இந்த வார ஆளுமை – விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி

0
287
azim-premji

விப்ரோ கம்பெனியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த விப்ரோ கம்பெனியின் நிறுவனர் தான் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரிய அசிம் பிரேம்ஜி அவர்கள்.

பிரேம்ஜி நன்கொடையால் இயங்கும் அரசுப் பள்ளிகள்
இதுவரை அசிம் பிரேம்ஜி மொத்தம் ஒரு லட்சம்  கோடி சம்பாதித்து அதில் 53 ஆயிரம் கோடியை இந்த நாட்டின் வளர்ச்சிக்கு என்று செலவிட்டு உள்ளார்.நமது நாட்டில் 1.3 மில்லியன் அதாவது 13 லட்சம் அரசாங்கப் பள்ளிகள் இவரின் நன்கொடையால் மட்டுமே இயங்குகிறது. அதில் நமது தமிழக பள்ளிகளும் அடங்கும்.
அசிம் பிரேம்ஜி  24 ஜூலை  1945 அன்று, மும்பையில் ஒரு குசராத்தி முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தையான எம்.எச்.பிரேம்ஜி, காய்கறி தாவர எண்ணெய்கள் மற்றும் கொழுப்புக்களை தயாரிக்கும் மேற்கு இந்திய காய்கறி விளைச்சல் பொருள் கம்பெனியை (பின்னாளில் விப்ரோ லிமிடெட் (Wipro Ltd.) ஆனது.) சொந்தமாக வைத்திருந்தார்.
Credits : Goodreturns
மும்பையிலுள்ள செயிண்ட் மேரிஸ் பள்ளியில் தொடக்க கல்வியை முடித்தபிறகு, 1966ஆம் ஆண்டில் அவருடைய தந்தை திடீரென்று இறந்தவுடன் குடும்பத் தொழிலை ஏற்று நடத்த அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து தன்னுடைய படிப்பை விட்டுவிட்டு வரவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.
இந்திய பணக்காரர்கள் வரிசையில்  மூன்றாவது இடமும், உலக பணக்காரர்கள் வரிசையில் 60 வது இடமும், வாரி வாரி வழங்குவதில் முதல் இடமும் பிடித்த பணக்காரர்.
தன்னுடைய தொலைநோக்கு மற்றும் தலைமைத்துவத்தால் உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் நிறுவனங்களுள் ஒன்றாக விப்ரோவை உருவாக்கியதற்காக எல்லா காலக் கணிப்பிலும் மிகச்சிறந்த தொழில்முனைவோர் களுள் ஒருவராக பிசினஸ் வீக் என்னும் இதழ் வெளியீட்டு நிறுவனம் பிரேம்ஜியைப் பட்டம் தந்து பெருமைப்படுத்தியது.

அசிம் பிரேம்ஜி இந்திய பணக்காரர்கள் வரிசையில்  மூன்றாவது இடமும், உலக பணக்காரர்கள் வரிசையில் 60 வது இடமும், வாரி வாரி வழங்குவதில் முதல் இடமும் பிடித்த பணக்காரர்.
உலக பெரும் பணக்காரர்கள் அவர்களது வங்கி இருப்பில் இருந்து ஒரு 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு  கொடுக்க வேண்டும் என்று சொன்னதோடு மட்டும் இல்லாமல் அதை செய்தவர்கள்.உலகின் டாப் 10 பணக்காரர்களில் முதல் இருவர்களான வாரன் பப்பட் மற்றும் பில் கேட்ஸ் இருவரும் தான்.

இவர்கள்  இருவரும் அதற்காக. தி கிவிங் ப்ளெட்ஜ் (The Giving Pledge) என்கிற இயக்கத்தை ஆரம்பித்த பொழுது. அதில் கையெழுத்து இட்ட ஒரே இந்திய தொழில் அதிபர் அசிம் பிரேம்ஜி மட்டுமே.

ஏன் இந்திய பணக்காரர்கள் அமெரிக்கர்கள் அளவுக்கு தொண்டுகளுக்கு வருமானத்தை கொடுப்பதில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கிறார். “ஒன்று அவர்களின் குடும்பங்களிலேயே பெரும்பங்கு பணம் பிரித்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாவது பெரும்பாலான பணக்கார இந்தியர்கள் தங்கள் சம்பாத்தியம் முழுவதும் தங்களுக்கு பிறகு தங்களது குழந்தைகளுக்கே செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள்.”

அளவுக்கு மீறிய வறுமை, ஆடம்பரம் இரண்டுமே ஆபத்தானது என்னும் பைபிள் வசனத்தை அடிக்கடி இவர் மேற்கோள் காட்டுவார். ஏன் இந்திய பணக்காரர்கள் அமெரிக்கர்கள் அளவுக்கு தொண்டுகளுக்கு வருமானத்தை கொடுப்பதில்லை என்பதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக அசிம் பிரேம்ஜி தெரிவிக்கிறார். “ஒன்று அவர்களின் குடும்பங்களிலேயே பெரும்பங்கு பணம் பிரித்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாவது பெரும்பாலான பணக்கார இந்தியர்கள் தங்கள் சம்பாத்தியம் முழுவதும் தங்களுக்கு பிறகு தங்களது குழந்தைகளுக்கே செல்ல வேண்டும் என விரும்புகிறார்கள்.”


அசிம் பிரேம்ஜி அவர்களைப் பார்த்து முன் உதாரணமாகக் கொண்டு, இன்று பல தொழில் அதிபர்கள் கிளம்பி உள்ளார்கள்.ஜூலை  24ம்  தேதி, நாளை பிறந்தநாள் கொண்டாடும் அசிம் பிரேம்ஜியை, இந்தவார ஆளுமையாகக் கொண்டாடுவதில் எழுத்தாணி மகிழ்கிறது.
 
இது போன்ற பயனுள்ள பல கட்டுரைகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ள எழுத்தாணியின் முகநூல் (https://www.facebook.com/EzhuthaaniOfficial/) மற்றும் ட்விட்டர் (@EzhuthaaniCom) பக்கங்களை பின் தொடருங்கள்