Home இந்த வார ஆளுமை இந்த வார ஆளுமை - 'ஹாக்கி பிதாமகர்' தயான் சந்த் - ஆகஸ்ட் 27, 2018

இந்த வார ஆளுமை – ‘ஹாக்கி பிதாமகர்’ தயான் சந்த் – ஆகஸ்ட் 27, 2018

தயான் சந்த் இந்திய ஹாக்கி விளையாட்டின் பிதாமகராக அறியப்படுபவர். ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தேசம் தாண்டியும் அறிமுகம் கொண்ட இவரை இந்தியாவில் பலர் இன்னமும் அறியாமல் இருப்பது ஆச்சர்யமே.

இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி அங்கீகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் இவர் என்றால் அது மிகையல்ல. தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29 இவரது பிறந்த நாளிலே கொண்டாடப்படுகிறது.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுவது போல, விளையாட்டில் சிறந்த விளங்கியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது தயான் சந்த் பெயரிலேயே வழங்கப்படுகிறது.

சந்திரன் வருகை

ஆரம்பத்தில் மல்யுத்தத்தில் ஆர்வம் கொண்ட இவர், தனது 16 வயதில் அப்போதைய பிரிட்டன் இந்திய ராணுவத்தில் இணைந்த பின்னர் தான் ஹாக்கி விளையாட துவங்கினார்.

ராணுவ நண்பர்கள் இவரை ‘சந்த்’ என செல்லமாக அழைக்கத் துவங்கினர். சந்த் என்றால் சந்திரன் என அர்த்தம், பணி நேரம் முடிந்ததும் எல்லோரும் உறங்கும் வேளையில் தயான் மைதானத்தில் தனித்து நிற்பார். மின்விளக்குகள் அற்ற அக்காலத்தில் இரவு சந்திரன் வெளிச்சத்திற்காக அலைகளைப் போல இவர் காத்திருப்பார். இரவெல்லாம் பயிற்சி செய்வார்.

பல வருடங்களுக்குப் பிறகு, 1928-ல் ஒலிம்பிக்கில் ஹாக்கி மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆங்கிலேயர்களால் பிரிட்டன் இந்திய அணி உருவாக்கப்பட்டது. இந்தியாவின் பயிற்சி பெற்ற அணி இங்கிலாந்திற்கு பயிற்சிக்காக அனுப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய அணியுடன் இங்கிலாந்து தேசிய அணி விளையாடியது.

11-0 என இங்கிலாத்தைச்- சிதறடித்தது பிரிட்டிஷ் இந்திய அணி. இதன் காரணமாக தி கிரேட் பிரிட்டன், 1928 ஒலிம்பிக் போட்டிக்கு தங்கள் அணியை அனுப்பவில்லை.

அவர்கள் தேசிய அணி இந்தியாவிடன் தோல்வியுற்றதையும் தாண்டி, இங்கிலாந்து சர்வதேசக் களத்தில் அடிமை நாடான இந்தியாவைச் சந்திக்க அஞ்சியது ஒரு காரணமாகலாம்.

ஒலிம்பிக்கில் இந்தியா

1928-ல் பிரிட்டிஷ் இந்தியா தன் முதல் ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரியா நாட்டை 6-0 என வென்றது. சந்த் 3 கோல்கள் அடித்தார், அடுத்தடுத்துத் தொடர் வெற்றி காண இறுதி போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும், உடல் நலக் குறைவால் சந்த் இறுதி போட்டியில் பங்கேற்கவில்லை.

நெதர்லாந்துடன் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-0 கோல் கணக்கில் வரலாற்று வெற்றியை வசமாக்கி முதல் தங்கத்தை ருசித்தது. அந்த ஒட்டுமொத்தத் தொடரிலும் இந்தியாவிற்கு எதிராக எந்த கோலும் அடிக்கப்படவில்லை என்பது சரித்திரம்.

தன் வல்லமையான மட்டை திறனால் 14 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவராக பெருமை அடைந்தார் சந்த். செல்லும் போது 3 நபர்கள் வழியனுப்பிய அணிக்கு, நாடு திரும்பிய போது பம்பாய் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்றனர்.

ஹாக்கி மேதை !
உள்ளுர் போட்டி ஒன்றில் எவ்வளவு முயன்றும் தயானால் கோல் அடிக்க முடியவில்லை, உடனே அவர் நடுவரிடம் சென்று கோல் கம்பத்தை அளக்க சொன்னாராம். அதிசயக்கத்தக்க வகையில் சர்வதேச விதிமுறைகளை விட அதன் அகலம் குறைவாக இருந்தது.

அரண்ட அமெரிக்கா

1932 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றது. வழக்கம் போல ஜப்பான் போன்ற அணிகளை 11-0 கணக்கில் தோற்கடித்து இறுத்திக்குள் நுழைந்த இந்திய அணி போட்டி நடத்தும் அமெரிக்காவை எதிர் கொண்டது.

தயான் 8 கோல்கள், ரூப் சிங் 10 கோல்கள் உட்பட 24-1 என்ற கணக்கில் இரண்டாவது ஒலிம்பிக் தங்கத்தை சூரையாடியது. அந்த நேரத்தில் அதிக கோல்கள் அடித்த உலக சாதனைப் போட்டியாக இது அமைந்தது.

கதற விடப்பட்ட அமெரிக்க ஹாக்கி அணி அப்போது விட்ட விளையாட்டை இன்னும் சரிவர பிடிக்கவில்லை என்றே சொல்லலாம்.

133 கோல்கள் !!
ஒருமுறை ஹாலாந்து சென்ற போது இவரது ஹாக்கி மட்டையில் காந்தம் இருப்பதால சந்தேகம் கொண்ட மக்கள் அவரது மட்டையை உடைத்தே பார்த்தார்களாம். ஒரு பெண் இவரிடம் தனது கைத்தடியை கொடுத்து விளையாட சொல்ல அதை வைத்துக் கொண்டும் எப்படியோ ஒரு கோல் அடித்தார் இந்த சாம்பவான்.பயண முடிவில் 37 போட்டிகளில் கலந்து கொண்டு 34 வெற்றி, 2 சமன்,1 ரத்து என உலகை பிரமிக்க வைத்தது இந்திய ஹாக்கி. 338 கோல்கள் அடித்த அணியில் 133 கோல்களை சந்த் அடித்திருந்தார்.

கேப்டன் தயான்

1934-ல் சந்த் இந்திய ஹாக்கி அணியுன் கேப்டனாக பொறுப்பேற்று நடத்தினார். 1935-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியத் தொடரில் கிரிக்கெட் சாம்பவான் பிராட்மேன் இவர் ஆட்டத்தைக் காண நேர்ந்தது.வியந்து போன பிராட்மேன், “ஹாக்கி என சொல்லிவிட்டு கிரிக்கெட்டை காட்டுகிறார்கள், அவர் நாங்கள் ரன் எடுப்பது போல கோலகளை அடித்து கொண்டே இருக்கிறார்.” என்றார்.

தயான் vs ஹிட்லர்

1936 ஹாக்கி அணியின் சோதனை காலமாக மாறியது. பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளச் செல்வதற்கேப் பொருளாதார ரீதியாக போராட வேண்டியிருந்தது. அன்று வரை தோற்கடிக்கவே முடியாத பலம் வாய்ந்த இந்திய அணி, பயிற்சிப் போட்டியில் ஜெர்மனியிடம் 1-4 என அதிர்ச்சி தோல்வியுற்றது.

அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா தொடர் வெற்றி கொண்டு இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்திய ஹாக்கி மந்திரவாதியின் மந்திரஜாலங்களைக் காண அரங்கத்திற்கு வாருங்கள் என்ற போஸ்டர் பெர்லின் தெருவெங்கும் ஒட்டப்பட்டது.

ஜெர்மனியின் ஆதிக்கம் நிறைந்த அந்த ஒலிம்பிக் போட்டி நாசி ஒலிம்பிக் (Nazi Olymbic) என அறியப்பட்டது. ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி இருந்ததால் ஜெர்மன் அணி மிக வலுவான மனநிலையில் இருந்தது. ஹிட்லர் தன் நாட்டு ரசிகர்களோடு ஆட்டத்தைக் காண ஆர்வத்தோடு வந்திருந்தார்.

Credit : sportz.in

அன்று ஆகஸ்ட் 15. இந்தியாவின் அதிகாரப்பூர்வ மற்ற மூவர்ண கொடியை வணங்கி களத்தில் வீரர்கள் இறங்கினர். போட்டி துவங்கியதும் ஜெர்மனி தனது முதல் கோலைப் பதிவு செய்தது, ரசிக ஆரவாரங்கள் மண்ணை பிளந்தன.

சுற்றி வளைப்பட்ட தயான் எவ்வளவு முயன்றும் முதல் பாதியில் சற்று காட்டுத்தனமான கோல்கீப்பரால் அவர் பல் பறி போனது தான் மிச்சம். இந்தியர்களின் வாழ்வா சாவா போராட்டமாக இரண்டாவது பாதி தொடங்கியது. தயான் சந்த் தனது காலணிகளை கழற்றி வீசி வெற்று கால்களோடு களத்தில் இறங்கினர்.

காலணிகள் தான் மட்டையை வீசும் வேகத்தில் கால் எலும்புகள் உடையாமல் வீரர்களைப் பாதுகாக்கும். அதுவும் அப்போதைய காலத்தில் மாற்று வீரரெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். அடிபட்டால் அவ்வளவுதான். ஆனால் அந்த நிமிடத்திலிருந்து தான் போட்டி சூடுபிடித்தது. இந்திய அணி ஒரு நேர்த்தியான ஹாக்கி விளையாட்டை ஜெர்மனுக்கு சொல்லித் தர விரும்பியது.

மிரண்டு போயிருந்த ஹிட்லர் தயான் சந்த்யை நேரில் சந்தித்து உனக்கு ஜெர்மன் நாட்டுரிமை அளிக்கிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன் எங்கள் நாட்டுக்காக விளையாடு என்றார்.

தயான் சந்த் தன் மந்திர ஜாலத்தைக் காட்டினார். தொடர்ச்சியாக ஹாட்ரிக் கோல்கள் அடித்து ஜெர்மன் வீரர்களை மிரள வைத்தார், போட்டி முடிவில் இந்தியா 8 கோல்கள்.

ஜெர்மனி அடித்த ஒரு கோல் தான் பெர்லினின் நடைபெற்ற மொத்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக அடிக்கப்பட்ட ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை.

மிரண்டு போயிருந்த ஹிட்லர் தயான் சந்த்யை நேரில் சந்தித்து உனக்கு ஜெர்மன் நாட்டுரிமை அளிக்கிறேன், ராணுவத்தில் உயர் பதவியும் தருகிறேன் எங்கள் நாட்டுக்காக விளையாடு என்றார்.

தயான் சந்த் என்ன சொன்னார் தெரியுமா. “நான் ஒரு ஹாக்கி வீரன் தான், ஆனால் அதற்கு முன்பிருந்தே ஒரு இந்திய ராணுவ வீரன்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம்.

ஜெர்மன் பத்திரிக்கைகள் இந்திய ஹாக்கி அணியை இதுபோல் உலகின் தலைசிறந்த நேர்த்தியான அணி இனிமேல் உருவாகப் போவதில்லை,தயான் சந்த் போன்ற ஆட்டக்காரரும் தான் என்றது.

அடையாளம்

வியான்னா-வில் தயான் சந்த்ற்கு நான்கு கைகளும் அதில் நான்கு ஹாக்கி மட்டையோடு இருப்பது போன்ற சிலை உருவாக்கப்பட்டது. அப்படிபட்ட ஒருவரால் மட்டுமே இப்படி விளையாட முடியும் என பொருள் தருமாறு அது உருவாக்கப்பட்டது.

ஆனால் இன்று வரை அது ஒரு மர்மமாகவே உள்ளது , பல பத்திரிக்கைகளில் குறிப்பிட்டிருந்தும் அச்சிலையை யாருமே பார்த்தது இல்லை.

டெல்லியில் தேசிய மைதானத்திற்கு தயான் சந்த் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

பத்ம பூஷன் !!
அன்றைய காலக்கட்டத்தில் இந்தியாவின் உயரிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது. பதம் பூஷன் விருது வாங்கிய ஒரே ஹாக்கி வீரர் இன்று வரை இவர் மட்டுமே.

இவரது பிறந்த நாளை (ஆகஸ்ட் 29) தேசிய விளையாட்டு தினமான இந்தியா அறிவித்தது. லண்டன் ஜிம்கானா கிளப்பில் ஹாக்கி அரங்கித்திற்கும், லண்டன் சுரங்க ரயில் பாதை நிலையம் ஒன்றிற்கும் இவர் பெயர் சூடிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முகம்

1956-க்கு பிறகு, அவர் ராணுவத்திலிருந்து ஒய்வு பெற்றார். அவரது இறுதி காலங்கள் வறுமையிலே வாடியது. உலகப் புகழ் பெற்ற இந்தியன் ஆனாலும் உள்ளூர் மக்களிடம் அவருக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

தன் முதுமைப் பருவத்தில் கல்லீரல் புற்றுநோய் காரணமாக டெல்லி மருத்துவமனையில் பொது வார்டில் சேர்க்கப்பட்டார் சந்த். 1978-ல் அவரது சகாப்தம் முடிவுற்றது.

உலகக் களத்தில் இந்தியாவை பெருமையடைய வைத்த இவர், எப்போதும் வரலாற்றின் தலைசிறந்த வீரராக இருப்பார். ஹாக்கி உள்ள வரை இவர் பெயரும் திறமையும் உலக அரங்கில் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், நம் தேசிய விளையாட்டான ஹாக்கியையும், மிகப்பெரும் விளையாட்டு ஆளுமையான தயான் சந்தையும் நம் நாட்டு மக்களுக்கு என்னவென்றே தெரியவில்லை.

இறப்பதற்கு சில காலம் முன்பு அவர் சொன்னது, “நான் மரணித்த பிறகு உலகில் பலரும் எனக்காக கண்ணீர் சிந்துவார்கள் என எனக்கு தெரியும், ஆனால், என் இந்திய மக்கள் என்னை நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்.”

விளையாட்டுத் துறையின் மகத்தான ஆளுமை தயான் சந்த் அவர்களை எழுத்தாணி இந்த வார ஆளுமையாகக் கொண்டாடி மகிழ்கிறது.

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் ஷேர் செய்யுங்கள்.

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

பூமியை நெருங்கும் NEOWISE வால்நட்சத்திரம்: எங்கே, எப்படி பார்ப்பது?

2020 ஆம் ஆண்டில் முதல் முறையாக விண்வெளி ஆர்வலர்கள் பலரும், ஒரு வால்மீன் / வால்நட்சத்திரம் வானில் தெரிவதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த வால்நட்சத்திரம் பல மேற்கத்திய நாடுகளில்...
- Advertisment -