திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியான சற்று நேரத்திற்கெல்லாம் அதிமுக தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
திமுகவின் தேர்தல் அறிக்கையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை தமிழகத்தின் துணை முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். என்னென்ன அம்சங்கள் வெளிவந்திருக்கிறது என்பதை கீழே காண்போம்.
- வறுமை ஒழிப்பு, அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம், மாதாந்திர நேரடி உதவி தொகை ரூபாய் 1500 வழங்கும் திட்டம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், விதவை பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்கும் இந்த திட்டத்தை நாடுமுழுவதும் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற எம்ஜிஆர் பெயரில் திறன் மேம்பாட்டு திட்டம் கொண்டுவரப்படும்.
- நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க்கப்படும். பெருமளவு மழை பெய்யும் காலங்களில் நீரை சேமித்து வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி கோதாவரி திட்டங்களை உடனடியாக துவங்க வலியுறுத்துவோம்.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழையின் பொழுது பெரும் நீரை பயன்படுத்த தடுப்பணை, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் கொண்டுவரப்படும்.
- விவசாயிகளின் கடன் சுமையை தீர்க்கும் வகையிலான உறுதியான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வலியுறுத்துவோம்.
- மருத்துவம் போன்ற உயர் கல்விகளில் சேர நீட் உள்ளிட்ட தேர்வுகளில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வலியுறுத்துவோம்.
- தனியார் துறை வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
- உயர் கல்விக்கு பெற்ற கல்விக்கடனை ரத்து செய்ய வலியுறுத்துவோம்.
- 7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு உத்தரவிடுமாறு குடியரசு தலைவரிடம் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும்.
- தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்துவோம்.
- பொது சிவில் சட்டத்தை செயல்படுத்தும் எந்த முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என வலியுறுத்துவோம்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவியுங்கள்.