இளமைத் துடிப்பு, நவநாகரிகம், புதுமை, முற்போக்கு இவை எல்லாம் இணைந்த ஒரு பிரதமர் கிடைத்தால் எப்படி இருக்கும்? நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அதற்கு நீங்கள் கனடாவில் இருக்க வேண்டும்!
ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவின் 23வது பிரதமர், நவம்பர் 4, 2015 அன்று கனடா நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற வயதான ஜஸ்டின் கனடாவின் இரண்டாவது இளமையான பிரதமர் ஆவார்.
குத்துச்சண்டை வீரரான ஜஸ்டின் சில காலம் ஆசிரியராகவும் இருந்துள்ளார். தந்தையின் மறைவுக்குப் பின் தீவிர அரசியலுக்கு வந்தார்.
2004ம் ஆண்டு சோஃபி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பட்டப்படிப்பு படித்துள்ள ட்ருடோ, Common Ground- என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். The Great War – தொலைக்காட்சி படத்திலும் நடித்திருக்கிறார்.
2000ம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தையும் கனடாவின் முன்னாள் பிரதமருமான பியர் ட்ரூடோவின் மரணத்திற்கு பின் தான் அரசியலில் தீவிரம் காட்டிய ட்ரூடோ 2008 – ல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.பின் 2013 – கனடா லிபரல் கட்சி- யின் தலைவரானார்.
2015 – கனடா தேர்தலில் பெரும் வெற்றி பெற்று கனடாவின் 23 வது பிரதமராக பதவியேற்று இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
குத்துசண்டை வீரரும் ஆணழகருமான ஜஸ்டின் ட்ரூடோ ஒரு பெண்ணியவாதி, “பெண்கள் தங்கள் உடலை என்ன செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பெண்களிடமே விட்டுவிட வேண்டும். இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தினர் தலையிடக் கூடாது” என்று ஜஸ்டின் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் இந்தியா வந்த இவரை பிரதமர் மோடி வரவேற்கவில்லை. கனடாவில் பஞ்சாபியர்களுக்கும், தமிழர்களுக்கும் ட்ருடோ ஆதரவாக இருப்பதால் தான் மோடி சந்திக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து சில தினங்களுக்கு பின் மோடி சந்தித்தார். மிக எளிமையாக, தனது குடும்பத்துடன், இந்தியாவில் பல இடங்களையும் சுற்றிப்பார்த்து விட்டு கனடா திரும்பினார் ட்ரூடோ.
கனடாவில் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ள ட்ரூடோ-வை வரவேற்று தமிழக இளைஞர்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் சுற்றுப்பயணம் முடித்துக்கொண்டு ட்ரூடோ தமிழகம் வராமலே கனடா திரும்பிச்சென்றார்.
ஜஸ்டின் ட்ரூடோ – வை இந்த வார ஆளுமையாக நியோதமிழ் கொண்டாடி மகிழ்கிறது.
Also Read: இந்தியாவின் மூன்றாவது குடியரசு தலைவராக இருந்த ஜாகிர் உசேன் கதை!
தாவரங்களுக்கும் உயிர் உள்ளது என்று நிரூபித்த இந்திய விஞ்ஞானி சர் ஜெகதீஷ் சந்திர போஸ் வரலாறு!
இந்தியத் திரையுலகில் நடிப்பின் ‘என்சைக்ளோபீடியா’, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு!