சொந்தமாக வீடு, வாகனம் இல்லாத திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் வரலாறு

Date:

ஓர் ஆச்சரியமான அரசியல்வாதி
அப்பழுக்கற்ற மனிதர்
எளிமையின் சிகரம்
எளிமையான முதல்வர்
இந்தியாவின் ஏழை முதல்வர்
என அரசியலில் உள்ள ஒரு மனிதரைச் சொல்ல முடியுமா?

இந்தியாவில் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களைக் கூட விட்டு விடுவோம்….
ஒரு வார்டு கவுன்சிலர் ஒரு முறை பதவியில் இருந்தால் குத்து மதிப்பாக எத்தனை லட்சங்கள், எத்தனை கோடிகள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால் மூன்று முறை திரிபுரா மாநில முதலமைச்சராக இருந்த ஒருவரது மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தான் என்றால் நம்பமுடிகிறதா?!!!!?

அவருக்குச் சொந்தமாக வீடோ, வாகனமோ, செல்போனோ கிடையாது என்றால்
நம்புவீர்களா?

வேறொரு நாட்டில் இருக்கும் யாரோ ஒருவரைப் பற்றிச் சொல்லும் இன்டர்நெட் செய்தி இல்லை இது.

நமது பாரத நாட்டின் வட உச்சியில் உட்கார்ந்திருக்கும் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார்தான் அந்த உத்தமர்.

தற்போது 64 வயதாகும் மாணிக்சர்க்கார் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முழு நேர ஊழியர். 1981 இடைத்தேர்தல் மூலம் எம்.எல்.ஏ ஆனவர். 1998ல் திரிபுராவின் முதல்வரானவர்.

அவரின் மொத்த சொத்தின் மதிப்பே
ரூ.10,800-தான். மனைவி, பிள்ளைகள் பேரில் சொத்தை குவித்திருப்பாரோ என்று குறுக்கே சிந்திக்க வேண்டாம்.
அரசு ஊழியராய் இருந்து ஓய்வுபெற்ற அவரது மனைவி பாஞ்சாலியின் மொத்த சேமிப்பு ரூ 46,000-தான்

இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. சொந்த வீடோ, வாகனமோ கிடையாது. சொந்த வேலையாக வெளியே போனால், ஆட்டோ ரிக்ஷா பயணம்தான்.

சர்க்காரின் அரசு காரில், சுழலும் சிவப்பு விளக்கும் கிடையாது. முதலமைச்சருக்கு என்று ஒரு சம்பளம் உண்டல்லவா?
அதையும் கட்சிக்குக் கொடுத்து விடுகிறார் சர்க்கார். கட்சி பார்த்து அவருக்கு மாதச் சம்பளம் ரூ 5000 தருகிறது.
‘இந்த பணமும் எனது மனைவியின் பென்சனும் எங்கள் எளிய வாழ்க்கைக்குப் போதுமானது’ என்கிறார் மாணிக் சர்க்கார்.

‘தினமும் காலை, அவர் உடுத்தும் உடைகளை அவரே துவைத்து போட்டு விட்டுத்தான் வெளியே கிளம்புவார்’ என்று தனது கணவர் பற்றி கூறுகிறார் பாஞ்சாலி…
‘எனது வெட்டிச் செலவு என்று பார்த்தால் தினசரி ஒரு சிறிய மூக்குப் பொடி மட்டை,
ஒரு சிகரெட்தான்’ என்று முன்பு ஒருமுறை வெள்ளந்தியாய் கூறிய சர்க்கார்,
தற்போது அந்தப் பழக்கங்களையும் விட்டுவிட்டார்.

2009ல் சர்க்காரின் அம்மா மறைந்த போது, பூர்வீக வீடு ஒன்று அவருக்கு வந்து சேர்ந்தது. வாரிசு இல்லாத தனக்கு அந்த வீடு தேவையில்லை என்று கூறி, தனது தங்கைக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டார் சர்க்கார். சர்க்காரின் அப்பா ஒரு சாதாரண டெய்லர். ஆனாலும் 60களின் இறுதியிலேயே சர்க்காரை மேற்குவங்காள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தார் அவர்.

சர்க்காரின் குடும்பத்தினர், உறவினர்கள் எல்லோருமே சராசரி நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் கீழே உள்ள குடும்பங்கள்தான்.

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததினால், வீடு இல்லாமல் கட்சி அலுவலகத்தில் குடியேறியிருக்கிறார் மாணிக் சர்க்கார். வீடில்லையென்றால் என்ன? நீங்கள் பல கோடி இந்தியர்களின் இதயங்களில் இருக்கிறீர்கள் தோழர்!

Manik-Sarkar-Ex-Tiripura-CM-Person-of-the-week-Mar2018

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!