக்கு பணம் கொடுத்ததில்லையா? நிறையவே குடுத்திருக்கிறது.

வீட்டுவசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் 227.25 கோடியும், மின்சாரவாரிய அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் 197 கோடியும், 217 கோடியை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அளித்திருக்கிறார்கள்.

2016 தேர்தல்

தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற ரூபாய் 641 கோடி ரூபாயை வாக்களர்களுக்கு வழங்கிய விவகாரம் ஆதாரத்தோடு வெளியானபோதும் இதுவரை அந்தக் கட்சியின்மேல் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அந்தக் கட்சி 134 இடங்களில் வெற்றிபெற்றது. மொத்த வாக்களர்களில் 70 சதவிகிதமானோருக்கு பணம் போய் சேர்ந்திருக்கிறது.

O-Panneerselvam
Credit: THE WEEK

மணல் வியாபாரம் செய்துவந்த SRS Mining நிறுவனத்தின் பங்குதாரரான சேகர் ரெட்டி என்பரின் வீட்டில் இருந்து வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் இந்தப் பணப்பரிவர்த்தனை நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்த அறிக்கையை வருமான வரித்துறை இயக்குனருக்கு (director-general of income tax investigation) தாக்கல் செய்த வருமான வரித்துறை முதல்வர் (principal director of income tax – PDIT) 641 கோடி ரூபாய் அதிமுக கட்சியின் சார்பில் வாக்களர்களுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

மூன்று புள்ளிகள்

மே 9, 2017 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் எந்தெந்த அமைச்சர்கள் எவ்வளவு பணம் சேகர் ரெட்டிக்கு அளித்திருக்கிறார்கள் என்ற விபரம் உள்ளது. அதன்படி, வீட்டுவசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம் 227.25 கோடியும், மின்சாரவாரிய அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன் 197 கோடியும், 217 கோடியை அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அளித்திருக்கிறார்கள்.

அதே போல் சேகர் ரெட்டியின் நிறுவனத்தின் வேலைபார்த்துவந்த சண்முகசுந்தரம் என்பவரின் வீட்டில் எந்தெந்த வேட்பாளர்களுக்கு எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற விபரங்கள் அடங்கிய ஆவணமும் சிக்கியது. தொகுதிவாரியாக இந்தப்பணமெல்லாம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

சரத்குமாருக்கு 2 கோடி

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் மகள் சேகர் ரெட்டியிடம் இருந்து 2 கோடி ரூபாய் பெற்றுள்ளதும் இந்த விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்துப் பேசிய சரத்குமார், திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கும் நோக்கத்திற்காக வாங்கப்பட்டது எனவும் அதனை வருமான வரித்தாக்கல் செய்யும்போது குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

35-Three-AIADMK-ministers-gave-1சிக்கியவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சேகர் ரெட்டியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் தான் அனைத்து தகவல்களும் இருந்தன. இதுகுறித்துப்பேசிய ரெட்டி,” எனக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை எனவும், எனது கணக்குவழக்கில் ஏதோ தவறு நடந்திருப்பதாகவும் சொன்னார். மேலும் வருமான வரித்துறை என்னிடம் கையெழுத்து வாங்கிய பஞ்சனாமாவில் இவையெல்லாம் குறிப்பிடவில்லை என்றார்.

பஞ்சனாமா என்பது வருமான வரித்துறை கைப்பற்றிய மொத்த பொருட்களையும் வைத்து தயாரிக்கப்படும் அறிக்கையாகும். கடைசியில் சம்பத்தப்பட்டவரிடம் வருமான வரித்துறை கையெழுத்து வாங்கிக்கொள்ளும்.

நத்தம் விஸ்வநாதன், ” நாங்கள் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. அம்மாவின் ஆட்சி வரவேண்டுமென்று மக்கள் நினைத்ததன் காரணமாகவே தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே பொய்யானவை” என்றார். ஓ.பன்னீர்செல்வம் இதுகுறித்து வாயே திறக்கவில்லை.

எப்படி விநியோகம் செய்யப்பட்டது?

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள நபர்களின் எண்ணிக்கை, பொருளாதார நிலைமை ஆகியவற்றை கணக்கில்கொண்டு ரூபாய் 250 முதல் 1000 வரை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கான பணம் முழுவதும் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே அந்தத்தொகுதி வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது.

R-Vaithilingam-and-Natham-Viswanathanவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட ரவிக்குமார்,” விழுப்புரம் தொகுதி முழுவதும் ஒரு ஓட்டிற்கு 1000 ரூபாய் வழங்கியிருக்கிறார்கள். அதிமுகவின் பண பலத்தின் காரணமாகவே என்னால் அங்கு வெற்றிபெற முடியாமல் போனது என தெரிவித்தார்.

101 வழக்குகள்

தமிழகத்தில் மட்டும் அந்தத் தேர்தலின்போது 101 விதிமுறை மீறல் வழக்கு பதியப்பட்டது. அவற்றில் இதுவரை எதுவுமே தீர்க்கப்படவில்லை என்பது தான் சோகத்தின் உச்சம். அதிகார வர்க்கத்தினரை மட்டும் இதில் குற்றம்சாட்ட முடியாது. கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போராட்டம் செய்த மக்களை போலீசார் கலைக்க முற்பட்டனர். எதற்காக போராட்டம் என்று விசாரித்த போலீசாரிடம், மற்ற பகுதிகளுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள், எங்க ஏரியாவுக்கு வரல என்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள் மக்கள். ஆகவே மாற்றம் என்ற ஒன்றுவரவேண்டுமேனால் மக்களிடம் இருந்து மட்டுமே அது ஆரம்பிக்க முடியும்.

குறிப்பு : தி வீக் (THE WEEK ) செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பே ஆகும்.