துப்பரவு பணிகளுக்கு விண்ணப்பித்த MBA, பொறியியல் பட்டதாரிகள்!!

0
132
unemployment
Credit: Hindustan Times

வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய செய்திகள் நாள்தோறும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. நாடு முழுவதும் இதே நிலைமைதான். சமீபத்தில் வெளிவந்த கணக்கெடுப்பு ஒன்று கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் பணியிலிருந்து விலக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.1 கோடி என்னும் செய்தி அளித்த அதிர்ச்சி மறைவதற்குள் இந்தச் செய்தி வந்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் துப்பரவு பணிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த தகவலை கடந்த ஆண்டு அரசு வெளியிட்டது.

unemployment
Credit: Hindustan Times

வேலை

இந்த வேலைக்கான ஊதியம் 15,700 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுப்பிரிவில் – 4, பிற்படுத்தோர் – 4, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 3, SC – 2 மற்றும் ST -1 என மொத்தம் 14 பணியிடங்களுக்கு மொத்தம் 3930 பேர் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டார்கள். இவர்களில் பெரும்பாலானோர்கள் M.Tech, BE, M.Com மற்றும் MBA படித்தவர்கள். வேலைவாய்ப்பு இல்லாமை பட்டதாரிகளை கடும் மன அழுத்தத்தில் தள்ளியிருக்கிறது.

ஏற்கனவே பட்டதாரிகளை வாட்டும் கல்விக்கடன், குடும்ப நிலை போன்றவை இந்த முடிவுகளுக்குப் பின்னால் இருக்கிறது. இங்கே ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும். உலகில் எந்தத் தொழிலும் தாழ்வானது இல்லை. அதே வேளையில் படிப்பிற்கேற்ற உதயம் தான் இத்தனை கேள்விகளை எழுப்பிகிறது. இதை இப்படி யோசித்துப் பார்க்கலாம். படிப்பறிவில்லாமல் தவிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையும் இதில் சம்பத்தப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும்

இந்த அவல நிலை நமக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுமே இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் விடுக்கப்பட்ட 72 அலுவலக உதவியாளர் பணிக்கு 93,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் முனைவர் பட்டம் பெற்றவர்களும் அடக்கம். மும்பை மாநிலத்தில் இருக்கும் மந்திராலயாவில் உணவு பரிமாறுபவர் வேலைக்காக சுமார் 7000 பேர் விண்ணப்பித்திருந்தார்கள்.

job less
Credit: News Maven

இப்படி ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாதிரியான புள்ளிவிவரங்களைக் கொண்டுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம்? வேலைவாய்ப்பினை உருவாக முடியாத அரசுகள் ஏன் மென்மேலும் புதிய கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கின்றன என்ற கேள்வி தான் எஞ்சுகிறது. ஊக்கத்தொகை மற்றும் இலவசங்களைத் தருவதற்குப் பதிலாக பொருளாதார நிலையை முன்னேற்ற அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்த நிலைமையினைச் சரி செய்ய இயலும்.