கிண்டி பாம்புப்பண்ணை அதிகாரி வெளியிடும் பாம்புகள் பற்றிய ரகசியம்: பாம்புகளை பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள்!

Date:

பாம்புகள் பல்லாயிரம் ஆண்டுகளாக நம் வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரத்தோடு இணைந்து வாழும்  உயிரினமாகும்.  சுமார் 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பல்லி இனத்திலிருந்து பரிணாமவளர்ச்சி பெற்று பாம்புகள் தோன்றின.

பாம்புகளின் இயல்புகள்

இந்தியாவில் சுமார் 276 வகையான பாம்புகள்  உள்ளன. அவற்றில் 4 வகையான (நல்ல பாம்பு, கண்ணாடிவிரியன், கட்டுவிரியன், சுருட்டைப்பாம்பு) பாம்புகள் மட்டுமே  விஷத்தன்மை உடையன.   கொம்பறிமூக்கன், பச்சைப்பாம்பு, சாரைப்பாம்பு, நீர்காத்தான்குட்டி, தண்ணீர் பாம்பு, மோதிரவலயபாம்பு, மலைப்பாம்பு, போன்றவைகள் விஷமற்றவை.  பாம்புகள் விஷத்தை இரையை பிடிக்கவும்,  செரிமானத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்தும்.

பாம்புகள் வாயினருகே உள்ள சிறிய குழியின் (பிட்) மூலம் அருகில் உள்ள விலங்குகளின் வெப்பத்தை கணக்கிட்டு எளிதாக இரையை பிடிக்கின்றன.

பாம்புகளுக்கு காது கேட்காது ஆனால் அதிர்வினை நன்றாக உணரமுடியும். பாம்புகள் வாயினருகே உள்ள சிறிய குழியின் (பிட்) மூலம் அருகில் உள்ள விலங்குகளின் வெப்பத்தை கணக்கிட்டு எளிதாக இரையை பிடிக்கின்றன.மாமிச உண்ணிகளான பாம்புகளால் சுமார் மூன்று மாதங்கள் வரையிலும் கூட உணவு உட்கொள்ளாமல் இருக்கமுடியும்.

பாம்புகளால் நன்றாக மரம் ஏற முடியும்.  பெரும்பாலும் பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் ஒரு சில பாம்புகள் குட்டிகளை ஈனும். ராஜநாகம் மட்டுமே கூடுகட்டிமுட்டையிடும். ராஜநாகத்திடம் அதிகளவு விஷமிருந்தாலும் கட்டுவிரியன் விஷமே அதிக வீரியம் கொண்டது.

downloadபாம்புகளால் சொந்தமாக அதன் வாழிடத்தில் வளையோ புற்றுகளோ உருவாக்கமுடியாது. எலியும் கரையனும் கட்டிய வளையை ஆக்கிரமித்து வாழ்ந்து வருகிறது. பாம்புகளால் அதிகளவு    வெப்பத்தை தாங்க இயலாது எனவே குறைவாக வெப்பம் நிலவும் கரையான் புற்றில் கோடைகாலத்தை கழிக்கிறது.

பாம்புகளை பற்றி பல்வேறு மூடநம்பிக்கைகள் நம் சமுதாயத்தில் இருந்து வருகின்றன. பாம்புகள் பழிவாங்கும் குணம் உடையது என்றும், வயதான நல்ல பாம்பு தன் விஷத்தை மாணிக்கக் கல்லாக மாற்றி இரவில் அதன் ஒளியில் இரைதேடும் என்றும்,  கொம்பேறிமூக்கன் பாம்பு மனிதர்கள் கடித்துவிட்டு சுடுகாட்டு பனைமரத்தில் ஏறி பார்க்கும் என்றும் கதைகள் உண்டு. இவற்றில் துளியும் உண்மையில்லை.

பாம்புகளை ஏன் பாதுகாக்கவேண்டும் ?

சுற்றுசூழலில் பாம்பின் பங்கு மிக முக்கியமானதாகும்.  உணவு சங்கிலியில்  முதலிடத்தில் இருக்கும் மாமிசஉண்ணியான பாம்புகள், எலி, தவளை, பூச்சிகளை உட்கொண்டு அதீத இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை சீராக வைத்திருக்க உதவுகிறது. ஓர்  ஆண்டுக்கு இந்தியாவில் 20% முதல் 25% சதவீதம் உணவு உற்பத்தியை எலிகள் சேதப்படுத்துகிறது இவற்றில் பாதி விளைநிலத்தில் மீதி சேமிப்பு கிடங்கிலுமாகும்.விவசாய நிலங்களில் பயிர்களை அதிகளவில் சேதப்படுத்தும் எலிகளையும் பூச்சிகளையும் பாம்புகள் உணவாகஉட்கொண்டு விவசாயிகளின் நண்பனாக விளங்குகிறது.

பாம்புகளிடம் இருந்து எடுக்கப்படும் விஷம் மட்டுமே பாம்புக்கடிக்கு சிறந்த மருந்து.

மேலும் எலிகள் மூலம் பரவும் தொற்று நோய்கள் பரவாமல் எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது. காடுகளில் பாம்புகள் மற்ற விலங்குகளுக்கு உணவாகிறது. ராஜநாகம் பாம்புகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும்.  மயில், கழுகு மற்றும் பருந்து பாம்புகளை உணவாக உட்கொள்கிறது.  புலி, சிறுத்தை மற்றும் பிற மாமிசஉண்ணிகள் உடல்நலிவுற்று இருக்கும் நிலையில் மலைப்பாம்புகள் உணவாக உட்கொள்ளும்.

images 1பாம்புகளிடம் இருந்து எடுக்கப்படும் விஷம் மட்டுமே பாம்புக்கடிக்கு சிறந்த மருந்து. மேலும் பாம்புகளின் விஷத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் சிறுநீரக கோளாறு, புற்றுநோய், ரத்தக்கொதிப்பு போன்ற நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.

சீனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பாம்புகள் முக்கிய உணவாக பயன்படுகிறது.

பாம்புகளை நம் நாட்டில் இந்துக்கள் தெய்வமாக வழிபடுவதால் பாம்புகளை பாதுகாப்பது அவசியமாகும். பாம்புகளை காண நம் நாட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் அந்நிய செலாவணி மூலம் அதிகளவில் வருவாய் கிடைக்கிறது.

மேலும் 51எ இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒவ்வொரு குடிமகனும் இந்தியாவில் உள்ள இயற்கை வளத்தையும் வனவிலங்குகளையும் (பாம்புகள் உள்பட) பாதுகாப்பது நம் கடமையாகும்.

முனைவர். கோவிந்தராசு கண்ணன்,
முனைவர். கோவிந்தராசு கண்ணன்,
முனைவர். கோவிந்தராசு கண்ணன், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்

Share post:

Subscribe

Popular

More like this
Related

வான்கோழி(Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...

பிரையன் ட்ரேசி (Brian Tracy) கூறிய சிறந்த 33 பொன்மொழிகள்!

பிரையன் ட்ரேசி கனடிய அமெரிக்க ஊக்கமூட்டும் பேச்சாளர். பிரையன் ட்ரேசி 80...

சந்திர கிரகணம் (Lunar Eclipse) என்றால் என்ன? எப்படி நிகழ்கிறது தெரியுமா?

நமது சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் மற்றும் சில சிறுகோள்கள்...

தாய் பற்றி பிரபலமானவர்கள் கூறிய 14 பொன்மொழிகள்!

மனிதன் முதல் விலங்குகள், பறவைகள் வரை தாய் இல்லாமல் எதுவும் வருவதில்லை....
error: Content is DMCA copyright protected!