28.5 C
Chennai
Sunday, August 1, 2021
Homeஇயற்கைநிலச்சரிவு என்றால் என்ன? நிலச்சரிவு பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்!

நிலச்சரிவு என்றால் என்ன? நிலச்சரிவு பற்றி உங்களுக்கு தெரியாத உண்மைகள்!

நிலச்சரிவு இயற்கையாகவோ செயற்கையாகவோ நிகழ்ந்தாலும், இது சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமல்ல நிலவு, செவ்வாய், புதன், சிரியஸ் மற்றும் வெள்ளி ஆகிய கோள்களிலும் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

NeoTamil on Google News

மழைக்காலம் வந்தாலே நிலச்சரிவு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், எத்தனை நிலச்சரிவுகள் ஏற்பட்டாலும் ஆண்டுதோறும் அதன் நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதை தடுக்கலாமே என்று பலரும் ஆலோசனை வழங்கினாலும் இயற்கையில் நடக்கும் இந்த நிகழ்வை நாம் எப்படி தடுப்பது என்று நமக்கு கேள்விகள் நிச்சயம் எழலாம்.

சரி.. இந்த நிலச்சரிவுக்கு உண்மையான காரணங்கள் தான் என்ன? இது மனிதனால் கட்டுப்படுத்தக் கூடிய நிகழ்வா? விரிவான தகவல்கள்.

நிலச்சரிவு என்றால் என்ன?
Credit: unsplash/fineas_anton

கேரள நிலச்சரிவு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பகுதியில் அமைந்துள்ள பெட்டிமுடி என்ற இடத்தில் 6ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு நிகழ்ந்த இடத்தில், டீ எஸ்டேட்டில் வேலை செய்துவந்த தோட்ட தொழிலாளிகளின் வீடுகள் இருந்தன.

நிலச்சரிவு ஏற்பட்டத்தில் அந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மண்ணில் புதைந்து 80 பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தற்போதுவரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனால், இந்தியா முழுவதும் நிலச்சரிவு பேசுபொருளாக மாறியுள்ளது.

Did you know?
நிலச்சரிவு எப்போது, ​​எங்கு நிகழும் என்பதை யாரும் துல்லியமாக கணிக்க முடியாது. தற்போது உள்ள தொழில்நுட்பத்தில் சில மணிநேரங்களுக்கு முன்பு எச்சரிக்கைகள் தான் வழங்கமுடியும். ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

நிலச்சரிவுக்கு காரணம் என்ன?

 • நிலச்சரிவு ஏற்பட நிலநடுக்கம், அதிகபடியான மழை மற்றும் மனித செயல்பாடுகள் போன்றவை காரணமாக அமையலாம்.
 • செங்குத்தான சரிவுகளில் அதிக அளவு மழை பொழியும் போது எளிதில் நிலச்சரிவு ஏற்படும்.
 • பாறைகள் உடைக்கும் போது ஏற்படும் அதிர்வுகள் போன்றவற்றாலும் நிலச்சரிவு நடக்கிறது.
 • சுரங்கங்கள் அமைத்தல் உள்பட பல மனித காரணங்களாலும் நிலச்சரிவு ஏற்படுகிறது.
 • அதுமட்டுமின்றி, கைவிடப்படும் கடின குப்பைகளால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, வீட்டை இடிக்கையில் கிடைக்கும் கற்கள், பாறைகள் உடைக்கும் போது கிடைக்கும் கற்கள் ஆகியவை உயர்ந்த இடத்தில் கொட்டும்போது, அந்த இடத்தால் தாங்கி கொள்ள இயலாமல் அது நிலத்துடன் கீழே சரிகிறது.
 • எளிதில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் தண்ணீர் வழித்தடத்தை அடைக்கும் போது, தண்ணீர் செல்ல வழியில்லாமல் சுற்றியுள்ள மண்பாங்கான பகுதியை வலுவற்ற பகுதியாக மாற்றுவதாலும் நிலவுச்சரிவு ஏற்படக்கூடும்.

Also Read: பருவ மழை ஏன், எப்படி பெய்கிறது? ஒட்டு மொத்த இந்தியாவில் பெய்யும் மழை பற்றி ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!

நிலச்சரிவு உருவாக்கும் சேதங்கள்

நிலச்சரிவால் சாலை போக்குவரத்து பாதிக்கப்படலாம். ரயில் தடங்கள் பாதிக்கப்படலாம். பயிர்கள் அழிந்துவிடும். கட்டிட புதைபாடுகளில் சிக்கி மரணம் நிகழலாம். இதனால் மின்சாரம், தண்ணீர் வசதி உள்பட அனைத்து சேவைகளும் முடங்க வாய்ப்புள்ளது.

landslide 3

நிலச்சரிவை தடுக்கும் வழிமுறைகள்

 • சரிவான பகுதிகளில் புல், செடி கொடிகள் உள்ளிட்ட தாவரங்கள் மற்றும் மரம் வளர்ப்பது மண்ணை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.
 • சரிவான பகுதிகளில் கடின குப்பைகளை குவிப்பதை தவிர்க்க வேண்டும்.
 • மலையின் அடிவாரத்தில் உள்ள சரிவுகளில் அதிகபடியாக நீரை சேமிப்பதை தவிர்க்க வேண்டும்.
 • சரிவான பகுதிக்கு அருகில் நீச்சல் குளங்கள் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.
 • மழை நீர் செல்லும் வழிகள் தடைபடாமல் இருக்க பிளாஸ்டிக் பயன்பாட்டையும் நிறுத்திடவேண்டும்.

இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் நாம் மேற்கொண்டாலும் சில இடங்களில் தவிர்க்க முடியாத காரணங்களால் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

Also Read: ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் இங்கே நிலநடுக்கம் வருகிறது!

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நிலச்சரிவு!

நிலச்சரிவு இயற்கையாகவோ செயற்கையாகவோ நிகழ்ந்தாலும், இது சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமல்ல நிலவு, செவ்வாய், புதன், சிரியஸ் (Sirius) மற்றும் வெள்ளி ஆகிய கோள்களிலும் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு சிரியஸில் நடத்தப்பட்ட ஆய்வில் பனிப்பாறைகள் உள்ள இடத்தில் பாறைகள் சரிவதை கண்டறிந்துள்ளனர்.

வெள்ளி கோளில் 1991ஆம் ஆண்டு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கண்டிறிந்தனர். இது குறித்து நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

இயற்கையில் நடப்பதை நாம் தடுக்க முடியாது. ஆனால், மனித செயல்பாடுகளை நாம் குறைத்தால், இது போன்ற ஆபத்தில் நாம் சிக்காமல் இருக்க முடியும்.

NeoTamil.com - ல் எழுதப்படும் கட்டுரைகள் DMCA Copyright பெற்றவை. பதிவுகளை நகலெடுத்தல், தழுவுதல் ஆகிய செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடியது. பதிவுகளை பிற தளங்களில் அல்லது வடிவங்களில் (Audio, Video) பயன்படுத்த NeoTamil.com -ன் அனுமதி பெறுவது அவசியம்.

NeoTamil on Google News

அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம், ஆராய்ச்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் NeoTamilஐ பின் தொடருங்கள். 

Get your daily dose of positivity by following NeoTamil’s Facebook page and Twitter.

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

- Advertisment -

Subscribe to our newsletter

To be updated with all the latest news, offers and special announcements.

Must Read

png;base64,iVBORw0KGgoAAAANSUhEUgAAAUQAAADrAQMAAAArGX0KAAAAA1BMVEWurq51dlI4AAAAAXRSTlMmkutdmwAAACBJREFUaN7twTEBAAAAwiD7pzbEXmAAAAAAAAAAAACQHSaOAAGSp1GBAAAAAElFTkSuQmCC

உண்ணாவிரதம் இருப்பது நல்லதா? யாரெல்லாம் உண்ணா விரதம் இருக்கலாம்?

இயற்கை மருத்துவத்தில், உடலமைப்புகளில் கழிவுகள் மற்றும் நோயுற்ற விஷயங்களின் தேக்கமே நோய்க்கான முதன்மை காரணமாக கருதப்படுகிறது. இக்கழிவுகள் வெவ்வேறு வகையான நீக்குதல் சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது. அதில் உண்ணாவிரதம் உடல் அமைப்புகளில் இருந்து...
- Advertisment -
error: Content is DMCA copyright protected!