நமது அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் சீன எல்லையில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. 1954ல், இந்தியா நடத்திய கணக்கீட்டின் படி, எவரெஸ்ட்டின் உயரம் 8,848 மீட்டர் ஆக இருந்தது. 8,848 மீட்டர் என்பதே நேற்று வரையிலும் எவரெஸ்ட்டின் உயரமாக உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. பல்வேறு இயற்கை மாற்றங்கள் மற்றும் 2015ல் இமயமலை அருகில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்பட்டது.
இதனால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவிட நேபாள அரசு முடிவெடுத்தது. 2 வருடங்களுக்கு முன்பு பணிகளைத் துவங்கிய நேபாள அரசிற்கு சீனாவும் உதவியது.

இந்நிலையில் சீனா, நேபாள அரசுகள் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரத்தை நேற்று அறிவித்தன. அதன்படி எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரமானது 8,848.86 மீட்டர் என்று அறிவிக்கப்பட்டது. இது முன்பு இருந்ததை விட சுமார் 3 அடி (0.86 மீட்டர்) அதிகரித்திருக்கிறது.