28.5 C
Chennai
Friday, April 26, 2024

கூகுள் கொண்டாடும் முதலை மனிதன் – டூடுல் வெளியீடு

Date:

ஆஸ்திரேலியாவின் வனவிலங்கு ஆர்வலரான ஸ்டீவ் இர்வினின் 57  வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதத்தில் கூகுள் புதிய டூடுல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. வாழ்நாள் முழுவதும் காட்டுவாழ் உயிரினங்களின் பாதுகாப்பிற்காக உழைத்தவர் இர்வின். விலங்குகள் குறித்த இவரது நிகழ்ச்சிகள் உலகளவில் அதிகமானோரால் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும்.

irvinசிறுவயது ஆர்வம்

இர்வினின் இந்த வன உயிர்கள் மீதான பிரியம் அவரது சிறுவயதிலே துளிர்த்திருக்கிறது. அதற்கு ஒருவகையில் இர்வினின் பெற்றோரும் ஒரு காரணம். இர்வினுடைய ஆறாம் பிறந்தநாள் பரிசாக 11 அடி மலைப்பாம்பை அளித்திருக்கிறார்கள் பெற்றோர். அடுத்தடுத்த பிறந்தநாளில் வீட்டிற்குள் ஒரு குட்டி மிருகக்காட்சிசாலை வைக்கும் அளவிற்கு விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தார் இர்வின். தன்னுடைய ஒன்பதாம் வயதில் முதலைகளுடன் விளையாடத்துவங்கிவிட்டார்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டில் மிருகக்காட்சி சாலை(Beerwah Reptile Park) ஒன்றினை இவரது குடும்பம் ஆரம்பித்தது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை அருகே பாதிப்புக்குள்ளான உப்புநீர் முதலைகளைக் காக்கும் திட்டத்திற்கு தன்னார்வலராகப் போய் சேர்ந்தார்.

பொறுப்பு

தன் குடும்பம் நடத்திவந்த Beerwah Reptile Park என்னும் அமைப்பை Queensland Reptile and Fauna Park என்று பெயர்மாற்றம் செய்தார். பின்னர் தானே அதன் தலைமைப்பொறுப்பை ஏற்று நடத்தத் துவங்கினார். அதுவே பின்னாளில் பிரபலாமான Australia Zoo ஆகும். இவரது சாகசங்களைக் கேள்விப்பட்டு இவரைப்பார்க்க வந்த டெர்ரியுடன் காதலில் விழுந்தார் இர்வின். டெர்ரியும் உடனடியாக ஓகே சொல்லிவிட இருவருக்கும் திருமணமானது.

steve-irvin
Credit: IBTimes UK

முதலைகளுடன் தேன்நிலவு

நீங்கள் படித்தது உண்மைதான். தேனிலவிற்கு இந்த இணை காட்டுக்கு சென்றிருக்கிறது. அங்கு முதலைகளைப் பிடித்து இருவரும் விளையாடினார்களாம். நல்லது. அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைத்தே பின்னர் தி குரோக்கடைல் ஹன்டர் (The Crocodile Hunter) என்னும் தொலைக்காட்சித் தொடரைத் துவங்கினார். 100 நாடுகளில் உள்ள சுமார் 500 மில்லியன் மக்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பிப் பார்த்தார்கள்.

அறிந்து தெளிக!!
எல்செயா இர்வினி (Elseya irwini) என்னும் ஊர்வன ஒன்றினை இவர் கண்டுபிடித்துள்ளார். அதனால் தான் அவருடைய பெயரையே வைத்திருக்கிறார்கள்.

விருதுகள்

2001 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது இர்வினுக்கு அளிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய விருதான Australian of the Year க்கு இவருடைய பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 ஆம் தேதி இர்வினின் சாதனைகளை நினைவுகூறும் விதத்தில் இர்வின் நாள் கொண்டாடப்படுகிறது.

Share post:

Popular

More like this
Related

கங்காரு (Kangaroo) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசியமான தகவல்கள்!

கங்காரு கங்காருக்கள் சக்திவாய்ந்த பின்னங்கால்கள், நீண்ட வலுவான வால் மற்றும் சிறிய...

புதன் கோள் (Mercury) பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரசிய தகவல்கள்!

புதன் கோள் நமது சூரிய குடும்பத்தில் உள்ள மிகச்சிறிய கோள். இது...

ஒட்டகம் (Camel) பற்றிய சுவாரஸ்யமான 8 தகவல்கள்!

ஒட்டகம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது ஒட்டகங்கள் பாலைவனங்களில் வாழும் பெரிய...

வான்கோழி (Turkey) பற்றி பலரும் அறிந்திடாத 10 உண்மைகள்!

வான்கோழி எப்படி இருக்கும்? வான்கோழிகள் கோழியை விட பெரிதாக இருக்கும். சற்று...
error: Content is DMCA copyright protected!