பூமியின் சாய்வின் காரணமாக துருவப்பகுதிகளின் மீது விழும் சூரிய ஒளிக்கதிர்களின் அளவானது குறைவதாலேயே பகல் பொழுதின் நேரம் குறைகிறது. அதாவது சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு இந்த ஆண்டில் மிக அதிகமாக இருப்பது இன்றுதான். இதனால் இன்று இரவு வழக்கத்தினை விட நீண்ட இரவாக இருக்கும். ஆங்கிலத்தில் இதனை Solstice என்று அழைக்கிறார்கள். உண்மையில் இந்த வார்த்தை வந்தது solstitium என்ற லத்தின் வார்த்தையில் இருந்துதான்.

இந்த நிகழ்வானது வருடத்திற்கு இரண்டுமுறை நடைபெறும். வட அரைக்கோளத்தில் டிசம்பர் மாதத்திலும், தெற்கு அரைக்கோளத்தில் ஜூன் மாதத்திலும் இதனைக் காணலாம்.
எப்படி இது நிகழ்கிறது?
ஆண்டின் இந்த மாதத்தில் பூமத்திய ரேகைக்குக் கீழே அதாவது தென்னரைக் கோளத்தில் அதிகமாகவும் வட அரைக்கோளத்தில் குறைவாகவும் சூரிய ஒளியானது படும். இதற்குக்காரணம் மகர ரேகை சூரியனுக்கு எதிர்த்திசையில் அமைந்திருப்பது தான். இதனாலேயே சூரிய ஒளியின் அளவு குறைகிறது.
மேலும் பூமி 23.5 டிகிரி சாய்ந்து இருப்பதன் காரணமாக பூமியின் பரப்பில் எங்கும் பரவலான சூரிய ஒளி கிடைக்காமல் போகிறது. வட அரைக் கோளத்தில் இதே நிகழ்வு டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.
கொண்டாட்டங்கள்
உலகம் முழுவதும் பல நாடுகள் இந்த நாளினை வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றன. சீனாவில் இந்த நாளானது டாங்ழி திருவிழா என்று அழைக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரிசியால் செய்யப்பட உருண்டைகளை உண்டு மகிழ்வார்கள்.

அயர்லாந்து நாட்டில் உள்ள Newgrange என்னும் 5000 வருட பழைமையான கல்லறையில் இந்த நாளின் சூரிய உதயத்தின் போது மக்கள் கூடி இனிப்புகளை பரிமாறிக்கொள்வர்கள். குளிர்காலத்தை வரவேற்பதன் அறிகுறியாகவே பல இடங்களிலும் இந்த கொண்டாட்டங்கள் களைகட்டுகின்றன.