இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் மிகவும் வித்தியாசமானது. இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
பெரிய சுனாமி
கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் (Sulawesi Island) பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 1200 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை அங்கிருந்து ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

எப்படிப்பட்ட நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் என்பது நிலத்தின் அடுக்குகள் கிடைமட்டமாக நகர்வது காரணமாக உருவானது. இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. 2004 – ல் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்பது மேல்கீழாக அடுக்குகள் நகர்வதால் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். இது தான் கடல் நீரை மொத்தமாக வெளியே கொண்டு வந்து கொட்டும். அது தான் அப்போதும் நடந்தது.
என்ன வித்தியாசம்
ஆனால், தற்போது கிடைமட்டமாக ஏற்பட்ட ஒரு நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் இருந்துள்ளது. எப்படி இந்த நிலநடுக்கம் தண்ணீரை வெளியே கொண்டு வந்து கொட்டியது. 5 மீட்டர் வரை எப்படி அலையை உயரச் செய்தது என்று எல்லோரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
பெரிய குழப்பம்
இது சுனாமியை உண்டாக்கக் கூடிய நிலநடுக்கம் கிடையாது என்பதால் தான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு சில நிமிடத்தில் அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. ஆனால், இயற்கை மனிதர்களை எல்லோரையும் ஏமாற்றிவிட்டு சுனாமியை உருவாக்கி உள்ளது.
இது தான் விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது. எப்படி இந்த நிலநடுக்கம் சுனாமியை உண்டாக்கியது என்று அவர்கள் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் கடலுக்கு அடியில் பெரிய மாற்றம் ஒன்று நடந்து இருக்க வேண்டும், அதன் காரணமாகவே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்க வேண்டும் என்று இவர்கள் விவாதம் செய்து வருகிறார்கள்.
இயற்கை எப்போதும் நமக்கென ஒரு ஆச்சரியத்தை வைத்துள்ளது. எப்போதும் யாராலும் துல்லியமாகக் கணிக்க முடியாத விஷயம் இயற்கை.