சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் – முனைப்புடன் களம் இறங்கும் தமிழகம்

0
173

சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் வகையில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் ஒரு திட்ட அறிக்கையைத் தயார் செய்துள்ளது. அரசு சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து புதுப்பிக்கதக்க ஆற்றல்களில் ஒன்றான சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க தமிழக அரசு தற்போது முனைப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்காக தமிழ்நாடு சோலார் எரிசக்தி கொள்கையின் படி, இந்த ஆண்டில் தமிழ்நாடு எரிச்சக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் தங்கள் கருத்துக்களைத் தெரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது .

solar power plant
Credits : Fun kids

சூரிய ஆற்றல் கொள்கை

தமிழக அரசு, சூரிய சக்தி ஆற்றல் உற்பத்திற்காக பல்வேறு ஊக்குவிப்புகளை வழங்கின்றது. இந்த ஊக்குவிப்புகள் சூரிய மின்சக்தி, இன்வெட்டர்கள், பெருகி வரும் கட்டமைப்புகள் மற்றும் மின்கலன்கள் என எந்த வகையில் இருந்தாலும் சூரிய சக்திகளின் உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

ஆனால், இந்த முயற்சிகள் இன்று நேற்று தொடங்கப்பட்டவை அல்ல. கடந்த 2012 – ஆம் ஆண்டே தமிழக அரசால் சூரிய ஆற்றல் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டது. எதிர்காலத்தில் மாநிலத்தின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக சூரிய ஆற்றல் விளங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதையே தான் தற்போது, 2022 – இல் தமிழ்நாட்டில் முக்கியக் காரணியாக சூரிய ஆற்றல் விளங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அறிந்து தெளிக !
உலகின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் தமிழகத்தில் தான் அமைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி என்ற இடத்தில் அமைந்திருக்கும் இந்நிலையம் அதானி பசுமை ஆற்றல் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது.

பசுமை வேலை வாய்ப்புகள்

இந்தத் துறை வளர்ச்சி கணிசமான எண்ணிக்கையில் மக்களுக்குப் பசுமை வேலை வாய்ப்புகளை  வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், 2022 – ஆம் ஆண்டில் தமிழ்நாடு சர்வசே அளவில்  வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாக  இருக்கும் என்றும் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அறிந்து தெளிக !
சூரிய ஆற்றல் மூலம் தமிழ்நாடு 2022 -ஆம் ஆண்டில் 8224 மெகாவாட் மின் சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இந்த இலக்கில் 40 சதவீதம்  சோலார் பேன்கள் மூலம் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய சோலார் கொள்கை

சூரிய மின் அழுத்த ஆற்றல் மற்றும் சூரிய வெப்ப ஆற்றலுடன் தொடர்புடைய திட்டங்கள், நிரல்கள் மற்றும் நிறுவுதல்களுக்கு இந்தப் புதிய சோலார் கொள்கை  ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

வரைவுத் திட்ட கொள்கையின்படி, சோலார் எரிசக்தியின் மூலம் பொதுக் கட்டிடங்களுக்கு 30 சதவீதம்  மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tamilnadu solar plantநிலம் தேர்வு செய்யப்படுகின்றது

சோலார்களைப் பொதுமக்கள் பெற்றுப் பயன்படுத்துவதற்காக மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்திலும் இனி பெரும்பான்மையாக சோலார் மின்சாரம் பயன்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசு வாகனங்களும் 2022 – ஆம் ஆண்டுக்குள் மாற்றி அமைக்கப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க நிலங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.