தன் நகைச்சுவையின் மூலம் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நடிகர், விவேக் அவர்களின் வாழ்க்கைப் பயணம்.
விவேக் பிறப்பு
நடிகர் விவேக் அவர்கள் 19 நவம்பர் 1961 ஆம் ஆண்டு அங்கயா- மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பிறந்த இவரின் முழுப்பெயர் விவேகானந்தன்.
குடும்பம்
விவேக் அவர்களுக்கு அருள்செல்வி என்ற மனைவியும், தேஜஸ்வினி, பிரசன்னகுமார், அமிர்தநந்தினி என்ற 3 குழந்தைகள். பிரசன்ன குமார் 2015 ஆம் ஆண்டு மூளை காய்ச்சல் காரணமாகஉயிரிழந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
விவேக் தன்னுடைய பள்ளிப்படிப்பை மதுரையில் முடித்தார். பிறகு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்றார். அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார். மதுரையில் தொலைப்பேசி ஆபரேட்டராகவும் பணியாற்றினார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் வெற்றிப்பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் உதவியாளராகப் பணியில் அமர்ந்தார். பின்னர் ஓய்வு நேரங்களில் மெட்ராஸ் நகைச்சுவை கிளப்பில் பங்கேற்றார். அங்கு ஸ்டாண்ட் அப் நகைச்சுவை செய்தார்.
கருத்துக்கள்
தான் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை மையமாக கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் மக்களுக்கு வழங்கியவர். ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி வந்தார். பல்வேறு மரக்கன்றுகளையும் நட்டுள்ளார்.
படங்கள்
ஒரு இந்திய திரைப்பட நடிகர், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி ஆளுமை, பின்னணி பாடகர் மற்றும் தமிழ் திரையுலகில் பணியாற்றும் ஆர்வலர். தொலைக்காட்சி ஆளுமை என்ற வகையில், விவேக் பல நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் பணியாற்றியவர். இயக்குனர் கே.பாலசந்தர் படங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் 1987 ஆம் ஆண்டு மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படத்தில் நடிக்கத் துவங்கினார். இயக்குனர் கே.பாலசந்தர் படங்களுக்கு ஸ்கிரிப்ட்-எழுத்தாளராக தொழில்முறை உறவைத் தொடங்கினார். இவர் 220 கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முன்னணி நகைச்சுவை நாயகன்
முன்னணி திரைப்பட நடிகர்களுடன் நடித்துள்ளார். ரஜினிகாந்த், மாதவன், விக்ரம், தனுஷ், விஜய், அஜித், சூர்யா, பிரபு, பிரசாந்த், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
விருதுகள்
- 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’. 5 தமிழ்நாடு திரைப்படங்களில் நடித்ததற்காக பிலிம்பேர் விருதுகள் தமிழ் வாங்கியுள்ளார்.
- 2009 ஆம் ஆண்டில், இந்திய அரசு விவேக்கிற்கு கலைக்கான பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
- சத்தியபாமா பல்கலைக்கழகம் நடிகர் விவேக்கிற்கு சினிமா மூலம் சமூகத்திற்கு அளித்த பங்களிப்புக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
- இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
- அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.
- ‘உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் மாநில விருது வழங்கப்பட்டது.
- சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான 3 பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்
- சிறந்த ஆண் நகைச்சுவை நடிகருக்கான ‘எடிசன் விருது’.
- சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’.
- சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஐ.டி.எஃப்.ஏ விருது.
இறப்பு
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக 2021 ஏப்ரல் 17 அன்று விவேக் காலமானார்.
Also Read: இந்தியாவின் விடிவெள்ளி, ஏவுகணை நாயகன், ‘கனவு நாயகன்’ அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு
எஸ்.பி.பி – தமிழுக்கு கிடைத்த கடைசி பெரும்பாடகன்!
எஸ். பி. பாலசுப்ரமணியம் வாழ்க்கை வரலாறு: ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள் கண்ட பாடும் நிலா…