ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள டார்வின் மாகாணத்தின் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் தான் இந்த அரிய வகை பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று கண்களை உடைய இந்தப் பாம்பு கார்பெட் பைத்தான் என்னும் வகையைச் சார்ந்தது. ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த வகை பாம்புகள் அதிகபட்சமாக 9 அடி வரையிலும் வளரக்கூடியவை. சராசரியாக 16 அங்குலம் வரையும் இருக்கும்.

இது குறித்து கருத்துதெரிவித்துள்ள டேவிட் பென்னிங் “மூன்று கண்களுடன் பாம்புகள் பிறப்பது மிக மிக அபூர்வம்” என்கிறார். மிசோரி மாகாண பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறை பேராசிரியராக இருக்கும் இவர் தனது வாழ்நாளில் இம்மாதிரியான பாம்பை கண்டதே இல்லை என ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.
பாம்புகள் முட்டையிடும் போதே கெட்டுப்போன மற்றும் குஞ்சு பொரிக்க இயலாத முட்டைகளை விழுங்கிவிடும். பிறக்கும் போது இடது மற்றும் வலது புறத்தில் ஒவ்வொரு கண்களும் நெற்றிப் பகுதியில் ஒரு கண்ணு இந்த பாம்பிற்கு இருந்துள்ளது.
வனத்துறையினர் பாம்பினைப் பிடித்து ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைத்து இருக்கின்றனர். இந்த ஆய்வினை ஆஸ்திரேலிய வடக்கு மாகாண வனவிலங்குகள் ஆணையம் மேற்கொண்டது. இதன் உடல் அமைப்பை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பாம்பின் கபாலப் பகுதியில் மூன்றாவது கண்ணிற்காண நரம்பு அமைப்புகள் இயற்கையாகவே அமைந்திருப்பதை கண்டிருக்கிறார்கள். இந்த அரியவகை பாம்பின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் முதன்முதலில் பதிவிட்டவர்களும் அவர்கள்தான்.

இந்தப் பாம்பு கருவாக இருக்கும் போதே இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இது விலங்கியல் உலகில் மிகவும் சாதாரணம் என்கின்றனர். பாம்பின் மூன்றாவது கண் மற்ற கண்களைப் போலவே செயல்பாட்டில் இருந்திருக்கிறது. அதன் பார்வை பரப்பை அந்த மூன்றாவது கண் விரிய செய்திருக்கிறது. மரபணு மற்றும் வேறு சில இயற்கைக் காரணிகளால் இம்மாதிரியான மாற்றங்கள் விலங்குகளுக்கு ஏற்படுகின்றன. சில சமயங்களில் ஒரு கண்ணுடன் பாம்புகள் பிறந்திருக்கின்றன என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன் புதைப்படிவ ஆராய்ச்சியின் போது சுமார் 49 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான ஊர்வன ஒன்றின் படிமங்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் போது அந்த விலங்கிற்கு நான்கு கண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆக இந்த மூன்று கண் பாம்பு இயற்கையின் வினோத முடிச்சுகளில் ஒன்றுதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.