விடுமுறை காலம் தொடங்கிவிட்டது அனைவருமே சுற்றுலாத் தலங்களுக்கு சென்று வர விடுதிகளை தேடிக் கொண்டு இருப்பீர். இந்த நிலையில் உலகின் மிகவும் காஸ்ட்லியான விடுதி எங்கிருக்கிறது என்பதை பார்ப்போம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது இந்த பெயர்கோ தீவு. பிலிப்பைன்ஸில் இருந்து இந்த இடத்திற்கு வருவதற்கு உங்களுக்கு இரண்டே வழிகள்தான் உள்ளன. ஒன்று பன்வா மாகாணத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வரலாம் இல்லை என்றால் கப்பல் போக்குவரத்து தான்.

அப்படி என்ன இருக்கிறது இதில்?
மொத்தம் ஆறு வில்லாக்கள் இவை போக தனி அறைகளும் உண்டு ஒரே சமயத்தில் 48 நபர்கள் இங்கே தங்கலாம். ஒவ்வொரு வில்லாக்களுக்கும் தனித்தனியே உதவியாளர்கள் உண்டு. நீங்கள் உங்களுடைய ஓய்வு நேரத்தில் மீன் பிடிக்கச் செல்லலாம். நீங்கள் பிடிக்கும் மீனை உங்களுடைய சமையற்காரர் இடம் கொடுத்து சமைக்கவும் சொல்லலாம். இந்த விடுதியின் உள்ளேயே வெந்நீர் குளியல் தொட்டிகள் மசாஜ் சென்டர்கள் என சகல வசதிகளும் உள்ளன

இங்கே பொழுதுபோக்குவதற்கு ஏராளமான அம்சங்கள் உள்ளன. ஒவ்வொரு வில்லாக்களுக்கும் தனித்தனியாக டென்னிஸ் கோர்ட், கோல்ஃப் மைதானம் மேலும் பல உள் விளையாட்டு வசதிகள் இடம் பெற்றுள்ளன சுற்றிலும் கடல் தான் என்பதால் இங்கு விதவிதமான டால்பின் மற்றும் திமிங்கலங்களை பார்க்க முடியும். நீங்கள் சாகச விரும்பிகள் என்றால் உங்களுக்கும் இங்கே ஏராளமான சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஸ்கூபா டைவிங் இங்கே மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

பூமத்திய ரேகைக்கு மிகவும் அருகில் இந்தப் பகுதி அமைந்திருப்பதால் இது வெப்பமண்டல காடுகளின் எல்லா அம்சங்களையும் இங்கே பார்க்க முடியும். இங்கு பல்வேறு நாடுகளிலிருந்து பலவிதமான பறவைகள் கோடை காலத்தின்போது வந்து சேர்கின்றன. மேலும் இங்குள்ள தாவரவியல் அமைப்பும் மிக அற்புதமாக இருப்பதாக இங்கு சென்றுவந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். கட்டணம் என்னதான் ஒரு இரவுக்கு ஒரு லட்சம் டாலர் என்றாலும் இத்தனை அம்சங்களையும் ரசிக்க மக்கள் அங்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.